நூல் : நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் நம்மைப் போன்ற மனிதரா ?
ஆக்கம்: அல் ஆரிபுபில்லாஹ்,அல் முஹிப்பிர்ரஸூல் ,அஷ் ஷெய்குல் காமில்,அஷ் ஷாஹ் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாழில் பாகவி ஸுஃபி காதிரி காஹிரி قدس الله سره العزيز
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ
“ நபியே கூறுவீராக! நான் உங்களைப் போன்று
மனிதன்தான், என்னளவில் உங்கள் கடவுள், ஒரே
கடவுள்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது."
[திருக்குர் ஆன் 41:6 ]
மக்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக காபிர்களும் நபி முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் ' மனிதர்தான்' என்று நம்புகின்றனர்.அப்படியிருந்தும் மேற்கூறப்பட்ட ஆயத்து வசனம் “ நான்
உங்களைப் போன்ற மனிதர்தான்” என்று அருளப்பட்டதின் தத்துவமென்ன? என்பதை இங்கு சற்று ஆராய்வோம்.
நபி ஈஸா عليه السلام அவர்கள் தந்தையில்லாமல் ஜனனமானது, மரணித்தவர்களை உயிர்ப்பித்து வாழவைத்தது, பிறவிக் குருடர்களைக் கண் உள்ளவர்களாக மாற்றியது, பெரும் பெரும் வியாதிகளை எல்லாம் மருந்துகள்
இல்லாமல் கைகொண்டு தடவுவது மூலம் சுகமாக்குதல் போன்ற முஃஜிஸாத்-அற்புதங்களை அவர்கள் சமுதாயத்தினர் பார்த்ததும் இவர் அல்லாஹ்வின் குமாரராகத்தான் இருக்க வேண்டுமென நினைத்து இவர் அல்லாஹ்வின்
குமாரர் என்று கூறினர்.
நபி உஸைறு عليه السلام அவர்கள் மரணித்து நூறு வருடங்களுக்குப்பின் உயிர் பெற்றெழுந்ததைப் பார்த்ததும் யூதர்கள் இவர் அல்லாஹ்வின் குமாரர் என்று சொன்னார்கள்.
தித்திக்கும் திருமறையாம் குர்ஆன் ஷரீபில் (மலாயிகத் என்பதாக மலக்கு)-உபயோகிக்கப்படுவதால் அமரர்களை பெண்பாலாக “ மலக்குகள் அல்லாஹ்வின் பெண்மக்கள்” என்று முஷ்ரிக்குகள் சொல்ல ஆரம்பித்தனர்.இவை போன்ற இவைகளை விடவும் உயர்வான எண்ணற்ற முஃஜிஸாத் அற்புதங்கள் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களிடம் காணப்பட்டன!
[ஸஹீஹ் புஹாரி , ஹதீஸ் எண் : 3636 ]
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ قَالَ " إِنْ دَعَوْتُ هَذَا الْعِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ " . فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَنْزِلُ مِنَ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " ارْجِعْ " . فَعَادَ فَأَسْلَمَ الأَعْرَابِيُّ
மரங்கள் இவர்கள் அழைப்பிற்கிணங்கி இவர்கள் சமூகம் வந்தன!
[திர்மிதி , பாகம் 1,கிதாப் 46,ஹதீஸ் எண் :3628]
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجَ أَبُو طَالِبٍ إِلَى الشَّامِ وَخَرَجَ مَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أَشْيَاخٍ مِنْ قُرَيْشٍ فَلَمَّا أَشْرَفُوا عَلَى الرَّاهِبِ هَبَطُوا فَحَلُّوا رِحَالَهُمْ فَخَرَجَ إِلَيْهِمُ الرَّاهِبُ وَكَانُوا قَبْلَ ذَلِكَ يَمُرُّونَ بِهِ فَلاَ يَخْرُجُ إِلَيْهِمْ وَلاَ يَلْتَفِتُ . قَالَ فَهُمْ يَحُلُّونَ رِحَالَهُمْ فَجَعَلَ يَتَخَلَّلُهُمُ الرَّاهِبُ حَتَّى جَاءَ فَأَخَذَ بِيَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ هَذَا سَيِّدُ الْعَالَمِينَ هَذَا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ يَبْعَثُهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ . فَقَالَ لَهُ أَشْيَاخٌ مِنْ قُرَيْشٍ مَا عِلْمُكَ فَقَالَ إِنَّكُمْ حِينَ أَشْرَفْتُمْ مِنَ الْعَقَبَةِ لَمْ يَبْقَ شَجَرٌ وَلاَ حَجَرٌ إِلاَّ خَرَّ سَاجِدًا وَلاَ يَسْجُدَانِ إِلاَّ لِنَبِيٍّ وَإِنِّي أَعْرِفُهُ بِخَاتَمِ النُّبُوَّةِ أَسْفَلَ مِنْ غُضْرُوفِ كَتِفِهِ مِثْلَ التُّفَّاحَةِ . ثُمَّ رَجَعَ فَصَنَعَ لَهُمْ طَعَامًا فَلَمَّا أَتَاهُمْ بِهِ وَكَانَ هُوَ فِي رِعْيَةِ الإِبِلِ قَالَ أَرْسِلُوا إِلَيْهِ فَأَقْبَلَ وَعَلَيْهِ غَمَامَةٌ تُظِلُّهُ فَلَمَّا دَنَا مِنَ الْقَوْمِ وَجَدَهُمْ قَدْ سَبَقُوهُ إِلَى فَىْءِ الشَّجَرَةِ فَلَمَّا جَلَسَ مَالَ فَىْءُ الشَّجَرَةِ عَلَيْهِ فَقَالَ انْظُرُوا إِلَى فَىْءِ الشَّجَرَةِ مَالَ عَلَيْهِ . قَالَ فَبَيْنَمَا هُوَ قَائِمٌ عَلَيْهِمْ وَهُوَ يُنَاشِدُهُمْ أَنْ لاَ يَذْهَبُوا بِهِ إِلَى الرُّومِ فَإِنَّ الرُّومَ إِذَا رَأَوْهُ عَرَفُوهُ بِالصِّفَةِ فَيَقْتُلُونَهُ فَالْتَفَتَ فَإِذَا بِسَبْعَةٍ قَدْ أَقْبَلُوا مِنَ الرُّومِ فَاسْتَقْبَلَهُمْ فَقَالَ مَا جَاءَ بِكُمْ قَالُوا جِئْنَا أَنَّ هَذَا النَّبِيَّ خَارِجٌ فِي هَذَا الشَّهْرِ فَلَمْ يَبْقَ طَرِيقٌ إِلاَّ بُعِثَ إِلَيْهِ بِأُنَاسٍ وَإِنَّا قَدْ أُخْبِرْنَا خَبَرَهُ بُعِثْنَا إِلَى طَرِيقِكَ هَذَا فَقَالَ هَلْ خَلْفَكُمْ أَحَدٌ هُوَ خَيْرٌ مِنْكُمْ قَالُوا إِنَّمَا أُخْبِرْنَا خَبَرَهُ بِطَرِيقِكَ هَذَا . قَالَ أَفَرَأَيْتُمْ أَمْرًا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِيَهُ هَلْ يَسْتَطِيعُ أَحَدٌ مِنَ النَّاسِ رَدَّهُ قَالُوا لاَ . قَالَ فَبَايَعُوهُ وَأَقَامُوا مَعَهُ قَالَ أَنْشُدُكُمُ اللَّهَ أَيُّكُمْ وَلِيُّهُ قَالُوا أَبُو طَالِبٍ فَلَمْ يَزَلْ يُنَاشِدُهُ حَتَّى رَدَّهُ أَبُو طَالِبٍ وَبَعَثَ مَعَهُ أَبُو بَكْرٍ بِلاَلاً وَزَوَّدَهُ الرَّاهِبُ مِنَ الْكَعْكِ وَالزَّيْتِ .
[திர்மிதி ,பாகம் 1,கிதாப் 46,ஹதீஸ் எண்:3620 ]
* சூரிய வெப்பம் தாக்காமலிருக்க, மேகம் இவர்கள் போகுமிடங்களுக்கெல்லாம் கூடவே சென்று குடை பிடித்தது!
[அஷ் ஷிபா , 1:306]
* இவர்கள் திருக்கரங்களில் கற்கள் தஸ்பீஹ் (துதி) செய்தன!
[ஸஹீஹ் புஹாரி , ஹதீஸ் எண் 3584 ]
*ஈத்த மரத்தால் செய்யப்பட்ட மிம்பர் (பிரசங்க மேடை) இவர்களின் பிரிவால் அழுதது!
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ وَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فِي ذَلِكَ الإِنَاءِ وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ . قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ .
* தங்கள் தாய் தந்தையர்களான ஆமினா நாயகி رضي الله عنها,அப்துல்லாஹ் நாயகம் رضي الله عنهما இவர்களையும் தோழர் ஹழரத் ஜாபிர் رضي الله عنه அவர்களின் இரு பிள்ளைகளையும் உயிர்ப்பித்தல், காய்ந்த மரம் தளிர்த்தல், நோயாளிகள் இவர்களின் திருக்கரத்தால் தடவப்பட்டதும் சுகமாகுதல் இவைப் போன்ற எண்ணற்ற அற்புதங்களைக் காட்டினார்கள் .
இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு முன்சென்ற சமுதாயத்தினர் சொன்னது போன்று நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களின் சமுதாயத்தினரும் இவர்களை “ அல்லாஹ்வின் குமாரர்” என்று சொல்லிவிடக் கூடாதே என்பதற்காக “ நபியே கூறுவீராக!” “ நான் உங்களைப் போன்று மனிதன்தான்" (அல்லாஹ்வின்
குமாரன் அல்ல) என்று அல்லாஹ் நபிகள் நாயகத்திற்கு மக்களிடம் சொல்லும்படி கட்டளையிட்டுள்ளான்.
இதே கருத்துப்பட இமாம் அல்லாமா பூஸரி
رضي الله عنه அவர்கள் புர்தா ஷரீபில் நவின்றுள்ளார்கள்.
دَعْ مَا ادَّعَتْهُ النَّصَارٰى في نَبِيِّهِم
وَاحْكُمْ بِمَا شِئْتَ مَدْحًا فِيهِ وَاحْتَكَمِ
' நஸாரா (கிருத்துவர்கள் தங்கள் நபி ஈஸா
عليه السلام அவர்கள் சம்பந்தமாக (குமாரர் என்று)
வாதித்ததை விட்டு விட்டு நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் விசயத்தில் நீ நாடிய புகழை சொல்லி நிறைவேற்றிக் கொள்! அவர்களுக்கு சிறப்பில் நின்றும்
எவைகளை எல்லாம் சேர்க்க நாடுகிறாயோ அவைகளை
எல்லாம் சேர்த்துக் கொள்! ரஸூலுல்லாஹ் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களின் சிறப்பிற்கும் அந்தஸ்திற்கும் நிச்சயம் வரம்பில்லை, வாயால் புகழ்ந்து
தீர்த்துவிட முடியாது.”
யூதர்களும், கிருத்துவர்களும் தங்கள் நபிமார்களை வரம்பு மீறி தகாத வார்த்தைகளை சொல்லி வழி கெட்டுப் போனார்கள்! நாம் வரம்பிற்குள் இருந்துகொண்டு நம் உத்தம நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை எவ்வளவு புகழ இயலுமோ அவ்வளவு புகழலாம். புகழவும் வேண்டும்.
நாம் அவர்களை புகழ புகழ நமது கீர்த்தியும், சிறப்பும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது நாம் கண் கூடாய்க் காணும் காட்சியுமாகும்.
மேற்கூறிய வசனத்தில், நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை " அல்லாஹ்வின் குமாரர்” என்று சொல்லாமல் "அப்துஹு வரஸூலுஹு - அவனின் அடியாரும் தூதருமாவார் ” என்றுதான் விசுவாசிக்க வேண்டுமென அழகுபட அல்லாஹ் சொல்லிவிட்டான்.
மேலும் அவ்வசனத்தில், நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை அல்லாஹ்வே முன்னோக்கி" நீர் மற்ற மனிதர்களைப் போன்றவர்தான் என்று சொல்லி விடாமல், நீர் கூறுவீராக! (ஜனங்களே) நான் உங்களைப் போன்ற மனிதன்தான் ” என்று மக்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை சொல்வதற்கில்லை என்ற சமிக்ஞை“ குல் ” (கூறுவீராக!) என்ற பதத்தில் இருந்து தெரிய வருகின்றது.
மேலும் எல்லா நபிமார்களையும் அவர்கள் தம் பெயரைச் சொல்லியே (யா மூஸா, யா யஹ்யா, யா ஜகரியா, யா நூஹு போன்று) அழைக்கின்றான். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெயர்சொல்லி (யா முஹம்மது யா அஹ்மது போன்று குர்ஆனில் எவ்விடத்திலும் அழைக்கவில்லை. கண்ணியத்தோடும், மரியாதையோடும் யாஅய்யுஹன் நபிய்யு, யா அய்யுஹர் ரஸூலு' யாஅய்யுஹல் முஸ்ஸம்மிலு, நபியே! தூதரே “ போர்வை போர்த்தியவரே!” என்று சிறப்பு பெயர் களைக் கொண்டுதான் பல இடங்களில் அழைக்கின்றான்.
அல்லாஹ் தஆலாவே இவ்வளவு கண்ணியப்படுத்தியிருக்கும்போது நாம் எம்மாத்திரம்? அவர்களை சாதாரண மனிதர் என்று கூப்பிட (அஸ்தஃபிருல்லாஹ்).
