Monday, 29 July 2019

தவஸ்ஸுல் (வஸீலா ) - 2

            வெவ்வேறு வழிமுறைகளைக் கொண்டு வஸீலா தேடுதல் 




1.
பீவி மர்யம் عليه السلام அவர்கள் வணக்கம் புரிந்த இடத்தைக் கொண்டு வஸீலா புரிந்த ஸெய்யிதினா ஜக்கரிய்யா நபி عليه السلام அவர்கள்

அல்லாஹ் கூறுகின்றான் 

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்.

[ அல் குர் ஆன் 3 :37 , மவுலானா அப்துல் ஹமீது பாக்கவியின் மொழிபெயர்ப்பு   ] 

இதற்கு அடுத்த ஆயத்தில் அல்லாஹுத்தஆலா, ஜக்கரிய்யா நபி عليه السلام அவர்கள் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே துஆ செய்ததையும் கூறுகின்றான் ,

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

 (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார்.

[ அல் குர் ஆன் 3 :38 , மவுலானா அப்துல் ஹமீது பாக்கவியின் மொழிபெயர்ப்பு   ] 

هُنَالِكَ என்ற சொற்பதத்தை உபயோகப்படுத்திஇது குறித்து உண்டாகும் சந்தேகங்களை ,பிழைகளை குரானே நீக்குகின்றது . குர்ஆனின் ஆயத்தை சிந்திக்கும் போது ,  இரவின் பின்னேரத்தில் எழுந்து அல்லாஹுத்தஆலாவை வணக்கம் புரிவது , ஸெய்யிதினா ஜக்கரிய்யா நபி عليه السلام அவர்களது தினசரி நடைமுறையாக இருந்துள்ளது . தமது  தினசரி நடைமுறையின் படி எழுந்த ஸெய்யிதினா  ஜக்கரிய்யா நபி عليه السلام அவர்கள் ,தாம் தினமும் வணக்கம் புரியும் இடத்தில்  வணங்காமல் , பீவி மர்யம் عليه السلام அவர்கள் வசித்துவந்த மாடத்திற்குள் சென்று துஆ செய்தார்கள் .

ஆக ஸெய்யிதினா  ஜக்கரிய்யா நபி عليه السلام அவர்கள்அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் குறிப்பிட்ட இடத்தையும்  ,குறிப்பிட்ட நேரத்தையும்  தேர்வு செய்தது புனித ஸ்தலங்களைக் கொண்டு வஸீலா  தேடுவது ஆகுமானது என்ற உண்மையை உறுதிப்படுத்துவதாகும்.

2. குர்ஆனின் ஒளியில் , புனித உடலினை தழுவிய, புனித ஆடையை  குணமளிக்க (ஷிபா) வஸீலாவாக  ஏற்பது : 

அல்லாஹுத்தஆலா ஸுரா யூஸுஃப்பில் குறிப்பிடுகின்றான் ,

 اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًا‌ۚ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ

"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். 

[ அல் குர் ஆன் 12 :93 , மவுலானா அப்துல் ஹமீது பாக்கவியின் மொழிபெயர்ப்பு   ] 


இதன் பின்னர் நடந்தவற்றை குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது , 

அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார்.
  [ அல் குர் ஆன் 12 :96 , மவுலானா அப்துல் ஹமீது பாக்கவியின் மொழிபெயர்ப்பு   ] 

மேற்குறிப்பிட்ட குர்ஆன்  வசனம் , நபிமார்களுடன் அல்லது வலிமார்களுடன் தொடர்புடைய பொருளைக் கொண்டு வஸீலா தேடுவது தவ்ஹீதை மறுக்கும் செயல் அல்ல என்று தெளிவாக விளக்குகின்றது .  இவ்வரலாற்றில் , சட்டையை அனுப்பியதும் அல்லாஹ்வின் தூதர் ,சட்டையை வஸீலாவாகக் கொண்டு  பார்வையை பெற்றவர்களும் அல்லாஹ்வின் தூதர் , என்பதை அல்லாஹ்வின் வேதம் பளிங்கு கண்ணாடி போல் தெளிவு படுத்துகின்றது .


அதன் நம்பகத்தன்மை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் குழப்பத்தையும் வெளிப்படுத்துபவர்கள்,எதார்த்தத்தில் குர்ஆனின் மறுப்பாளர்கள்  !  

இதற்கு பொருத்தமாக சத்திய தோழர்களான ஸஹாபா பெருமக்களின் அகீதாவை ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீத் நமக்கு கண்ணாடி போன்று வெளிச்சமிட்டு காட்டுகின்றது .

