Saturday 30 December 2023

அண்ணல் நபி அவர்களை அவமதிப்பதற்கான தீர்ப்பு !

ஏந்தல் நபி  ﷺ அவர்களை அவமதிப்பதற்கான தீர்ப்பு : 


புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹு ஸுப்ஹானஹுத்தாலாவிற்கே ! அவனே இறுதி தீர்ப்பு நாளின் அதிபதி . அவனே நம் அனைவரும் ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம்  ﷺ அவர்களது உம்மத்தில் ஒன்றிணைத்து அருள் புரிந்தான்.அவனே முஃமீன்களது உள்ளத்தில் பூமான் நபி  ﷺ அவர்களது மஹப்பத்தையும்,நேசத்தையும் ஊட்டினான். 

ஸலாத்தும் ஸலாமும் ரஹ்மத்துல் ஆலமீன், கத்மே நுபுவ்வத்,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் மீதும் ,அவர்களது பரிசுத்த குடும்பத்தார்கள்,சத்திய தோழர்கள் மீதும்,அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றுவோர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.

ஈமானைப் பற்றிய விளக்கம் : 

ஈமான் என்பது அல்லாஹ்வின் ஹபீப் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டு வந்த எல்லா விஷயங்களிலும் அவர்களை மனதால் உண்மையாக்கி வைப்பதாகும்.அதாவது , 'லா இலாஹா இல்லல்லாஹு வஇன்னீ ரஸூல்லல்லாஹி - வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மதாகிய நான் அல்லாஹ்வின் தூதர்' என்று அவர்கள் சொன்னதிலும், இன்னும் அவர்கள் சொன்ன எல்லா விஷயங்களிலும் அவர்களை மனதால் உண்மையாக்கி வைப்பதாகும். இதற்கு மாற்றம் குஃப்ராகும். அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்ததில் எதைப் பற்றியாவது அவர்களைப் பொய்யாக்குவதாகும்.

நூல் : பைஸலதுத் தப்ரிகா பைனல் இஸ்லமாஇ வஸன்தகா , ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه ,பக்கம் 80.


நபிமார்களைப் பற்றிய இஸ்லாமிய கொள்கை: 


நபிமார்கள் எல்லா சிருஷ்டிகளிலும் மேலானவர்கள். அவர்கள் எல்லோரிலும் எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் வரிசையானவர்கள்.

" நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஆதமையும் ,நூஹையும், இப்ராஹீமையும், அவர்களின் சந்ததிகளையும் ,இம்ரானுடைய சந்ததிகளையும், முழு உலகத்தார்களிலும் உயர்வானவர்களாக தெரிந்து கொண்டான் " 

  • குர்ஆன் 3:33

" அல்லாஹ் நபிமார்களிடத்தில் அறுதிமானம் எடுத்ததை எடுத்துப் பாரும்.நான் உங்களுக்கு வேதத்தையும்,ஹிக்மத்தையும் தருவேன்.பின்னர் உங்களிடம் (மகத்துவமிக்க) ஒரு தூதர் வருவார்.உங்களிடமுள்ளதை ( வேதங்களை) உண்மையாக்கி வைப்பார். நீங்கள் அவசியம் அவரைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும். அவசியம் அவருக்கு உதவி செய்ய வேண்டும்.என்ன ? அப்படியே வாக்குறுதி கொடுக்கிறீர்களா ? என்னுடைய இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்களா? எல்லோர்களும் நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம் என்று ஏற்றுக் கொண்டார்கள். அவன் ( அல்லாஹ்) சொன்னான், நீங்கள் ஒருவர் மற்றொருவருக்கு சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சிகளில் ஆகிறேன்' " .

  • குர்ஆன் 3:81

" நிச்சயமாக அல்லாஹுத்தஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வானவர்களை கானவும், சகல நபிமார்களைக் கானவும் வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றான்" 

நூல் - இமாம் முல்லா அலீ காரீ رَحِمَهُ ٱللَّٰهُ ,ஷரஹு பிக்ஹுல் அக்பர்,பக்கம் 136.

