*அய்மா ஏ அர்பாக்களது அகீதா*
இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்கப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்கள் முதலாவது ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه ,பின்னர் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه ,அதன் பின்னர் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه , அதன் பின்னர் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் رضي الله عنه ".
📚 *பிக்ஹுல் அக்பர்*
இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் கிலாபத் குறித்தும் அப்தழியத் குறித்தும் நவின்றார்கள் ,
" நமது வரிசைப்பிரகாரமாகிறது அபூபக்கர் رضي الله عنه ,உமர் رضي الله عنه , உஸ்மான் رضي الله عنه ,அலீ رضي الله عنه " .
📚 *அல் இக்திகாத்,இமாம் பைஹகீ* رضي الله عنه
இமாம் மாலிக் رضي الله عنه அவர்களிடம் ஷெய்கன்களது அப்தழியத் குறித்து வினவப்பட்ட பொழுது அன்னார் , " ஸெய்யிதினா அபூபக்கர், மற்றும் ஸெய்யிதினா உமர் ஆகியோரது அப்தழியத் குறித்து சிறிதும் சந்தேகம் இல்லை " என்று நவின்றார்கள்.
📚 *ஷரஹ் உஸுல் இக்திகாத் அஹ்லுஸ் ஸுன்னா*
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களிடம் ஸஹாபா பெருமக்களை நேசிப்பதாக கூறி அவர்களிடையே தரஜாக்களில் பாகுபாடு மாட்டேன் என்று கூறும் நபர் பற்றி கேட்கப்பட்டது . அன்னார் , " குலபாயே ராஷிதீன்களது வரிசைப்பிரகாரம் அபூபக்கர் رضي الله عنه , உமர் رضي الله عنه ,உஸ்மான் رضي الله عنه மற்றும் அலீ رضي الله عنه ஆகியோருக்கு முன்னுரிமை அளிப்பது ஸுன்னத் " என்று நவின்றார்கள்.
📚 *அல் ஸுன்னாஹ் இப்னு ஹிலால்*
இதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தின் கொள்கை.இதற்கு மாற்றமாக கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்குப் பின்னர் தலைசிறந்தவர்கள் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் كرم الله وجهه என்பவர்கள் வழிகெட்ட கொள்கையினர் ஆவர்.
No comments:
Post a Comment