ஹதீத் எண் # 1  

ஸஹீஹ் முஸ்லிம் 



Volume : 1 Page : 859 Hadith number : 2069

Volume : 1 Page : 860



செய்யிதா அஸ்மா பின்த் அபூபக்கர் رضي الله عنها  அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டது . .. அதன்பிறகு அவர்கள் கூறினார்கள் : இதோ அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அங்கி .  விளிம்புகளிலும் , சட்டை கையிலும் உயர்த்தப்பட்ட வடிவத்துடன் நெய்யப்பட்ட ,பாரசீக துணியால் ஆன அந்த ஆடையை அவர்கள் என்னிடம் கொண்டு வந்து கூறினார்கள்:  அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அங்கி   அன்னை ஆயிஷா அவர்கள் இறக்கும் வரையில் அவர்களிடம் இருந்தது .பின்னர் அவர்களது வபாத்திற்கு பின் , எனக்கு உடைமை ஆயிற்று . அல்லாஹ்வின் தூதர்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இதனை அணிவார்கள் . நாங்கள்  அதனை கழுவி , நோயுற்றுவர்களுக்கு தந்து அதன் மூலம் குணம் அடைந்தோம் .

 [ ஸஹீஹ் முஸ்லீம் , பாப் 24, ஹதீத் எண் 5149 ,ஆன்லைன் பதிப்பு ,
    பாப் : அல் லிபாஸ் வஸ்  ஸீனா ,பாகம் 1, பக்கம் 859 ,ஹதீத் எண் 2069 ] 

கண்மணி நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது பரிசுத்த அங்கியை தமக்கு குணமளிக்கும் மூலமாக எடுத்துக் கொள்ளும் சத்திய ஸஹாபாக்களின் ஈமான் எங்கே ?

நாளை மஹ்ஷர் நாளில் தாஹா ரஸூல் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم
அவர்களின் உள்ளமை கொண்டு கேட்கப்படும் ஷபாஅத்தை  மறுப்போரை காணும் போது அவர்களின் ஈமானின் நிலையோ அந்தோ பரிதாபம் .

ஹதீத் எண் # 2 



حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ " - ص 343 -" رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ


ஹழ்ரத் அனஸ் رضي الله عنه  அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டது ," வறட்சி ஏற்பட்டால் அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப்   رضي الله عنه  அவர்கள் , ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் رضي الله عنه  அவர்களை மழைத் தொழுகையை தொழு வைக்குமாறு கூறுவார்கள் . ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப்   رضي الله عنه  அவர்கள் ,'யா அல்லாஹ் ! உன்னிடம் உனது தூதர் நாயகம் அவர்களின் பரிந்துரையைக் கொண்டு ,மழையை யாசித்தோம் . இப்போது எங்களின் நாயகம் அவர்களின் சிறிய தந்தையை அவர்களின் பரிந்துரையைக் கொண்டு வேண்டுகின்றோம் ,எனவே மழையை பொழியச் செய்வாயாக '. இன்னும் கூறினார்கள்  ,'அவர்களுக்கு மழை அருளப்பட்டது '.

ஆதாரம் : 

1) ஸஹீஹ் புஹாரி , கிதாப் : அல் இஸ்தஸ்கா ,  பக்கம் 245 , ஹதீத் எண் - 1010 .

Front cover Sahih Bukhari

Book : Al istasqa Chapter : Suaal An Nas Al Imam Alistasqa iza Qahatu Page : 245 Hadith number : 1010


2)  ஸஹீஹ் புஹாரி , கிதாப் : பழாயிலே அஸ்ஹாப் அந் நபி  ,அத்தியாயம் : ஜிக்ர் அல் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் , பக்கம் : 914 , ஹதீத் எண் : 3710 

Front cover Sahih Buhari

Book : Fadail e Ashaab An NABI SAW Chapter : Zikr Al Abbas Bin Abdul Muttalib R.A Page : 914 Hadith number : 3710
3) ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ,இமாம் இப்னு ஹிப்பான் , கிதாப் : அஸ் ஸலாஹ் , அத்தியாயம் : ஸலாத் அல் இஸ்தஸ்கா , வால்யூம் : 7 , பக்கம் : 110-111 , ஹதீத் எண் : 2861   

Front cover Sahih Ibn Hibban

 PDF Print Share Page 159 of 227    158. Imam Ibn e Hibban     Front cover Sahih Ibn Hibban           Book : As Salah Chapter : Salat Al Istasqa Volume : 7 Page : 110-111 Hadith number : 2861

4) முஜம் அல் அவ்சாத் ,இமாம் தப்ரானீ , வால்யூம் : 3 , பக்கம் 49 , ஹதீத் எண் : 2437

