வெளியீடு : ஹிஸ்புல்லாஹ் சபை,ஸூஃபி மன்ஸில்,காயல்பட்டணம்-628204.
வெளியீட்டு தேதி : ஹிஜ்ரி 1432,ரபீயுல் அவ்வல் பிறை 12 .
ஈஸவி 2011,பிப்ரவரி 16.
اَلتَّصَوُّب | அத்தஸவ்வுப்- ஸூபிஸம்
என்னுரை :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹு தஆலாவின் திரு
நாமத்தால் துவக்கம்.
உஜூதாலும் உளதாலும், தாத்து
தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம் பொருளான
ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.
மிக்க சம்பூரணத்துவமாக வெளியான,
அல்லாஹு தஆலாவின் பேரொளியான, காருண்
யமான, மெஞ்ஞான பட்டினமான நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள்,
இறை நேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும்,
கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக!
اَوَّلُ الدِّینِ مَعرِبَتُ اللَّهِ - " அவ்வலுத்தீனி மஃரிபத்
துல்லாஹ் - மார்க்கத்தில் முதன்மையானது
அல்லாஹு தஆலாவை அறிவது" என்ற
திருவாக்கின்படி முதல்கடமை
அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.
இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதும் சரியாக
அமையாது.
ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள்
ஸூபிஸம்,
இக்கலைக்கு அந்தஸவ்வுபு என்றும்,
உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும்
பெயர்வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை
செலவளித்து மக்களுக்கு மக்களுக்கு அதிலும் முரீதீன்கள்,
முஹிப்பின்களுக்கு இதன் எதாரத்தமான மெஞ்ஞான
வஹ்தத்துல் உஜூது--உளது ஒன்று என்பதை வாய்
மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள்
மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவர்கள் தம்தமக்கு தவ்கு - அனுபவ
அறிவினாலும், கஷ்பு- உதிப்பு வெளிப்பாடு
அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து
குர்ஆன் ஹத்துகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல
எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக
விட்டுச்சென்றுள்ளார்கள், அல்லாஹு தஆலா
அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.
வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக்கொண்டிருப்பது வெள்ளிடைமலை .
" அத்தஸவ்வுபு -ஸூபிஸம் " என்பது
இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் சொல்வது போல், சொல்வது போல், அல்லாஹுக்காக இருதயத்தை
தனிமைப் படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி)
அற்பமாக கருதுவதாகும்.
இம்மெஞ்ஞானகலைக்கு " அத்தஸவ்வுபு
ஸூபிஸம்" என்று பெயர் வைப்பதற்கு நான்கு
காரணங்களை கோடிட்டு காட்டிருக்கிறார்கள்.
1, இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் اَلتَّصَوُّف - அத்தஸவ்வுப்
என்பதின் மூலம் صَفَاء ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
2, இவர்களது ஊக்கம் உயர்வாகவும்,
அல்லாஹு தஆலா அளவில் அவர்களது இருதயம்
முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு
தஆலாவின் சன்னிதானத்தில் اَلصَّفُّ الاَوَّلُ- அஸ்ஸப்புல்
அவ்வல்-முதல் வரிசையில் இருக்கிறார்கள்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
3, இவர்களது குணாதிசியங்கள்,நபி
நாயகத்தின் திண்ணை தோழர்களான اَھلُ الصُّفَّةِ - அஹ்லுஸ்ஸுப்பாக்களின்
குணாதிசியங்களுக்கு
நெருக்கமாக இருப்பதினாலாகும்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுப்பத்-திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
போலாகும்.
நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி
கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள்
ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்
• نُسَمِّي بِصُوفِي مَنزِلٍ لِلتَّبَرُكِ
بِمَنزِلِ اَصحَابِ الذَّنِي اَھلِ الصُّفَّةِ
நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத் - வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு "ஸூபி மன்ஸில்" என்று பெயர் வைக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.
4, இவர்கள் ஸுப் - கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் போலாகும் " ஸுப்- கம்பளி" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.
ஸுப் கம்பளி ஆடை அல்லாஹு
தஆலாவுக்கும், அவனது ரஸூல் ﷺ அவர்களுக்கும் உகப்பானதாக
இருந்ததினால் " யாஅய்யுஹல் முஸ்ஸம்மில்,
யாஅய்யுஹல் முத்தத்திர்" (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ﷺ அவர்களை அழைத்திருக்கிறான்.ஸுப்ஹானல்லாஹ்!
இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு " அத்தஸவ்வுபு- ஸூபிஸம்" என்று பெயர் வைத்துள்ளேன்.
இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான
மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.
அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி رضي الله عنه
அவர்கள் எழுதிய
" அத்துஹ்பத்துல் முற்ஸலா", " அல்ஹகீகா" நூலிலிருந்தும்,
அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் رضي الله عنه அவர்கள் எழுதிய " அத்தரீ ஆ" நூலிலிருந்தும், இம்மூன்று
நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி قدس الله سره العزيز அவர்கள் மொழிப்பெயர்த்த நூலிலிருந்தும்,
மகான் அஷ்ஷாஹ்
சங்கைக்குரிய முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி
ஹழ்ரத் قدس الله سره العزيز அவர்கள் எழுதிய " அல்ஹக்", " அஸ்ஸுலுக்" என்ற நூற்களின் மொழிப் பெயர்ப்பில் இருந்தும் (மொழி பெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம்
ஸூபி ஹழ்ரத் قدس الله سره العزيز அவர்கள் செய்துள்ளார்கள்)
" அல்ஹகீகா" என்ற நூலிலிருந்தும், (மொழிபெயர்ப்பு
நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது
ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அந்தரூத்தி قدس الله سره العزيز அவர்கள்
செய்துள்ளார்கள்.)
மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி رضي الله عنه அவர்கள் எழுதிய " இறாஅத்துத்தகாயிகி" என்ற நூலை
மொழிபெயர்த்து "அகமியக்கண்ணாடி" என்ற பெயரில்
நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் காஹிரி قدس الله سره العزيز அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும், அவர்கள் தொகுத்த " இள்ஹாருல்ஹக் - சத்திப்பிரகடனம்" என்ற
சில நூலிலிருந்தும் குறிப்புகளை சுருக்கி தொகுத்துள்ளேன் தவிர்த்து வேறு. அடியேனின் எந்த
சொந்தக்கருத்தையும் எழுதவில்லை.
முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும், நம் மகான்களான ,ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று
நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது.
அல்ஹம்து லில்லாஹ்.
எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன்பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக்
கொண்டு பயனடைந்தது போல் இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ
செய்யுங்கள்.
நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஞான வழிப்பாட்டையில் வெற்றி வெற்றி நடைப்போட்டு, சித்தியடைந்து, நல்மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா சேர்த்து
வைப்பானாக! ஆமீன்.
சமுதாய ஊழியன்
S.M.H. முஹம்மது அலி சைபுத்தீன்
( -- தொடரும் --)
No comments:
Post a Comment