Thursday, 11 February 2021

ﷺ நம்மைப் போன்ற மனிதரா ? - 2

நூல் : நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா ? 


ஆக்கம்: அல் ஆரிபுபில்லாஹ்,அல் முஹிப்பிர்ரஸூல் ,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில் பாகவி ஸுஃபி காதிரி காஹிரி  قدس الله سره العزيز


சுருதி (நகலிய்யத்) அடிப்படையில் : 


1)
நபி صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்களும் நாமும் சொல்லும் கலிமா ஷஹாதத்தில் வித்தியாசம்: 

நாம் சொல்வது அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு-வரஸுலுஹு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிச்சயம் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்” என்பதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது “ அஷ்ஹது அன்னி ரஸுலுல்லாஹி நான் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்கிறேன்” என்பதாகும்.

நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் சொல்வது போன்று நாம் சொல்ல முடியாது. அப்படி யாரும் சொன்னால் தன்னை நபி தூதர் என்று சொன்னவனாகி காபிராகிவிடுவான்.

(2) இஸ்லாம் ஐந்து காரியத்தின்மீது அமைக்கப்பட்டது.


1) ஷஹதாத்து (சாட்சி பகருதல்), 2) தொழுகை, 3) ஜகாத்,
4) நோன்பு, 5) ஹஜ்ஜு. நமக்கு இவ்வைந்தும் கடமை.

ஆனால் முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களுக்கு இஸ்லாத்தின் கடமை நான்குதான். பொருள் இருந்தாலும் ஜகாத்து கடமையில்லை.
[ஆதாரம்: ரத்துல் முஹ்தார்]

3) தூக்கம் நமது உளுவை முறித்துவிடும்.நாயகத் திருமேனி ரஸூலே கரீம்  صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களுக்கு தூக்கம் உளுவை முறிக்காது. அவர்கள் கண்கள் தூங்கினாலும் உளம் தூங்காது! எனவே உளு முறியாது!

4) நமக்கு ஐவேளைத் தொழுகை கடமையாகும். நபி
صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களுக்கு ஆறு வேளை தொழுகை கடமையாகும். மேற் கூறிய ஐந்தும்," தஹஜ்ஜுத்” தொழுகையுமாகும்.

وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ

“ பதஹஜ்ஜத்-பிஹி-நாபிலத்தன்-லக்-(நபியே!) தஹஜ்ஜுத் தொழுகை தொழுகவும், இது உமக்கு அதிகமாகும்” (மற்ற உமது உம்மத்தார்களுக்கு கடமை இல்லை).

[அல்குர்ஆன்-17:79]

5) நாம் நான்கு மனைவிமார்களைவிட அதிகமானவர்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. ஆனால் நபி صَلّى اللهُ عليهِ وسلّم 
அவர்கள் தாங்கள் விரும்பிய பெண்களை எல்லாம் (நான்கை விட அதிகமானாலும்) திருமணத்தில் வைத்துக் கொள்ளலாம்.

" நீர் அவர்களில் (மனைவிமார்களில்) நின்றும்
நாடியவர்களை விட்டு விடுவீர். நீர் நாடியவர்களை
உம்மளவில் சேர்த்துக் கொள்வீர். 

[அல்குர்ஆன்-33:50]


சரியான சொல்லாகிறது: ரஸூலே கரீம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் மரணமாகும் வரை இதே சட்டம்தான் இருந்தது என்று இமாம் நவவி رَحِمَهُ الله அவர்கள் நவின்றுள்ளார்கள் .
[ஆதாரம்: மிர்காத்-ஷரஹ் மிஷ்காத் ]


 6)உம்மஹாத்துல் முஃமினீன் (விசுவாசிகளின்  தாய்மார்களான) நபி صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்களின் மனைவிமார்களை  நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களின் வபாத்திற்குப்பின்  உம்மத்துமார்களில் எவரும் மறுமணம் செய்துகொள்ள அனுமதியில்லை.

ஆனால் நாம் மரணித்துவிட்டாலோ நம் மனைவிமார்களை முஸ்லிமான வேறு சகோதரர் மறுமணம் செய்து கொள்ளலாம்.


“ வலா அன்தன்கிஹு அஸ்வாஜஹு மின்பஃதிஹி
அபதா ” (விசுவாசிகளே! முஹம்மது நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களின் மனைவிமார்களை
அவர்களுக்குப் பின் ஒருக்காலும் மணந்து கொள்ளாதீர்கள்.
[அல்குர்ஆன்-33:53]


اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُ
‘ அன்னபிய்யு-அவ்லா-பில்முஃமினீன-மின்-அன்
புஸி ஹிம்-வ அஸ்வா ஜுஹு-உம்மஹாத்து ஹும்'

 (விசுவாசிகளுக்கு) தங்கள் ஆன்மாக்களைவிட முஹம்மது நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள்தான் மிக மேலானவர்கள். அவர்களின் மனைவிமார்கள்
இவர்களின் தாய்மார்கள்.

[அல்குர்ஆன்-33: 6]

இதன்படி நம் தாய்மார்களான அவர்களை எப்படி நாம்
கல்யாணம் முடித்துக் கொள்ள முடியும்?


