Friday, 8 March 2024

உம்மத்தின் அமல்களை காணும் ஏந்தல் நபி  ‎ﷺ ‏

🌹திருநபி  ﷺ அவர்களது சங்கைமிகும் சமூகத்தில் உம்மத்தின் அமல்கள் 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ஆசிரியப் பெருந்தகை இமாம் நூருத்தீன் ஹைத்தமீ ஷாபிஈ அஷ்அரீ மிஸ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ( மறைவு - ஹிஜ்ரி 807)  , தமது ஹதீது கிரந்தந்தில் பதிவு செய்துள்ளார்கள்,

ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அண்ணல் எம்பெருமானார்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " என்னுடைய பிறப்பும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கின்றது, துன்யாவை விட்டும் என்னுடைய மறைவும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கும்.உங்களுடைய அமல்கள் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றது. அவை நல்லமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى வை புகழ்ந்து ,நன்றி செலுத்துகின்றேன்.தீய அமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى விடத்தில் அதனை மன்னித்துவிடக் கோரி துஆ செய்கின்றேன். " 

📚 மஜ்மஉஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 427,ஹதீஸ் # 14250 

மிஸ்ரில் பிறந்த இமாம் நூருத்தீன் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,ஷெய்குல் இஸ்லாம் இமாம் தகீயுத்தீன் சுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மாணவர் இமாம் ஹாபிழ் ஜைனுத்தீன் இராக்கி ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஹதீதுக் கலையைக் கற்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...