நபிமார்கள் நுபுவ்வத்திற்கு முன்னும்,பின்னும் குப்ரு,ஷிர்க்,கெட்ட கொள்கை முதலியவைகளை விட்டும் பெரும்பாலும், சிறு பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். அல்லாஹ் சொல்கிறான், " ஏ இபுலீசே ! என்னுடைய சொந்த அடியார்கள் பேரில் உனக்கு அதிகாரம் இல்லை" .

  • குர்ஆன் 15-41

இப்லீஸ் தானும் சொல்கின்றான், " அவர்கள் எல்லோரையும் வழிகெடுத்து போடுவேன், அவர்களில் கலப்பற்ற உன்னுடைய அடியார்களைத் தவிர " 

  • குர்ஆன் 15-40

எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வஹீ வருவதற்கு முன்னும் பின்னும் ஒரு கணமும் கூட பெரும் பாவமும் சிறு பாவம் செய்யவில்லை என்பதில் ஒருவருக்கு கூட ஆட்சேபனை இல்லை என்று இமாமுல் அஃலம் இமாம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் தமது பிக்ஹுல் அக்பர் எனும் நூலில் சொன்னார்கள் .

நூல் - தப்ஸீர் அஹ்மதிய்யா மேற்கண்ட ஆயத்திற்கான விரிவுரை.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசினவன்,அவர்கள் பேரில் குறை சொன்னவன்,அல்லது அவர்கள் அளவிலோ,அவர்கள் வம்சத்திலோ,அல்லது அவர்கள் மார்க்கத்திலோ,அல்லது அவர்களது குணங்களிலேயாயினும் குறைபாட்டை சேர்த்தவன்,அல்லது அவர்களை ஏசுவதற்காக,ஏளனம் செய்வதற்காக சாடை செய்தவன்,அவர்களின் கண்ணியத்தை குறைத்துப் பேசினவன், அத்தனைப் பேர்களும் அவர்களை ஏசியவர்களே ஆவார்கள்.இவர்களுக்கு மார்க்கத் தீர்ப்பாகிறது,இவன்களை வெட்ட வேண்டும் என்பதே " .

நூல் - கிதாபுஷ் ஷிபா ,இமாம் காழீ இயாழ் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ ,பாகம் -2 , பக்கம் 233

உலமாக்கள் எல்லோரும் ஏகோபித்திருக்கிறார்கள்.நாயகம்  ﷺ அவர்களை ஏசியவன்,குறைவாகக் கண்டவன் காபிராகும்.அவன் பேரில் அல்லாஹ்வின் அதாபு இறங்கும். அவன் விஷயத்தில் மார்க்கத் தீர்ப்பாகிறது,அவனை வெட்ட வேண்டும் என்பதே.எவனாவது அவன் காபிர் என்பதிலோ,அவனுக்கு அதாபு உண்டு என்பதிலோ சந்தேகம் வைப்பானேயானால் அவனும் காபிராகிவிடுகிறான் " 

நூல் - கிதாபுஷ் ஷிபா ,இமாம் காழீ இயாழ் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ ,பாகம் -2 , பக்கம் 234.

நூல் - அல்ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்புர்ரஸூல் ,அஷ்ஷெய்குல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் நூரி ஸித்தீகி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز,இள்ஹாறுல் ஹக் ,பக்கம் - 11,28-32.

