Friday, 31 December 2021

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்

🌹 நம்மைப் போன்ற சாதாரண மனிதர் ?  🌹

 " செங்கதிர் பரப்பி உலகெலாம் விளக்கித்
திரி தினகரனும் வெண்ணமுதம்
தங்கிய இரணச் சசியும் அந்தரத்தில்
தவழ்தரு உடுக்குல மனைத்தும்
பொங்கொளி யெவையும் சுவன நாடனைத்தும்
பூதலம் வீசும்பும் மற்றனவும்
இங்கெழின் முஹம்மது ஒளியினில் என்றால்
இவர்க்கெவை உவமை சொல்வதோ?"
என்று, அனைத்துப் பொருட்களின் படைப்புக்கும்
காரணரான கருணை நபிகள் நாயகம்  ﷺ அவர்களின்
பேரெழிலிற்கு உவமையாகக் காட்டும் யோக்கியதை
உலகின் எந்தப் பொருளுக்கு இருக்கிறது? என்று உமறுப் புலவர்  அவர்கள் வியந்து நிற்கின்றார்கள்.

فَإِنَّ فَضْلَ رَسُولِ اللهِ لَيْسَ لَهُ
حَدٌّ  فَيُعْرِبَ عَنْهُ نَاطِقٌ بِفَمِ

" செம்மல் நபி நாயகம்  ﷺ அவர்களின் சிறப்பிற்கு
எல்லையும் இல்லை. அதைப் பூரணமாய் விண்டுரைக்கும்
தகுதியும் மனிதனுக்கு இல்லை "  என்பதை இமாம் ஷரபூத்தீன் பூசிரீ
رضي الله عنه  அவர்கள் தங்களின் புர்தா ஷரீபில்  (45) உறுதிபடக் கூற
கிறார்கள்.

இப்படிக் கவிஞர்களையும் திணறவைக்கும் கவின்
பெற்ற காதமுன் நபி  ﷺ அவர்களை கண்ணால் கண்டு, 
அவர்களின் கனியுரைகளை காதுகுளிரக் கேட்டு, அவர்கள்
தம் சீரிய நடவடிக்கைகளை நேரில் பார்க்கும் பேறுபெற்ற
ஸஹாபாப் பெருமக்களும் அந்த நீதர் நபி நாயகம்  ﷺ
அவர்களுக்கு நிகரே இல்லை என்பதை நிதர்சனப்படுத்தி
யிருக்கிறார்கள்.

உவமை சொல்ல இயலா அந்த உயர் தனித்திரு நபி
 ﷺ அவர்களை-பொதுவாக  நபிமார்களை சாதாரண
சராசரி மனிதர்களாகச் சித்தரிக்கச் சிலர் இன்று முற்படுகிறார்கள்.

அந்தப் புனிதர்களை நம்மைப் போன்ற சாதாரண
மனிதர்களாகச் சித்தரிக்கும் இந்தச் சித்தாந்தம் முதன்
முதலில் இப்லீஸினால் துவக்கி வைக்கப்பட்டது. 
ஆம்;

ஸெய்யிதினா ஆதம் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ  அவர்களுக்கு ஸுஜூது செய்யுமாறு
அல்லாஹ் விதித்த கட்டளைக்கு மாறு செய்த இப்லீஸ்,
அதற்குக் காரணம் சொல்லும்போது "  (இந்தச் சாதாரண)
மனிதருக்கு நான் சுஜூது செய்ய மாட்டேன் " 

قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
(குர்ஆன்::15:33) என்றே குறிப்பிட்டான்.

இதை தெளிவுபடுத்துகின்ற இறைமறை குர் ஆன்,
அந்த இப்லீஸ் உண்டாக்கிய இந்தக் கோட்பாட்டைப் பின்
பற்றி, உலகில் தோன்றிய நபிமார்களை நம்மைப் போன்ற
சாதாரண மனிதர்கள் என்று அந்தந்தக் காலங்களில்
வாழ்ந்திருந்த காபிர்கள் சொன்னார்கள் என்பதையும்
தெளிவுபடுத்துகிறது.

اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
ذٰ لِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ يَّهْدُوْنَـنَا فَكَفَرُوْا وَتَوَلَّوْا‌ وَّاسْتَغْنَى اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَمِيْدٌ‏

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்
தோரின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்)
அனுபவித்ததுடன் (மறுமையிலும்) அவர்களுக்கு துன்
புறுத்தும் வேதனையுண்டு.
இதன் காரணமாவது: நிச்சயமாக தெளிவான
அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட 
(நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே
இருந்தார்கள். எனினும், அவர்களோ நம்மைப்போன்ற ஒரு
மனிதனா நமக்கு நேரான வழியைக் காட்டி விடுவான்
என்று கூறி, அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து
விட்டனர், அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்த
வில்லை. அல்லாஹ் (இவர்களின் பால்) தேவையற்றவனும்
புகழுக்குரியோனுமாக இருக்கிறான். (குர்ஆன்: 64: 5, 6)

இப்படிப் பொதுவாகச் சுட்டிக் காட்டும் குர்ஆன்
தனித் தனியாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

ஆத், தமூத், மற்றும் இவர்களுக்குப் பின் வந்த கூட்டத்
தினருக்கு வந்த நபிமார்களை  

قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاؕ 
" நீங்களும் எங்களைப்
போன்ற சாதாரண மனிதர்களே!" என்று அவர்கள்
சொன்னார்கள். (அல்குர்ஆன்: 14-10)

مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ
 “ இவர் உங்களைப் போன்ற சாதாரண மனிதரே"
என்று ஸெய்யிதினா நூஹ் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களைக் குறித்து அவர்களது சமூகக்
காபிர்கள் சொன்னார்கள். (குர்ஆன்: 23-24)

ஸெய்யிதினா நபி ஹூத் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களைக் குறித்து அவர்களது
சமுதாயக் காபிர்கள் 
هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ
" இவர் உங்களைப் போன்று சராசரி
மனிதரேயன்றி வேறில்லை” என்றனர். (குர்ஆன்: 23-33)

ஸெய்யிதினா நபி ஸாலிஹ் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களைக் குறித்து அவர்களது சமுதாயத்தினர்,
 “ நீர் எங்களைப் போன்ற சாதாரண
மனிதர்தான்” என்று கூறினார்கள். (குர்ஆன்: 26-154)

எங்களைப் போன்ற சாதாரணமான இவ்விரு
மனிதர்களையா நாங்கள் ஈமான் கொள்வோம்! என்று
ஹலரத் ஸெய்யிதினா மூஸா عَلَيْهِ ٱلسَّلَامُ, ஹலரத் ஹாரூன் عَلَيْهِ ٱلسَّلَامُ  ஆகிய இரு
நபிமார்களைக் குறித்து அக்கால காபிர்கள் கூறினார்கள்.
(குர்ஆன்: 23-47)

ஸெய்யிதினா நபி ஷுஐப் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களைப் பற்றி " நீர்
எங்களைப் போன்ற (சாதாரண) மனிதரே” என்று அக்கால
காபிர்கள் சொன்னார்கள். (குர்ஆன்: 26-186)

நபிமார்களான ஸெய்யிதினா ஈசா عَلَيْهِ ٱلسَّلَامُ,ஸெய்யிதினா  எஹ்யா عَلَيْهِ ٱلسَّلَامُ, ஸெய்யிதினா ஷம்ஊன் عَلَيْهِ ٱلسَّلَامُ ஆகி
யோரைக் குறித்து, “ நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்
களே” என்று கூறினார்கள். (குர்ஆன்: 36:15)

இவ்வாறே ஈருலக இரட்சகர் எம்பெருமானார் முஹம்மது  ﷺ அவர்களைக் குறித்து மக்கத்து காபிர்கள் " இவர் உங்களைப் போன்ற (சாதாரண) மனிதர் தான் " என்று குறிப்பிட்டனர் . ( குர்ஆன் 21:3 ) 

இவ்வாறு உவமை காட்டிட இயலா அந்த உயர் நபியவர்களுக்கு ஒவ்வா உவமைகளைக் காட்டி ,அவர்களின் உன்னததிற்கு எல்லை நிர்ணயம் செய்து ,சிறப்புக்கு வேலிகட்டி ,அவர்களும் நம்மைப் போன்ற மனிதரே என்று கூறும் செயல் சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்கள்,அஹ்லே பைத்துகள்,இமாம்கள்,புகஹாக்கள்,வலிமார்கள்,ஸாலிஹீன்களது நடைமுறையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான நவீனகால வழிகெட்ட கொள்கையாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...