இறைநேசர்களான வலிமார்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடுவதில்லை ! உடல்களும் நசிப்பதில்லை , ஜீவியத்தில் இருப்பது போலவே கபூரிலும் சடலம் கோர்வை குலையாமலிருக்கும் .
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا الحسين بن علي عن عبد الرحمن بن يزيد بن جابر عن أبي الأشعث الصنعاني عن أوس بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي فقال رجل يا رسول الله كيف تعرض صلاتنا عليك وقد أرمت يعني بليت قال إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء
[இப்னு மாஜா வால்யூம் 1,ஹதீத் 1626]
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اﷲِ صلي الله عليه وآله وسلم : إِنَّ مِنْ أَفْضَلِ أَيَامِکُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيْهِ خُلِقَ آدَمُ، وَفِيْهِ قُبِضَ وَفِيْهِ النَّفْخَةُ، وَفِيْهِ الصَّعْقَةُ فَأَکْثِرُوْا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيْهِ، فَإِنَّ صَلَاتَکُمْ مَعْرُوْضَةٌ عَلَيَّ، قَالَ : قَالُوْا : يَا رَسُوْلَ اﷲِ! کَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْکَ وَقَدْ أَرِمْتَ؟ يَقُوْلُوْنَ : بَلِيْتَ قَالَ صلي الله عليه وآله وسلم : إِنَّ اﷲَ حَرَّمَ عَلَي الْأَرْضِ أَجْسَادَ الْأَنْبِيَاءِ
[அபூதாவூத் வால்யூம் 2,ஹதீத் 1526]
'அன்பியாக்களுடைய உடல்களை தின்பதை இறைவன் நிச்சயாமாக பூமிக்கு ஹராமாக்கிவிட்டான் ' என்று நபிகரீம் ﷺ திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹதீது அபூதாவூது ,இப்னு மாஜா ,பைஹகீ முதலிய ஸஹீஹான கிரந்தங்களில் காணப்படுகின்றது .
ஆகவே ,அவர்கள் ஜீவியத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே ,பூலோகத்தை விட்டும் மறைந்த பின்பும் கபூரில் இம்மைக்கும் மறுமைக்கும் மத்தியிலுள்ள ஆலம் மிதலாகிய பர்ஜக்கில் உலக முடிவு நாள் வரை ஹயாத்தாக இருப்பார்கள் .
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ
' அல்லாஹ்வுடைய பாதையில் (பீஸபீலில் ) வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள் . அவர்கள் ஹயாத்துடையவர்கள் .ஆனால் ,அறியமாட்டீர்கள் '
[அல் குர்ஆன் 2:154 ]
என்றும் ,
وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ
فَرِحِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْۙ اَ لَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۘ
'ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் . ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள் . ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்க்கை கொடுக்கப்படுகிறார்கள் .ஆனந்தமாக இருக்கிறார்கள் '
[அல் குர்ஆன் 3:169,170]
என்றும் அல்லாஹ் ﷻ திருவுளம் பற்றியுள்ளான் .
மேலே கண்ட ஆயத்திற்கு விளக்கமாக , ' முஷ்ரிக்குடன் யுத்தம் செய்து வெட்டப்பட்டு ஷஹீதானாலும் சரி,தம்முடைய நப்ஸுடன் ஆத்மார்த்திகப் போர் செய்து அதை வெட்டி வீழ்த்தினாலும் சரி ,இரண்டுமே பீஸபீல் தான் '
என்று மெய்ஞான சொரூபர்,ஷைகுல் அக்பர் ,முஹ்யித்தீன் இப்னு அரபி رضي الله عنه அவர்கள் தமது தப்சீரில் 1வது பாகம் ,137வது பக்கத்தில் கூறியுள்ளார்கள் .
இவ்வாறே ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூசி رضي الله عنه அவர்கள் தங்களது தப்சீர் ரூஹுல் பயானில் 2வது பாகம் 126வது பக்கத்திலும் சொல்லியுள்ளார்கள் .
மேலும் இவ்வாறே தப்சீர் அராயிஸூல் பயான்,தப்சீர் ஹுசைன் ,தப்சீர் அஸீஸீ ஆகியவற்றிலும் வருகின்றன . இவ்வாறே அல்லாமா காழி தனாவுல்லா பானிபட்டீ அவர்கள் தமது தஸ்கிரத்துள் மவுத்தா-வல்-குபூரி என்னும் கிரந்தத்தில் கூறுகின்றார்கள் .