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , 


من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان

" எவரொருவர் அல்லாஹ்விற்காக நேசம் கொள்கிறாரோ,அல்லாஹ்விற்காக பிறரை வெறுக்கின்றாரோ,அல்லாஹ்வின் வழியில் செலவு செய்கின்றாரோ,அல்லாஹ்விற்காக பின்வாங்குகின்றாரோ, அவர் தமது ஈமானை பூரணமாக்கிக் கொண்டார் " 

நூல் : அபூதாவூத் ,பாகம் 2,பக்கம் 632,ஹதீஸ் எண் # 4681

ஏந்தல் நபி  ﷺ அவர்களை அவமதிப்பவனுக்கான தண்டனை :

  • கண்மணி நாயகம்  ﷺ அவர்களை அவமதித்தவன் காபிர் என்னும் தீர்ப்பு,சொல்லப்பட்ட வெளிரங்கமான வார்த்தைகளைப் பொறுத்ததே ,அதில் அவனது நிய்யத்தை (மனதில் உள்ள எண்ணமோ) ,அவமதிப்பு செய்தவனின் நோக்கம் அல்லது அந்த சூழல் என்பது குறித்த பேச்சுக்கே இடம் கிடையாது. 

  • நூல் : இமாம் ஷிஹாபுத்தீன் கப்பாஜி ஹனபி رَحِمَهُ ٱللَّٰهُ , நஸீமுர் ரியாழ் ஷரஹ் ஷிபா,பாகம் 4,பக்கம் 426.


  • கண்மணி நாயகம்  ﷺ அவர்களைக் குறித்து ஒரு மனிதன்( முஸ்லிம்) எவ்வகையிலும் அவமரியாதையாக பேசினால் ,அவன் காபிராகி விடுவான்.சில உலமாக்களிடத்தில்,பூமான் நபி  ﷺ அவர்களது பரக்கத் பொருந்திய புனித தலைமுடியைக் குறித்தேனும் அவமரியாதையாக பேசினால் அவன் காபிராகிவிடுவான்.

  • நூல் : இமாம் பக்ருத்தீன் ஹசன் அல்பர்கானி رَحِمَهُ ٱللَّٰهُ, பதாவா காழீ கான்,பாகம் 4,பக்கம் 882

  •  ஒரு முஸ்லிம் பூமான் நபி  ﷺ அவர்களை அவமதிப்பு செய்தாலோ அல்லது நபிகளாரைப் பற்றி பொய் உரைத்தாலோ அல்லது பூமான் நபி  ﷺ  அவர்களைப் பற்றி குறை கூறினாலோ அல்லது அவர்களது கண்ணியத்தைப் பறித்தாலோ, அவர் அல்லாஹ்  سبحانه و تعالى விற்கு  எதிராக குப்ரான செயலைச் செய்கிறார்.

  • இமாம் அபூ யூசுப் رَحِمَهُ ٱللَّٰهُ ,கிதாப் அல் கிராஜ்,பக்கம் 182


  • சத்தியமாக பூமான் நபி  ﷺ அவர்களை அவமரியாதை செய்தவன்,அவர்கள் பேரில் குறை சாட்டுபவன்,அவர்களது குடும்பத்தார் பேரில் குறை கூறுபவன்,அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில்,அவர்களது பரிசுத்த குணபாடுகளில்,அவர்களை நிந்தித்தவன்,அல்லாஹ்வின் ஹபீப் முஸ்தபா  ﷺ அவர்களின் ஆளுமை மற்றும் கௌரவத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எந்தவொரு குறைபாடுள்ள விஷயத்துடனும் ஒப்பிடுபவன்,சத்தியமாக அவன் தவறானவன் ,மரணதண்டனைக்கு ஆளாக வேண்டியவன்.இந்த தீர்ப்பு அவமரியாதை வேண்டுமென்று எண்ணத்துடன் செய்யப்பட்டதா அல்லது அவ்வகையான எண்ணமில்லையா ,என்பது குறித்த விதிவிலக்கு அல்லாதது. இதுவே ஸஹாபா பெருமக்களது காலம் தொட்டு இன்றுவரை உள்ள இஸ்லாமயி உம்மத்தின் எல்லா உலமாக்களது தீர்ப்புமாகும்.

  • இமாம் காழி இயாழ் رَحِمَهُ ٱللَّٰهُ ,கிதாபுஷ் ஷிபா,பாகம் 2,பக்கம் 214.