7) நாம் மரணித்துவிட்டால் நம் சொத்து, ஆஸ்திகள் அனைத்தையும் நம் அனந்தரக்காரர்கள் பங்கீடு செய்து கொள்வார்கள். இதுதான் நியதி. ஆனால் ரஸூலே கரீம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களின் சொத்துக்கள் அவர்களின் அனந்தரக்காரர்களுக்கு கிடைக்காது. அவை அனைத்தும் எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும்.


“ நபிமார்களான நாங்கள் (எவரையும்) அனந்தரக்காரர்
களாக ஆக்கமாட்டோம். நாங்கள் விட்டுச் சென்றவை
ஸதகா தருமம் ஆகும் என்று நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் நவின்றுள்ளார்கள்.
[ஆதாரம்: ரூஹுல் பயான்]

8] ஷரீஅத்தின் சட்ட திட்டங்கள்:


முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்களின் நாவில் இருக்கின்றன. அவர்களின் தகைமிகு நாவில் இருந்து எது வெளிவருகின்றதோ அதுதான் ஷரீஅத்
சட்டம். நாமோ அவர்களின் முபாரக்கான நாவிலிருந்து வெளியாகின்றதை எதிர்பார்த்து அதற்கு வழிபடுவதை கடமையாக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக தீர்ப்பு வழங்கிட இரண்டு சாட்சியாளர்கள் குறைந்த பட்சம் வேண்டும். இதுதான் ஷரீஅத் சட்டம். 

ஆனால் ஒரு சமயம்,ஓர் விஷயத்தில் தீர்ப்பளிக்க இரண்டு சாட்சிகள்
தேவைப்பட்டது. அபூஹுஸைமா رضي الله عنه
அவர்கள் மட்டும் ஒரு சாட்சியாளராக இருந்தார்கள்.
இவர்களை மட்டும் வைத்து நபி صَلّى اللهُ عليهِ وسلّم   அவர்கள் தீர்ப்பளித்துவிட்டு இது அபூஹுஸைமாவுக்கு மட்டும் சொந்தம் என்று நாயகம்
முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் சொன்னார்கள். அவர்கள் நாவில் வந்ததுவே சட்டமாகி விட்டது. இரண்டு சாட்சியாளர்கள் தேவையல்லவோ என்று
ஆட்சேபனை செய்ய இடமில்லை. அவர்கள் நாவில் வருவது தானே ஷரீஅத்!


9) அதை போன்று முஸ்லிமான ஒருவர் ஒரே காலத்தில் நான்கு மனைவிகள் வரை கல்யாணம் முடிக்கலாம் என்பது ஷரீஅத் பொதுச்சட்டம் .

ஆனால் நபியின் அருமை மகளான அன்னை பாத்திமா நாயகி رضي الله عنها அவர்கள் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه 
அவர்களின் மனைவியாக ஜீவித்திருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் அலி رضي الله عنه அவர்கள் மணமுடிக்கலாகாது என்று ஹராமாக்கி தடுத்துவிட்டார்கள்.


இச்சட்டம் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களுக்கு மட்டும் சொந்தமான சட்டம். இவ்வாறாக அவர்கள் நாவில் ஷரீஅத் சட்டம் இருக்கின்றது. நாம் அதற்கு முற்றிலும் வழிபட்டு நடக்க கடமையாக்கப்பட்டிருக் கிறோம்.


10) நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் ஒரு சமயம் தொடர்ந்து எதுவும்
உண்ணாமல் நோன்பு நோற்றிருந்தார்கள். அது சமயம் அவர்களின் தோழர்களும் தொடர் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்டதும் நபி صَلّى اللهُ عليهِ وسلّم  அவர்கள் தொடர் விரதத்தைத் தடுத்து
விட்டார்கள்.

 அப்போது ஓர் மனிதர் , "தாங்கள் தொடர் விரதம் மேற்கொள்கிறீர்களே ? " என்று கேட்டார். அப்போது ஹபீபுல்லாஹ் அவர்கள் தோழர்களை முன்னோக்கி சொன்னார்கள் ; " உங்களில் யார் எனக்கு நிகரானவர்கள் ? என்னைப் போன்றவர் யார் ? எனக்கு என் இரட்சகன் உணவளிக்கின்றான்,குடிப்பாட்டுகின்றான். "

[அல்ஹதீஸ் -மிஷ்காத்]  

அவர்களைப் போன்று உம்மத்தினர்கள் ஏதும் குடிக்காமல் , உண்ணாமல் தொடர்ச்சியாக நோன்பு  நோற்க கூடாது என்றும் அவர்களுக்கு எவரும் நிகராக மாட்டார்கள் என்றும் தெள்ளத் தெளிவாக தெரிய வருகின்றது.

11) தாஹா நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் நீண்டநேரம் இராத் தொழுகை தொழுது கொண்டிருக்கும் பொழுது, ஸஹாபாக்களை நோக்கி சொன்னார்கள், "உங்களில் யாரைப் போன்றும் நானல்ல " 

[அல் ஹதீது]


மேற்குறியவைகளிலிருந்து முஹம்மது நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் சுருதி (நகலிய்யத் ) அடிப்படையிலும் நம்மைப் போன்ற சாதராண மனிதர் அல்ல என்பதும் அழகுற தெரியவந்துவிட்டது.   


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...