ஹழ்ரத் ஸெய்யிதினா முஆத் பின் ஜபல் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,கண்மணி நாயகம் ﷺ அவர்கள் நவின்றார்கள் , " அல்லாஹ் سبحانه و تعالى ஷஃபான் மாதத்தின் இரவில் தன் அடியார்களை நெருங்கி வருகின்றான்.இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோரது பாவங்களையும் மன்னிக்கின்றான் "
ஆதாரங்கள் :
📚 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ,பாகம் 12,பக்கம் 479,ஹதீஸ் # 5665
📚இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் கபீர்,பாகம் 20,பக்கம் 108,ஹதீஸ் # 215.
📚 இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் அவ்ஸாத்,பாகம் 07,பக்கம் 36,ஹதீஸ் # 6776.
📚 இமாம் தப்ரானீ,அல் முஸ்னத் ஷாமியீன்,பாகம் 1,பக்கம் 128,ஹதீஸ் # 203.
📚 இமாம் தாரகுத்னீ ,நுஸுல்,பாகம் 01,பக்கம் 58,ஹதீஸ் # 77
📚 இமாம் பைஹகீ ,ஷுஅபுல் ஈமான்,பாகம் 9,பக்கம் 24,ஹதீஸ் # 6204
📚 இமாம் பைஹகீ,பழாயில் அல் அவ்காத்,பாகம் 01,பக்கம் 22,ஹதீஸ் # 22
📚 இமாம் அபூநுஐம் இஷ்பஹானி ,ஹில்யதுல் அவ்லியா,பாகம் 5,பக்கம் 191
📚 மறுப்பாளர்களது தலைவர் -இமாமுல் வஹாபியா,நஸீருத்தீன் அல்பானி ,ஸில்ஸிலா அல் ஹதீஸ் அல் ஸஹீஹ்,பாகம் 3,பக்கம் 135,ஹதீஸ் # 1144.
இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதை ஷஃபான் மாதத்தில் அல்லாஹ் سبحانه و تعالى தனது அடியார்களை மன்னிப்பது தொடர்பான அறிவிப்பு என்ற பாடத்தில் வைத்துள்ளார்கள்.
ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி அஷ்ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " முஜம் அல் கபீர் மற்றும் முஜம் அல் அவ்ஸாதில் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் பதிவு செய்துள்ள இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடர் 'திகா' வாகும் "
📚 மஜ்முஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 126,ஹதீஸ் # 12860
இமாம் இப்னு ரஜப் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் இந்த ஹதீத் ஸஹீஹானது என்று எழுதுகின்றார்கள்.
📚 லதாயிப் அல் மவாரிப்,பாகம் 01,பக்கம் 224
No comments:
Post a Comment