  • இமாம் அபூஹப்ஸ் அல் கபீர் رضي الله عنه அவர்களைக் கொண்டும் அறிவிக்கப்படுகின்றது,யாராகிலும் பூமான் நபி  ﷺ அவர்களது புனிதமான திருமுடி குறித்து குறைவுபடுத்தினால் அவன் காபிராகி விடுவான்.இமாம் முஹம்மது رضي الله عنه அவர்கள் தமது "மப்ஸூத்" என்னும் கிரந்தத்தில் எழுதுகின்றார்கள் பூமான் நபி  ﷺ அவர்களை அவமரியாதை செய்வது குப்ரான செயலாகும்.


  • ஈருலக இரட்சர் கண்மணி முஹம்மது முஸ்தபா  ﷺ அவர்களையோ அல்லது மற்ற நபிமார்களையோ அவதூறாகப் பேசுபவன் காஃபிர் ,அவன் இச்செயலை இது மார்க்க விதிகளுக்கு உட்பட்டதா,இல்லையா என்று கருத்தில் கொண்டு செய்தாலும் என்று, ஒட்டுமொத்த உம்மத்தும் ஒருமனதாகக் கூறுகிறது என்பதில் ஐயமில்லை.உலமாக்களின் கருத்துப்பிரகாரம் அவன் காபிர்.இன்னும் அவனது குப்ரை சந்தேகப்படுபவனும் காபிர்.

  • இமாம் முஹம்மது இப்னு அலீ வல்லாவி رَحِمَهُ ٱللَّٰهُ ,ஷரஹு ஸனன் நஸயீ தாகிரத் அல் உக்பா,பக்கம் 240.

  • பதாவா ஆலம்கீரியில் சொல்லப்பட்டுள்ளதாவது வெளிப்படையான,குழப்பமில்லாத சொற்களுக்கு தஃவீல் கேட்கப்படாது. பதாவா குலாஸா,புஸூல் இமாதியா,ஜாமிஅல் புஸுலின்,பதாவா ஹிந்தியாவில் கூறப்பட்டுள்ளது : தன்னை ரஸூல் என்று பிரகடனம் செய்பவன்,அல்லது பார்சி மொழியில் 'பைகம்பர்' என்று பிரகடனப்படுத்துபவன் ,பின்னர் தான் பிறரது தூதை எத்தி வைக்கும் தூதர் என்ற கருத்தில் தான் கூறினேன் என்று சொன்னால்,அவன் காபிராகி விட்டான்.

  • பதாவா ஹிந்தியா,பாகம் 2,பக்கம் 263


  • இமாம் காழி இயாழ் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள்,இமாம் சஹ்னூன் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மாணவர், இமாம் அஹ்மது பின் அபூஸுலைமான் அவர்களிடம் ,ஒரு மனிதனிடம் " அல்லாஹ்வின் தூதரின் பெயரால்" என்ற கூறப்பட்ட பொழுது,அதற்கு பதிலுரைக்கும் வண்ணம் "அல்லாஹ் ரஸூல்லல்லாஹ்வை இங்கனம் செய்வானாக" என்று கூறி அவமரியாதையான சொற்களை கூறினான்.அதற்கு அவனிடம் ," அல்லாஹ்வின் எதிரியே ! ரஸூல்லல்லாஹ்வைப் பற்றி என்ன கூறுகின்றாய்" என்றதும்.அவன் மேலும் கடுமையான வார்த்தைகளைப் பிரோயாகித்து ,பின்னர் கூறினான் ," நான் ரஸூல்லல்லாஹ் என்று கூறியது தேளை" என்றான்.இமாம் அஹ்மது பின் அபூஸுலைமான் அவர்கள் , " அவனுக்கு மரண தண்டனை கிடைக்கவும், உங்களுக்கு வெகுமதி கிடைக்கவும் அவனுக்கு எதிராக சாட்சி கூறுங்கள். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் " என்று பதில் உரைத்தார்கள்.( அதாவது, அவனுக்கு எதிரான ஆதாரத்தை முஸ்லிம் நீதிபதியிடம் கொடுங்கள், மேலும் அந்த நீதிபதியை மரண தண்டனைக்கான தீர்ப்பை வழங்கவும், அதற்கான வெகுமதியைப் பெறவும் முயற்சிப்பேன்.) இமாம் ஹபீப் பின் ராபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இதன் காரணத்தை விளக்கும் போது வெளிப்படையான வார்த்தைகளுக்கு தஃவீல் கேட்கப்படாது என்பதால் என்று கூறினார்கள்.

