Wednesday 28 August 2024

இஸ்திகாஸா

🌹 இஸ்திகாஸா 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ( மறைவு - ஹிஜ்ரி 957 ) தமது காலத்தின் மாபெரும் முஹத்திஸாகவும் ,ஷாபிஈ மத்ஹபின் முப்தியாகவும் திகழ்ந்தார்கள். அன்னார் ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜக்கரிய்யா அன்சாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பிரதான மாணவர் ஆவார்கள்.அன்னாரது ஹதீத் இஸ்னதுகள் அவர்களது ஆசிரியர் மூலம் வருகின்றன.

மேலும் அன்னார் ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ ,ஹாபிழ் இமாம் ஸக்காவி رَحِمَهُ ٱللَّٰهُ ஆகியோரிடமும் கற்றவர்கள் ஆவார்கள்.மம்லுக் ஸுல்தான்களின் ஆட்சிகாலத்தில் மிஸ்ரின் தலைமை முப்தியாவும்,ஜாமியா அல்-அஸ்ஹரின் தலைமை இமாமாகவும் சேவையாற்றினார்கள்.

இஸ்லாமிய உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் கல்வி தாகம் கொண்ட மாணவர்கள் அன்னாரிடம் கல்வி பயில வந்தனர்.அக்காலத்தில் பெரும்பாலான ஷாபிஈ பிக்ஹின் மாணவர்கள் ஒன்று அன்னாரது மாணவர்களாகவோ அல்லது அவர்களது மாணவர்களின் மாணவராகவோ இருந்தனர்.

அன்னாரது புகழ்பெற்ற மாணவர்கள்

கல்லுடைந்தாலும் சொல்லுடையாத ஷெய்குல் இஸ்லாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ
இமாம் ஷஃரானி رَحِمَهُ ٱللَّٰهُ
இமாம் கதீப் ஷிர்பினி رَحِمَهُ ٱللَّٰهُ
இமாம் ஷம்ஷுத்தீன் ரமலி رَحِمَهُ ٱللَّٰهُ ( மகனார்) 

இத்தகைய பெருங்கொண்ட மேதை எழுதுகின்றார்கள் ,

" அன்பியாக்கள் , வலிமார்கள்,மற்றும் ஸாலிஹீன்களிடம் உதவி தேடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.ஏனெனில் நல்லடியார்களான இம்மக்கள் இவ்வூலகை விட்டு துறந்த பின்னரும் நமக்கு உதவி புரிந்திட இயலும் ,அவர்களது முஃஜிஸாத் என்னும் அற்புதங்கள் அவர்கள் மறைந்த பின்னர் நின்றுவிடுவதில்லை " 

 📚   பதாவா ரமலி ,பக்கம் 740

Monday 26 August 2024

மரணித்த பின்னர் உதவி தேடுவது !

இமாம் பைஹகீ رضي الله عنه அவர்கள் ,நாயகத் தோழர்களான சஹாபா பெருமக்களை கண்ட ஸலபுஸ் ஸாலிஹீன்களான தாபஈ ஒருவர் நவின்றார்கள் , " எங்களுடன் மதீனா முனவ்வராவில் ஒரு நபர் இருந்தார். அவர் எப்பொழுது தன் கைகளால் தடுக்க இயலாத பாவமான காரியத்தை கண்டால் ,பூமான் நபி  ﷺ அவர்களது சங்கைமிகும் ரவ்ழா ஷரீபிற்கு சென்று , ' அஹ்லே கப்ருவாசிகளே ! உதவி புரிபவர்களே ! தயை கூர்ந்து எங்களின் மீது ஆட்சி செய்பவர்களது (செயல்களை) தயை கூர்ந்து பாருங்கள் . என்று கூறுபவராக இருந்தார் " 

📚 ஷுஅபுல் ஈமான் ,ஹதீஸ் எண் : 3879

Related Posts Plugin for WordPress, Blogger...