இவ்வாறாக அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர்கள் தத்துவாதிகளைப் பொதிந்து ஜோதிவொளியில் ஐக்கியமாகிவிடுகிறபடியால் ஹயாத்துள்ளவர்கள் நாயனிடம் ரிஸ்கு -உணவு பெறுகிறார்கள் . ஒரு இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு மாறுகிறார்கள் . இதற்கிணங்க ,தன் நபுஸின் பேரில் பீஸபீல் செய்து தன் நபுஸில் செல்லுகின்றவர்களின் ஹயாத்தானது மவுத்தில் ஹயாத்தாய் ,ஒளியோடு ஒளியாய் சேர்த்துக் கொள்வதாய் சொல்லப்படுகிறது .
ஒரு சமயம் நபிகள் கோமான் ﷺ அவர்கள் தபூக் யுத்தத்தில் வெற்றி பெற்று ஜெயபேரிகையுடன் ஸஹாபாக்கள் சகிதம் மதீனா நகருக்குள் நுழைந்த பொது , 'சிறிய போரில் இருந்து பெரிய போர் அளவில் மீண்டுள்ளோம் ' என்று கூறினார்கள் .
உடனே ஸஹாபாக்கள் , யா ரஸூலல்லாஹ் ! இப்போது பீஸபீல் செய்து திரும்பினோம் . இதைவிட பெரிய பீஸபீல் யாது என்று வினவ , பெருமானார் ﷺ அவர்கள் 'நப்ஸ் உடன் போராடுவது தான் பெரிய போராட்டம் ' என்று விடையளித்தார்கள் .இந்த ஹதீது பைஹகீ ,இஹ்யா உலூமித்தீன் ,தப்சீர் ரூஹுல் பயான் ஆகியவற்றில் காணப்படுகின்றது .
'அல்லாஹ்வுக்கு வழிபட்டு தன்னுடைய நபுஸூடன் போர் புரிபவர் எவரோ ,அவரே வீரர் ' என்ற ஹதீதும் மிஷ்காத்தில் காணப்படுகின்றது .
எனவே ,பீஸபீலில் போர்புரிந்து உயிர்த் தியாகம் செய்த ஷுஹதாக்களும் ,நபுஸூடன் போர் தொடுத்து வெற்றியடைந்த மகானுபாவர்களும் மவுத்திற்கு பின்பும் ஹயாத்தை உடையவர்கள் என்பது குன்றின் மேலிட்ட தீபம் போல் தெரியக் கிடக்கின்றது .இந்த அஸ்திவார அடிப்படையிலே மைய்யித்துகள் கேட்கின்றன - பார்க்கின்றன - சுற்றத்தாரையும் அன்பர்களையும் அறிகின்றன - ஸலாமுக்கு பதிலும் சொல்கின்றன என்னும் விஷயங்ககள் பற்றி ஹதீதுகள் பலவற்றைக் குறிப்பிட்டு இமாம் ஜலாலுதீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் ஷரஹுஸ்ஸூதூரில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள் .
இதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தாரின் ஏகோபித்த அகீதாவெனும் கொள்கையாகும் . மைய்யித்துக்கு உணர்வு இருப்பதால்தான் மவுத்துக்குப் பிறகும் ,கபுரில் (ஆலம் அஜ்சாமுக்கும் ஆலம் அர்வாஹுக்கும் இடையே ஆலம் பர்ஜக்கில் ) கேள்விகளும் ,பாவபுண்ணியங்களுக்குத் தக்க பலாபலன்களும் ஏற்படுகின்றன . அவற்றிற்கு அத்தகைய உணர்ச்சிகள் இல்லையெனில் நன்மை ,தீமைகளுக்குள்ள பலாபலனை ,சுகதுக்கத்தை எவ்வாறு அவை அனுபவித்தறிய முடியும் ?
மரணித்திற்குப் பிறகு ,கல் கரடுகளைப் போல் கேட்டறிய சக்தியில்லை என்று எண்ணுவது ஷீயா ,முஃத்தஸிலா போன்ற வழிகெட்ட கூட்டத்தாருடைய கொள்கையாகும் .
" மையித்து செவியேற்காது என்று கூறுகின்றவன் மடையனும் (ஜாஹிலும் ) வழிகெட்டவனும் (முல்ஹிதும் ) ஆவான் " என்பதாய் நான்கு மதுஹபுகளையுடைய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்து உலமாக்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர் .