  • இமாம் காழி இயாழ் رَحِمَهُ ٱللَّٰهُ ,அஷ் ஷிபா ,பாகம் 2,பக்கம் 209

  • இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள்,அம்மனிதன் தான் தேளினைத்தான் கூறியதாக சொன்னது - அவன் ரிஸாலா என்பதன் வெளிரங்க அர்த்தமான தேள் அல்லாஹ்வால் மனிதர்களுக்கு அனுப்பப்பட்டது என்பதன் தாவா- இத்தகைய தஃவீல் ஷரீஅத்தில் நிராகரிக்கப்பட்டதாகும்.

  • ஷரஹ் ஷிபா முல்லா அலீ காரி நஸீமுர் ரியாழ்,பாகம் 4,பக்கம் 343.

  • அல்லாமா ஷிஹாபுத்தீன் கப்பாஜி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் ,நிச்சயமாக அந்த மனிதன் கூறிய அவ்வார்த்தையின் வெளிரங்க அர்த்தம் உண்மையானது தான் ,அதனை மறுப்பது பிடிவாதமாகும்.இருப்பினும், அந்த நபர் இந்த அர்த்தங்களை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்ற அவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்படாது, ஏனெனில் இந்த தஃவீல் மிகவும் தவறானது.ஒருவன் தன் மனைவியிடம் நீ தாலிக் என்று சொல்லிவிட்டு, நான் சொன்னது அவள் கட்டியணைக்கப்படாமல் திறந்திருக்கிறாள் என்று விளக்கம் கொடுப்பது போல, வார்த்தையின் அர்த்தத்தை அதன் வெளிப்படையான அர்த்தத்திலிருந்து திரிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.இதரதகைய தஃவீல் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்படாது ,இன்னும் அவனை பிதற்றுபவன் என்றே கருதப்படும்.

  • நஸீமுர் ரியாழ் ஷரஹுஷ் ஷிபா ,பாகம் 4,பக்கம் 343.

இந்த தலைப்பில் சத்திய உலமாக்களின் எண்ணற்ற கூற்றுகளை மேற்கோளிட முடியும்.இதில் தீர்ப்பு ஒன்றே.கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் குறித்து ஒரு அவமரியாதையான சொல் ,எத்தகைய சூழ்நிலையிலும்,வேண்டுமென்றே என்றாலும் இல்லாவிட்டாலும் ,குப்ரில் கொண்டு சேர்க்கும்.

ஈமான் கொண்ட சகோதர்களே ! அண்ணல் நபி  ﷺ அவர்களது முஹப்பத்தையும் ,கண்ணியத்தையும் கொண்ட உள்ளத்தில் ஈருலக இரட்சர் எம்பெருமானார்  ﷺ அவர்களது கண்ணியத்தை குறைக்கும் சொற்களை எங்கனும் ஏற்றுக் கொள்ளும் ,தாங்கிக் கொள்ளும் ? 

இவ்வுலகில் பரிபூரண ஈமானுடன் வாழவும் ,இவ்வுலகை விட்டு பிரியும் பொழுது ஈமான் ஸலாமத்துடன் விடைபெறும் தவ்பீக்கை அல்லாஹ்  سبحانه و تعالى நம்மனைவருக்கும் அளிப்பானாக ! 


آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم    

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...