அரூபியான அல்லாஹ் ﷻ அகிலத்தில் தனக்குப் பிரதிநிதியாகச் சொரூபியான ஸெய்யிதுனா அபுல் பஷர் ஆதம் عليه السلام
அவர்களை உண்டாக்கினான் .
إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
[ஸஹீஹ் புஹாரி ,எண் - 6137 ]
"லாயஸாலு அப்தீ ... என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களையும் விருப்புடன் பேணிச் செய்பவனாக நீங்கா வண்ணமாகி எனது முடுக்குதலை பெறும் வண்ணம் நெருங்கி நான் அவனை நேசிக்கும் அளவுக்கு அகிவிடுகின்றான் .. " என்ற ஹதீது குத்ஸியின் படி ஆதம் عليه السلام அவர்கள் குர்பூ- பறாயிலு , குர்பூ-நவாபிலு அமல் செய்து நிறப்பமானபடியால் அல்லாஹ் ﷻ வுக்கு கலீபாவாயிருந்து ,உலகத்தின் காரியாதிகளை நடத்தி வந்திருக்கின்றார்கள் . அவர்களில் நின்றுமே பஷரிய்யதென்னும் மனுவர்க்கம் இறுதித் தீர்ப்பு நாள் பரியந்தம் வெளியாகிக் கொண்டே வருகின்றது.
ஸெய்யிதுனா அபுல் பஷர் ஆதம் عليه السلام அவர்கள் உள்ரங்கத்தில் விலாயத்தும் வெளிரங்கத்தில் நுபுவ்வத்தும் உடையவர்களாயிருந்தார்கள் . அவர்களுக்குப் பிறகு பல நபிமார்கள் வெளியாகி இறுதி நபியாக எம்பெருமானார் ﷺ அவர்கள் தோன்றினார்கள் . எம்பெருமானார் ரஸூலே கரீம் ﷺ
நுபுவ்வத்தாகிய நபித்துவத்தில் தொடர்பு முடிவடைந்து விட்டபடியால் ஒவ்வொரு காலத்திலும் நபியின் பிரதிநிதியாக ஒருவர் நியமனமாகின்றார் .அத்தகையவர் யுகமுடிவு நாள் வரை ஏற்பட்டுக் கொண்டேயிருப்பர் . அவரே ஆண்டவனுக்கு முடுகுதல் பெற்ற வலி,கூட்டத்தினருக்கு இமாம் ,ஒரே நேர்வழி காட்டக்கூடிய ஹாதியும் மஹ்தியுமாவார் . வலது ,இடது இரு பக்கங்களிலும் அன்னாருக்கு அமைச்சர்கள் இருக்கின்றனர் .அவர்களும் வலிமார்களாவே இருக்கின்றனர் என்பதாக மவ்லானா முஹம்மது ஜலாலுதீன் ரூமி رضي الله عنه அவர்கள் மஸ்னவி ஷரீபில் குறிப்பிட்டுள்ளார்கள் .
'அல்லாஹ் ﷻ நபிமார்களுக்கு தந்து திருவசனமாகிய வஹியைக் கொண்டு பயிற்சி அளித்தான் . அவ்லியாக்களுக்கு தெய்வீக உதிப்பாகிய இல்ஹாமைக் கொண்டு பயிற்சி அளிக்கிறான் . அவ்லியாக்கள் நபிமார்களுடைய நிருவாகப் பொறுப்பாளர்களாவும் ,பிரதிநிதிகளாகவும் ,வாரிசுகளாகவும் ஊழியர்களாகவும் இருக்கின்றார்கள் .இத்தகைய நல்லடியார்களே உலகப் பிரஜைகளுடையவும் ,உலகத்துடையவும் காரியஸ்தர்களாகவும் உலகத்தை நிலைப் பெறச் செய்பவர்களாவும் இருக்கின்றார்கள் . அவர்களைக் கொண்டே உலகமும் நிலை பெற்றிருக்கின்றது .அவர்கள் சிருஷ்டியை ஆளுபவர்களாகவும் ,மெய் பொருளின் பிரதிநிதிகளாகவும் இருப்பது புறத்தோற்றத்தில் அன்று உள்ரங்கத்திலேயாம் ' என்பதாக மஹ்பூபே ஸுப்ஹானி,மஹ்ஷுக்கே ரஹ்மானி ,கிந்திலே நூரானி தாஜுல் அவ்லியா ஸெய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
رضي الله عنه அவர்கள் பத்ஹுர் ரப்பானியில் உபதேசித்துள்ளார்கள் .
'அன்னாரே சர்வ இரட்சகர் ,அன்னாரைப் பொறுத்தே சகல லோகக் காரியாதிகளெல்லாம் சுற்றியாடுகின்றன ,அண்ணரைக் கொண்டே அல்லாஹ் ﷻ உலகங்களைக் காக்கின்றான் . அன்னாரே மஹ்தீ என்றும்,காத்தமுல் அவ்லியா என்றும் சொல்லப்படும் .அன்னவர் காலத்தில் அன்னார் தான் காத்தமுல் அன்பியா ,ஸெய்யிதுனா முஹம்மது ﷺ அவர்களின் பதவியாகிய மகாமுன் மஹ்மூதாவில் தரிப்பட்டிருப்பவர் .அன்னாரே கலீபதுல்லாஹ் என்ற தெய்வப் பிரதிநிதியாக இருக்கின்றார் ' என்பதாக ஆரிபு ரப்பானி ஹழ்ரத் ஸெய்யிது அப்துல் கரீம் ஜீலி رضي الله عنه அவர்கள் இன்ஸான் காமில் நூலில் கூறுகிறார்கள் .
No comments:
Post a Comment