பத்ரு போரில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு ,போர் ஓய்ந்த பின்பு நபி பெருமானார் ﷺ அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி " எங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம் ,உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா ?" என்று கேட்ட பொழுது அங்கு பெருமானார் ﷺ அவர்களுடன் இருந்த ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنه அவர்கள் " யா ரஸூலல்லாஹ் ! மரணமடைந்தோர் எங்கனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள் ?" என்று வினவினார்கள் . அதற்கு நாயகம் ﷺ அவர்கள் "உங்களை விட அவர்கள் நன்றாகக் கேட்பார்கள் . உங்களுக்கு வெளிக்காது உண்டு.அவர்களுக்கு ஆன்மார்த்த செவி உண்டு,அதனால் எல்லாவற்றையும் கேட்கிறார்கள் " என்பதாக விடையளித்தார்கள் ,என்று ஸஹீஹ் முஸ்லீம் கிரந்தத்தில் வருகின்றது.
"மைய்யித்து உனது பாதரட்சையின் சப்தத்தையும் கூட கேட்கின்றது " என்பதாக ஸஹீஹுல் புஹாரி,ஸஹீஹ் முஸ்லிம் ,அபூதாவூது ,நஸயீ ஆகிய கிரந்தங்களில் வந்திருக்கின்றது . இது சம்பந்தமாக அநேகமான ஹதீதுகளை குறிப்பிட்டு அதிவிரிவாக,ஷரஹுஸ் ஸூதூர் பீ ஷரஹில் மவுத்தா வல் குபூர் என்ற நூலில் இமாம் ஸூயூத்தி رضي الله عنه அவர்கள்கூறுகின்றார்கள் .
உதாரணத்திற்கு சில நிகழ்ச்சிகளை இங்கு கூறுவது பொருத்தமெனக் கருதுகின்றோம்.
நபி பிரான் ﷺ அவர்கள்,ஒருவரை இஸ்லாத்தின் பால் அழைத்த பொது அவர் , குழந்தைப் பருவத்தில் இறந்து போன தனது மகளை உயிர் பெறச் செய்தால் ஈமான் கொள்வதாகக் கூறினார் . அக்குழந்தையின் கபூருக்குச் சென்ற நாயகம் ﷺ அவர்கள் அக்குழந்தையைக் கூப்பிட்டு அழைத்தார்கள் . உடனே அக்குழந்தை , 'அடிபணிந்தேன் ' என்று மறுமொழி கூறியது . திரும்பி உலகுக்கு வரக்கூடிய எண்ணமுண்டா ? என்று கேட்டார்கள் . 'அல்லாஹ்வுடைய ரஸூலே ! ஆண்டவன் மீது சத்தியமாக எனக்கு அத்தகைய எண்ணமில்லை .இம்மையை விட மறுமையை மேலாகக் காண்கிறேன் ' என்று பதில் கூறியது .
அவ்வரலாற்றை இமாம் பைஹகீ رضي الله عنه அவர்கள் தலாயிலில் சொல்வதாய் , ஹஜ்ஜத்துல்லாஹி அலல் ஆலமீன் 422 வது பக்கத்தில் அல்லாமா ஷெய்கு யூசுபுன்னபஹானி رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள்.
"நபிமார்கள் ஜீவனுள்ளவர்களாக இருக்கின்றார்கள் .அவர்கள் கபுறுகளில் (பர்ஜகில் ) தொழுது கொண்டும் இருக்கிறார்கள் " என்று அனஸ் رضي الله عنه அவர்கள் அவர்களைக் கொண்டு பைஹகீ ஹதீதுக் கிரந்தத்தில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது .
عَنْ أَنَسِ بْنِ مَالِکٍ رضي الله عنه أَنَّ رَسُوْلَ اﷲِ صلي الله عليه وآله وسلم قَالَ : أَتَيْتُ، (وفي رواية هدّاب:) مَرَرْتُ عَلَي مُوْسَي لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْکَثِيْبِ الْأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِه
(உதாரணம் ) : மூஸா عليه السلام அவர்கள் செம்மை நிறமான மேட்டின் மீதுள்ள கபூரில் நின்று தொழுது கொண்டிருந்ததை மிஃராஜ் உடைய இரவில் ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள்கண்டார்கள் என்ற ஹதீது அனஸ் رضي الله عنه அவர்கள்அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லீம் ,நஸயீ கிரந்தங்களில் ரிவாயத்துச் செய்யப் பெற்றிருக்கிறது .
