🌹எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகைக்கான ளயீபான ஆதாரம் 🌹
இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது ஹதீதுக் கிரந்தமான "முவத்தா" வில் வருகின்ற எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றி விபரம்
இமாம் காழீ அப்துல் பர் அந்தலூசி மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு - ஹிஜ்ரி 463 ) கூறுகின்றார்கள் ,
முஹம்மது பின் யூசுப் அவர்கள் மூலமாக வருகின்ற இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது தராவீஹ் பதினொன்று ( எட்டு + மூன்று) ரக்அத் என்ற அறிவிப்பு ளயீபானது.
அதே நூலில் முற்பகுதியில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபாக்களது இருபது ரக்அத் தராவீஹ் தொழுகையை மேற்கோள் காட்டி எழுதுகின்றார்கள், இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது 'முஅத்தா' கிரந்தத்தில் வரும் பதினொரு ரக்அத் ( எட்டு + மூன்று) ளயீபானது என்பதை குறிக்கின்றது.
ஸஹீஹான ரிவாயத் என்பது இருபது ரக்அத்துகள் வரும் அறிவிப்பேயாகும்.
📚 அல் இஸ்தித்கார் லீ மத்ஹப் உலமா ,இமாம் அப்துல் பர் رَحِمَهُ ٱللَّٰهُ ,பாகம் 5,பக்கம் 156
No comments:
Post a Comment