Front cover Ma'jam Al Ausath

Book : Mu'jam Al Ausath Volume : 3 Page : 49 Hadith number : 2437

5) ஸஹீஹ் இப்னு குஸைமா , இப்னு குஸைமா , கிதாப் : அஸ் ஸலாஹ் , அத்தியாயம் : இஸ்திபாப் அல் இஸ்தஸ்கா ,வால்யூம் : 2,பக்கம் 337-338,ஹதீத் எண் : 1421 

Sahih Ibn e Khuzimah

Book : As Salah Chapter : Istihbaab Al istasqa Bi Ba'd Qarabat An NABI (663) Volume : 2 page : 337-338 Hadith number : 1421

Book : As Salah Chapter : Istihbaab Al istasqa Bi Ba'd Qarabat An NABI (663) Volume : 2 page : 337-338 Hadith number : 1421

6) ஸுனன் அல் குப்ரா ,இமாம் பைஹகீ , வால்யூம் : 3, பக்கம் : 491 ,ஹதீத் எண் : 6427

Sunan al-Kubra

Volume : 3 Page : 491 Hadith number : 6427


 ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி  رضي الله عنه  அவர்கள் , 
அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப்   رضي الله عنه  அவர்கள் , ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் رضي الله عنه  அவர்களைக் கொண்டு சொல்லப்படும் இந்த தவஸ்ஸுலுடைய ஹதீதை தமது பிரசித்தி பெற்ற 'பத்ஹுல் பாரி 'நூலில் விளக்குகின்றார்கள் : 


Front Cover Fath ul Bari

Page : 577 Under Hadith number :1010 of Sahi bukhari


اللهم إنه لم ينزل بلاء إلا بذنب , ولم يكشف إلا بتوبة , وقد توجه القوم بي إليك لمكاني من نبيك


'யா அல்லாஹ் ! சத்தியமாக பாவங்களின் காரணமாகவே இன்னல்கள் இறங்குகின்றன ,பாவமன்னிப்பை கொண்டே அல்லாது அவை உயர்த்தப்படுவதில்லை. உனது திருத்தூதர் நபிகள் நாயகம்
அவர்களிடம் எனக்கு உள்ள தொடர்பின் காரணமாக , மக்கள் என் பொருட்டால் உன்னிடம் முன்னோக்கியுள்ளனர் '.


இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி  رضي الله عنه  அவர்கள் தமது  'பத்ஹுல் பாரி ' நூலில் மேலும் விளக்குகின்றார்கள் :  

إن رسول الله صلى الله عليه وسلم كان يرى للعباس ما يرى الولد للوالد , فاقتدوا أيها الناس برسول الله صلى الله عليه وسلم في عمه العباس واتخذوه وسيلة إلى الله

" நபிகள் நாயகம் ﷺ அவர்கள் , ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் رضي الله عنه  அவர்களை ஒரு மகன் தன் தந்தையை கருதுவது போல கருதினார்கள் . எனவே மக்களே ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் رضي الله عنه  அவர்களின் விஷயத்தில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை பின்பற்றுவதுடன் , அவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் பரிந்துரை தேட வேண்டும் ".

மேலும் அதே வாக்கியத்தில் கூறுகின்றார்கள் :

ويستفاد من قصة العباس استحباب الاستشفاع بأهل الخير والصلاح وأهل بيت النبوة , وفيه فضل العباس وفضل عمر لتواضعه للعباس ومعرفته بحقه 


ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் رضي الله عنه  அவர்களின் இந்த நிகழ்வைக் கொண்டு , ஸாலிஹீன்கள் ,நல்லடியார்கள் ,அஹ்லே பைத்துக்களைக்  கொண்டு பரிந்துரை  தேடுவது போற்றுதலுக்குரியதாகும் . "

இந்த ஹதீத் குறித்து  தமது நூலான  'ஷிபா உஸ் ஸிகாம் ,பக்கம் 377ல்' விளக்கம் அளித்துள்ள  ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஸுப்கி  رضي الله عنه  அவர்கள் , 



Front cover Shifa As Siqam

Book : As Shifa As Siqam Page : 376-377

Book : As Shifa As Siqam Page : 376-377


இந்த சம்பவத்தை கொண்டு ,எல்லா நல்லடியார்களைக் கொண்டும் தவஸ்ஸுல் ஆகுமானது என்று நாம் அனுமானும் கொள்கின்றோம் . இன்னும் முஸ்லிகள் யாரும் இதனை மறுக்கவில்லை , வேறு பிரிவினரைத் (பித்அத்திகளை)  தவிர . 

என்கிறார்கள் . 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...