"நபிமார்கள் ,ஷூஹதாக்கள் ,அவ்லியாக்கள் ஆகியோர் ஹயாத்துள்ளவர்கள் .அவர்களுடைய கபுறுகளில் அவர்கள் தொழுது கொண்டும் ,ஹஜ் சேட்டு கொண்டும் ,இருக்கின்றார்கள் .இங்ஙனம் ஸஹீஹான ஹதீதுகள் வந்திருக்கின்றன " என்பதாய் இமாம் றமலீ رضي الله عنه அவர்கள் கூறுவதாக ,அல்லாமா ஷெய்கு சுலைமானுல் ஜமல் رضي الله عنه அவர்கள் அல்புதுஹாத்துல் அஹ்மதிய்யா 90வது பக்கத்திலும் ,ஷைகு ஹஸனுல் அதவி மிஸ்ரி رضي الله عنه அவர்கள் மஷாரிகுல் அன்வார் 67வது பக்கத்திலும் ,அல்லாமா ஷைகு ஷெய்கு யூசுபுன்னபஹானி மிஸ்ரி رضي الله عنه அவர்கள் ஷவாஹிதுல் ஹக்கு 69வது பக்கத்திலும் வரைகின்றார்கள் .
(உதாரணம் ) : மக்கா மதீனாவுக்கிடையே நபி கரீம் ﷺ அவர்கள் சென்று கொண்டிருக்கையில் ,நபி மூஸா عليه السلام அவர்கள் காதில் கையை வைத்து தல்பியாச் சொல்லிக் கொண்டு அர்ஜுக் ஓடையை கடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும் , அவர்களது நிறம் ,முடியின் இலட்சணம் பற்றியும் விபரித்துள்ளார்கள் .
மேலும் நபி யூனுஸ் عليه السلام அவர்கள் கம்பளி ஜிப்பாவுடன் செந்நிற ஒட்டகையில் ஷாஷாலுப்த் என்னுமிடத்தில் ஓடையை கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதாயும் ,ஒட்டகையின் மூக்கணாங்கயிறு பேரீத்த மரத்தின் நாரினால் செய்யப்பட்டிருந்தது என்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள் . இந்த ஹதீது இப்னு அப்பாஸ்
رضي الله عنه அவர்களைக் கொண்டு ஸஹீஹ் முஸ்லிமில் ரிவாயத்துச் செய்யப்படுகின்றது.
"அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் நிச்சயமாக மரிப்பதில்லை . ஆனால் ஓர் இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்குச் செல்கிறார்கள் " என்ற ஹதீதை ,ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் அர்பயீன் ஹதீது என்ற நூலிலும் ,இமாம் பக்ருதீன் றாஜீ رضي الله عنه அவர்கள் தப்சீர் கபீர் 3 வது பாகம் 95வது பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
(உதாரணம் ) : பிரபல்யமான வலியுல்லாஹ் அபூஸயீது கர்ராஜ் رضي الله عنه அவர்கள் மக்காவிலிருந்த காலத்தில் ஒரு வாலிபரின் மைய்யித்து பனூ ஷைபா வாசலில் இருந்தது . அதை அவர்கள் உற்று நோக்கினார்கள் . " அபூ ஸயீதே ! ஆண்டவனுடைய நேசர்கள் ஜீவனுள்ளவர்கள் .அவர்கள் ஓர் இல்லத்திலிருந்து மறு இல்லத்திற்கு செல்வதே மரணமாகும் என்பதை அறியவில்லையா ? " என்பதாய் அந்த மைய்யித்து சிரிப்புடன் சொல்லிற்றாம் . இந்நிகழ்ச்சியை இமாம் ஜலாலுதீன் ஸூயூத்தி رضي الله عنه அவர்கள் ஷரஹுஸ் ஸூதூர் 86வைத்து பக்கத்தில் கூறுகின்றார்கள் .
ஸூபியாக்கள் (வலிமார்கள் ) மவுத்தாவதில்லை . எனினும் மனிதர்களுடைய வெளிரங்கமான பார்வையை விட்டும் மறைக்கிறதேயல்லாது வேறில்லை . ஏனெனில் அவர்களையும் மவுத்தனார்களென்று சொல்வதற்காகவே .