" அவர்களைச் சாதாரண மனிதர்” என்ற அடிப்படையில் மனிதர் என்று அழைப்பது ஹராமாகும். இழிவு கண்ணோடு கூறுவது குப்ராகும்! "
[ஆதாரம்: பதாவா ஆலம்கீறி]
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ
அல்லாஹு தஆலா கூறுகிறான்: வலா தஜ்ஹரூலஹு-பில் கௌலி-உங்களிற் சிலர் சிலரை இரைந்து சப்தமிட்டு கொள்வது போன்று நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் சமூகத்திலும் சப்தமிட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் அறியாத வண்ணம் உங்கள் நற்கிரியைகள் அழிந்து போய்விடும்.
[ அல்குர் ஆன்: 49-2]
நற்கிரியைகள் அழிவது காபிர்களுக்குத்தான்,முஃமின்கள் நற்கிரியைகள் ஒரு போதும் அழிந்துவிடாது!
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
" அணுப்பிரமான நன்மை செய்தால் அதைக்கண்டுகொள்வான். அணுப்பிரமான தீமை செய்தால்அதையும் கண்டு கொள்வான். "
[அல்குர் ஆன்: 99-7]
இதிலிருந்து தெரிய வருவதாவது-நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் சமூகத்தில் சப்தமிட்டு பேசினால், அல்லது அவர்களின் குரலை விட உரத்த குரலில் பேசினால், ஈமான் அறியாத விதத்தில் பறிபோய்விடும் " என்பதாகும்.
இதே மாதிரி நம் பழக்க வழக்கங்களிலும் இருந்தே வருகின்றன. உதாரணமாக: பேரரசன், ஜனாதிபதி, உயர்அதிகாரி, நீதிபதி, தாய் தந்தையர், கணவர் இவர்கள்அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.சந்தேகமில்லை! என்றாலும் இவர்கள் முன் அவர்கள் தம் பெயரை சொல்லிக் கூப்பிடுவது அவமரியாதையாகும். சில சமயம் இதனால் தண்டனையும் கிட்டிவிடும்.
இது போன்றே மனிதராக நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மனிதராக இருந்தாலும் 'மனிதர்' என்று சொல்வதினால் மரியாதைக் குறைவு ஏற்பட்டு தண்டனையும் கிட்டிவிடும் என்று உணர்க!
கண்ணியமிக்க அல்ஆலிமுல் பாழில் நூஹ் தம்பி رَحِمَهُ الله அவர்கள் மேன்மை மிக்க அல் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி நாயகம் رضي الله عنه அவர்களின் புகழ் மாலையில் கூறுகிறார்கள்:
“ ஸல்லல்-இலாஹு-அலாவாகி - தின்மை விளைவித்திடும் வேதனையை விட்டும் காப்பாற்றிடும் மனிதரான முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் மீது இறைவா! கருணை புரிந்திடுவாயாக! அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்றவரல்ல. இரத்தினக் கல்லைப் போன்றவர்கள். இரத்தினம் கல் இனத்தை சேர்ந்திருந்தாலும் இதர கல்லைப் போன்றதல்ல.கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
இமாம் பூஸரி رضي الله عنه அவர்கள் புர்தா ஷரீபில் பாடியுள்ளார்கள்:
“ வகைப-யுத்ரிக்கு-பித்துன்யா ஹகீகதஹு ........
கனவில் பார்ப்பது கொண்டு மட்டுமே போதுமாக்கிக் கொள்ளும் கூட்டத்தினர் எப்படி நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களின் உள்ளமை-எதார்த்தத்தை அறிந்து கொள்வார்கள்?
வெளிரங்கமான இல்மை (அறிவைக்) கொண்டே வாதிடுபவர்களான அஞ்ஞான அறிவிலிகள் நபி صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான் அவர் மனிதர்தான் " என்று அறிவார்கள். எதார்த்த தத்துவத்தை அறவே தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள். தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள். மாறாக அவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான். நுபுவத்தினால் மட்டுமே அவருக்கு விஷேசம் கிட்டியது என்று பிதற்றித் திரிவார்கள் என்பது வெள்ளிடமலை!
நபிகள் கோமான் صَلّى اللهُ عليهِ وسلّمஅவர்களுக்கும் நமக்கும் அனந்தம் அனந்தம் சுருதி
(நகலிய்யத்) அடிப்படையிலும், யுக்தி (அகலியத்) அடிப்படை
யிலும் பாகுபாடு உண்டு என்பதை அடுத்து காணுவோம்.
No comments:
Post a Comment