*மிஃராஜ் நோன்பின் சிறப்பும்*
*மார்க்க அறிஞர் பெருமக்களின் கூற்றும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
📌وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ عَنِ النَّبِي ﷺِّ قَالَ مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
واحياء علوم الدين : ١/٣٢٨
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
யார் ஒருவர் ரஜப் மாதம் 27-ம் நாள் நோன்பு நோற்கிறாரோ
அவருக்கு 60 மாதம் நோன்பு நோற்ற கூலி எழுதப்படும்
நூல்: ஃகுன்யத்துத் தாலிபீன்- கவ்துல் அஃலம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி قدس الله سره العزيز, இஹ்யாவுலூமுத்தீன் - ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه
📌 ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح
ابن قاسم 158)
திங்கள்கிழமை, வியாழக்கிழமை மற்றும் மிஃராஜ் தினம் ஆகிய நாள்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பர்மாவி அலா ஷறஹி இப்னு காஸிம்
📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: இஆனதுத் தாலிபீன்
📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பாஜுரி
📌 ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله - برماوي
حاشية الجمل ٢/٣٤٩
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்:ஹாஷியத்துல் ஜமல்
📌وَيُسْتَحَبُّ صَوْمُ يَوم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨
📌 وَالبَاجُورِي: ١/٣٩٢
📌وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥)
மிஃராஜ் தினம்
நோன்பு நோற்பது
சுன்னத்தாகும்
நூல்: ஃபத்ஹுல் அல்லாம், பாஜுரி,
ஃபதாவஷ் ஷாலியாத்தி
மிஃராஜ் நோன்பு சுன்னத் என்பதற்கான
ஃபிக்ஹு நூற்களின் ஆதாரங்கள்..
1) ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح ابن قاسم 158)
2) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)
3) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)
4) ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله - برماوي
حاشية الجمل ٢/٣٤٩
5)
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ عَنِ النَّبِي ﷺِّ قَالَ مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
6 ) واحياء علوم الدين : ١/٣٢٨
7) وَيُسْتَحَبُّ صَوْمُ يَوْم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨
8 ) وَالبَاجُورِي: ١/٣٩٢
9) وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥)
மிஃராஜ் நோன்பின் நிய்யத்
*சுன்னத்தான மிஃராஜ் நோன்பை நோற்கிறேன்*
களாவான நோன்பு இருந்தால்...
*களாவான ரமளான் நோன்பையும், சுன்னத்தான மிஃராஜ் நோன்பையும் நோற்கிறேன் என்று நிய்யத் செய்யவும் ..
*மிஃராஜ் பயணம்*
•┈•✿❁ ﷽ ❁✿•┈•
கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்த பதினொன்றாம் வருடம் ரஜப் மாதம் பிறை 27 ஆம் நாளன்று திங்கட்கிழமை நாயகம் ﷺ அவர்களது பாட்டனார் அபூதாலிப் அவர்களுடைய மகளார் உம்மு ஹானிஃ என்பவருடைய வீட்டில் துயில் கொள்ளும் போது வானவர் கோமான் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தலைமையில் ஒருசில மலக்குமார்கள் வருகை புரிந்தார்கள்.பின்னர் நாயகம் ﷺ அவர்களை ஜம்ஜம் கிணற்றுக்கு அருகாமையில் கொண்டு சென்று பூமான் நபி ﷺ அவர்களுடைய திரு இதயத்தை எடுத்து ஜம் ஜம் நீரால் கழுவி அதில் இறை ஞானத்தை நிரப்பினார்கள்.
பின்னர் மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து பைத்துல் முகத்தஸை நோக்கியுள்ள பயணம்.இடையில் பேரீத்தம் பழ மரங்கள் நிறைந்த ஓர் இடத்தை அடைந்தார்கள்.ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் அந்த இடத்தில் இறங்கி தொழுமாறு கேட்டுக் கொண்டார்கள். நாயகம் ﷺ அவர்கள் இறங்கி தொழுகை நடத்தி திரும்பி வந்தார்கள்.பின்னர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் நாயகமே! தாங்கள் தொழுத அந்த இடம் எதுவென்று அறிவீர்களா..?
நாயகம் ﷺ அவர்கள் : இல்லை...
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) : அதுதான் தாங்கள் ஹிஜ்ரா பயணம் வருவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்த தைபா (மதீனா) என பதிலளித்தார்கள்.
{ நூல் : அல் அன்வார் }
No comments:
Post a Comment