" முஷாஹிதீன் , முஹக்கிகீன்களுடைய உடல்களும் கோர்வை குலையாது .குத்ஸியான ரூஹ் நிச்சயமாக ஒருபோதும் அழியாது .இது போல் கியாமத் வரை ஹயாத்தும் அழியாது .இத்தகைய ஹயாத்தும் ரூஹும் உடைய கபூரில் (ஆலமுல் பர்ஜக்கில் ) ஜீவனுள்ளவர்களாகவே இருப்பர் . அவர்களுடைய திரேகம் உலகிலிருந்து போகவே இருக்கும் .இப்பதவி உடையவர்கள் அந்தரங்கமான ஹயாத்துடனே இருப்பார்கள் . ரூஹுல் குதுஸியுடனுமிருப்பார்கள் . மரணத்திற்கப்பாலும் பூமியில் நடந்து திரிவார்கள் .அவ்வமயம் எந்த மனிதரும் அவர்களைக் காண்பார்கள் .அவர்களுடன் பேசிக் கொள்ளவும் செய்வார்கள் . அவர்களை இன்னாரென தெரியவராது .அவர்கள் நாடின போதெல்லாம் கபூரின் மறைந்து விடுவார்கள் . அவர்களுடைய திரேகத்தை மண் ,புழு ,பூச்சி ,மிருகம் எதுவுமே தின்னாது . ஆதிமுதல் அந்தம் வரையில் ஹயாத்து ,ரூஹு,ஜிஸ்மு இம்முன்றுடனும் இறுதிநாள் வரை இருப்பார்கள் . அவர்கள் புவியில் இருக்கையில் உந்தியின் கீழிருந்து ,மூச்செழும்பி மூளைக்கேறி வெளிப்படுவது இயற்கை . கபூரில் இயற்கைக்கு மாற்றமாகவே ,மூச்சு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் .இ தனால் யாக்கை அழியாது (வயிற்றில் இருக்கும் சிசுக்களும் ,சொர்க்கவாதிகளுக்கும் இவ்வாறே ) கபூரில் ஜீவனைப் பெற்றவராயிருந்தால் ஜீவனுக்குள்ள இலட்சணங்கள் ஒன்றுமே குறையாது " என்பதாக மிர்அத்துல் முஷாஹிதீனில் சொல்லப்பட்டுள்ளது .
"வலியுடைய கப்ரை ஒருவர் ஸியாரத்துச் செய்தால் அவரை அந்த வலி அறிவார் . அவர் ஸலாம் சொன்னால் வலி அதற்கு பதில் சொல்வார் . அவருடைய கப்ருக்கு அருகாமையாக ஒருவர் திக்ர் செய்தால் அந்த வலியும் சேர்ந்து திக்ரு செய்வார் . லா இலாஹா இல்லல்லாஹு எனும் திக்ரைச் செய்தாலோ அந்த வலி சம்மனங் கொட்டி உட்கார்ந்து திக்ரு செய்பவருடன் சேர்ந்து திக்ரு செய்வார் .அவ்லியாக்கள் மவுத்துக்குப் பிறகும் ஹயாத்துப் பெற்றவர்களே . மவுத்தின் மூலம் அவர்களை ஒரு வீட்டை விட்டு மறு வீட்டளவில் திருப்பப் பட்டிருக்கிறது . ஹயாத்தில் அவர்களை சங்கை செய்வது போல மவுத்திலும் சங்கை செய்ய வேண்டும் . ஒரு வலி மவ்த்தானால் அன்னார் பேரில் அன்பியா ,அவ்லியாக்களுடைய அர்வாஹுகள் தொழும் " என்பதாக குத்பு ரப்பானி ,இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி رضي الله عنه அவர்கள் தபகாத்துல் குப்ரா பாகம் 2,பக்கம் 65ல் கூறுகின்றார்கள் .
"ஸியாரத்துச் செய்ய மிகவும் ஏற்றமான நாள் திங்கள் ,வியாழன் ,வெள்ளி ,சனி இந்நான்குமாக இருக்கும் .ஜும்மா தொழுகைக்குப் பின்பு ஸியாரத்துச் செய்வது மிகவும் சிறப்பானதாகும் " என்று பதாவா ஆலம்கீரியில் வந்துள்ளது .
"மவுத்தானவர்கள் வெள்ளிக்கிழமை இரவிலும் ,வெள்ளிக்கிழமை முழு நேரங்ககளிலும் .சனிக்கிழமை காலையிலும் ,எந்த நேரங்களிலும் ஜியாரத்துச் செய்பவர்களை அறிவார்கள் . இதற்காக அந்நேரங்களில் ஸியாரத்துச் செய்வது முஸ்தஹப்பாகும் " என்பதாக மஷாரிகுல் அன்வாரில் வந்துள்ளது .
"மவுத்தானவர்கள் ஸியாரத்துச் செய்யக் கூடியவரை அறிவார்கள் ,பேச்சையும் கேட்பார்கள் என்று ஹதீதுகளின் மூலம் அறியப்பட்டிருக்கிறது " என்பதாயும் மஷாரிகுல் அன்வாரில் சொல்லப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment