குர்ஆன் , ஹதீதின் ஒளியில் தவஸ்ஸுலின் கோட்பாடு
குர்ஆன் கூறுகின்றது :
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَفَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا
தமிழாக்கம் :
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்புடையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
[ஸுரா அந் நிஸா - 4 : 64 , மவ்லானா அப்துல் ஹமீது பாக்கவியின் தமிழாக்கம் ]
இந்த வசனம் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களிடம் பரிந்துரை தேட அல்லாஹ்வின் நேரடியான கட்டளையாகும் .மேலும் இது முத்லக்கானது (குறிப்பிட்ட காலத்திற்கு கட்டுப்பட்டது ) அல்ல .
நவீன கால வஹாபிகள்(இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள் ,கைர் முகல்லித் ,அஹ்லே ஹதீத் ,ஸலபி ) கூறுவது போன்று , குர்ஆன் ஷரீபின் பாரம்பரியமான எந்த ஓர் தப்சீர் விரிவுரையாளரும் இவ்வசனம் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் இம்மண்ணுலகில் ஹயாத்தாக இருந்த காலம் மட்டுமே செயல்படுத்தத் தகுந்தது என்று கூறவில்லை .
குர்ஆன் ஷரீபின் பல விரிவுரை விளக்கங்களை காணும் முன்பு , நாம் பாமரர்களிடையே எழும் தர்க்க ரீதியிலான கேள்வியையும் ,அதன் விடையையும் காண்போம் .
கேள்வி : அல்லாஹுத்தஆலா அடியானுக்கு மிகவும் நெருக்கமாக (கரீப் ) இருக்கின்றான் என்னும் போது , " என்னிடம் கேளுங்கள் நான் உங்களுக்கு தருகின்றேன் " என்று கூறாமல் ஹக்குதஆலா நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களிடம் சென்று கூற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதேன் ?
பதில் : தவஸ்ஸுலை இன்கார்(நிராகரிப்பு) செய்பவர்கள் இந்த விஷயத்தை புரிந்துகொண்டால் ,இன்ஷா அல்லாஹ் இந்த பதிவு அவர்களுக்கு தெளிவைக் கொடுக்கும் . அல்லாஹுத்தஆலா தவஸ்ஸுலின் அணுகுமுறையை தனது அடியார்களுக்கு விரும்பவும் ,பிரிந்துரைக்கவும் செய்கின்றான் என்று குர்ஆனின் நஸ்ஸான (உறுதியான ஆதாரம்) ஆயத்தாக இது இருக்கின்றது .
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையாவது ,இரண்டுமே அனுமதிக்கப்பட்ட முறைகளாகும் .அதாவது ,
* அல்லாஹுத்தஆலாவிடத்தில் இடைப்பொருள் (வஸீலா) இல்லாமல் தனது தேவைகளை கேட்பது .
* வஸீலாவின் பொருட்டால் அல்லாஹுத்தஆலாவிடத்தில் தனது தேவைகளைக் கேட்பது .
இவ்விரு நடைமுறைகளும் நமக்கு நியமிக்கப்பட்டுள்ளன . இவற்றில் ஏதேனும் ஓர் கருத்தை நிராகரிப்பது என்பதானது குர்ஆன் ஷரீபை நிராகரித்து குப்ரில் கொண்டு சேர்ப்பதாகும் .
அன்பியாக்களின் தவஸ்ஸுல் இல்லாமல் நம்மிடையே குர்ஆன் , தொழுகை , நோன்பு ,ஹஜ் ,இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் நன்மையான காரியம் எதுவும் சாத்தியம் இல்லை .
தவஸ்ஸுல் ஷிர்க் ,பித்அத் என்று இருக்குமானால் , அது உயிரோடிருப்பவரைக் கொண்டு அல்லது மரணித்தவர்களைக் கொண்டு என்று அல்லாது , எல்லா நிலையிலும் ஷிர்க் ,பித்அத் என்றே இருக்கும் .
( ஏனெனில் ஷிர்க் உடைய வரைவிலக்கணம் உயிரின் மாற்றத்தைக் கொண்டு மாறுவது அல்ல . இது எவ்வாறெனில் உயிருள்ள ஓர் நபரின் சிலையை நிர்மாணிப்பது ஷிர்க் என்றால் ,உயிரற்றவரின் சிலையை நிர்மாணிப்பதும் ஷிர்க் தான் என்பது போல . )
1. இமாம் இப்னு கதீர் رضي الله عنه அவர்கள் மேற்சொன்ன ஆயத்தின் தப்சீரில் தவஸ்ஸுல் ஆகும் என்று கூறுகின்றார்கள் : -
وقد ذكر جماعة منهم الشيخ أبو منصور الصباغ في كتابه الشامل الحكاية المشهورة عن العتبي قال : كنت جالسا عند قبر النبي صلى الله عليه وسلم فجاء أعرابي فقال : السلام عليك يا رسول الله سمعت الله يقول " ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما " وقد جئتك مستغفرا لذنبي مستشفعا بك إلى ربي ثم أنشأ يقول : يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم ثم انصرف الأعرابي فغلبتني عيني فرأيت النبي صلى الله عليه وآله وسلم في النوم فقال : يا عتبي الحق الأعرابي فبشره أن الله قد غفر له " .

ஜமா(அநேக உலமாக்கள் ) இந்த மரபை கூறியுள்ளார்கள் . அவர்களில் அல் -ஷாமில் -அல் -ஹிகாயத் -அல் - மஷுரா என்னும் நூலை எழுதிய அபூ மன்சூர் அல் ஸப்பாக் அவர்களும் ஒருவர் . உத்பியின் கூற்றுப்படி ,ஓர் முறை அவர் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ரவ்ழா ஷரீபின் அருகில் அமர்ந்திருந்த பொழுது ,ஓர் காட்டரபி வந்து ," அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே !அஸ்ஸலாமு அலைக்கும் . அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாக நான் கேள்வியுற்றேன் : ' (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்புடையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். '
நான் உங்களிடம் வந்துள்ளேன் . தங்களை அல்லாஹ்விடத்தில் எனது இடைப்பொருளாக ஆக்கி , எனது பாவங்களுக்கு மன்னிப்பு கோரியவனாக ,இந்த நோக்கத்திற்காக வந்துள்ளேன் ". அதன் பின்னர் அவர் ,"சமவெளிகள் மற்றும் மலைகளின் மதிப்பை மேம்படுத்திய புதைக்கப்பட்ட மக்களில் மிக உயர்ந்தவர்களே ! இந்த மண்ணறைக்காக எனது உயிர் தியாகமாகட்டும், கருணை மற்றும் மன்னிப்பின் (உருவகமான ) தங்களைக்(கண்மணி நாயகம் ) கொண்டு பிரகாசிக்கின்றது " என்று கூறினார் . அதன் பின்னர் அந்த காட்டரபி சென்று விட்டார் .நானும் உறங்கி விட்டேன் . எனது கனவில் தோன்றிய நாயகம்
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் கூறினார்கள் ,'ஓ ! உத்பி ,அந்த காட்டரபி சொன்னது சரியே ,அவரிடம் சென்று அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து விட்டான் என்ற நற்செய்தியை அவரிடம் நீர் கூறும் '
[ இப்னு கதீர் , தப்சீருல் குர்ஆன் ,பாகம் 4,பக்கம் 140 , 4:64 என்ற வசனத்தின் கீழ் ]
முக்கியக் குறிப்பு :
இந்த தகவல் இமாம் இப்னு கதீர் رضي الله عنه அவர்களின் அழகான கொள்கையை படம் பிடித்து காட்டவே . அன்னார் இதை ஜமாஅ (உலமாக்களின் குழு ) அறிவித்துள்ளதாகவும் , ஹிகாயத் அல் மஷுர் (புகழ் பெற்றது ,இன்னும் இதற்கு ஜரஹ் ஏதும் அளிக்கவில்லை ) என்றும் கருத்தில் கொண்டுள்ளார் . இதை இங்கு விளக்கும் மற்றோரு காரணம் தப்சீர் இப்னு கதீரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இதை வேண்டுமென்றே நீக்கியுள்ள ஸலபி வஹாபிகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தவே .
இத்தகைய ஓர் வழிமுறை ஷிர்கானது என்று ஒரு சிறு சாடை தென்பட்டாலும் ,அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அமல்களின் பிரிவில் மேற்கோள் காட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், அதற்கு உறுதியாக மறுப்பு வழங்கி இருப்பார்கள் .
மேலதிகமாக ஆதாரங்களை அளிக்கும் முன்னர்,ஷாஃபி மத்ஹபின் மாபெரும் ஹதீத் கலை வல்லுநரும் , முஹத்தீஸீன்களில் மிக உயர்ந்த தர்ஜா உடையவர்களுமான , ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ரியாளுஸ் ஸாலிஹீன் நூலின் ஆசிரியருமான இமாம் நவவி رضي الله عنه அவர்களின் அழகிய விளக்கத்தை மேற்கோள் காட்டுகின்றோம் .
2. இமாம் நவவி رضي الله عنه அவர்கள் தவஸ்ஸுலை உறுதியாக நிரூபிக்கும் வண்ணம் கூறினார்கள் : -
ثم يرجع إلى موقفه الاول قبالة وجه رسول الله صلى الله عليه وسلم ويتوسل به في حق نفسه ويستشفع به إلى ربه سبحانه وتعالى ومنأحسن ما يقول ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا عن العتبي مستحسنين له قال (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وسلم فجاء أعرابي فقال السلام عليك يا رسول الله سمعت الله يقول (ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما) وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي
" முஸாபிர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது முகத்தை முன்னோக்கி திரும்பியவராக , நபியவர்களை தமக்கு இடைப்பொருளாக (வஸீலா ) ஆக்கி , அல்லாஹ்வை அடைவதற்கு நபியவர்களின் பரிந்துரையை (ஷபாஅத்தை) நாடிட வேண்டும் . இது விஷயமாக 'சிறந்த அறிவிப்பு ' இமாம் அல் மர்வாதி رضي الله عنه அவர்களும் , காழி அபூ அத் -தைப் رضي الله عنه அவர்களதும் ஹிகாயத் ஆகும் , ' உத்பி உடைய அறிவிப்பை என்னுடைய மற்ற எல்லா தோழர்களும் இதை ஹசன் / முஸ்தஹப் (مستحسنين له) என்று கூறி அறிவித்துள்ளனர், அதாவது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது கபூர் ஷரீபை ஜியாரத் செய்த ஓர் காட்டரபி , கபூர் ஷரீபின் அருகே அமர்ந்து கூறினார் , ' உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நாயகமே ! அல்லாஹு தஆலா கூறியதாக நான் கேட்டுள்ளேன்
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
[ அல் குர்ஆன் 4 : 64 ]
ஆகையால் , நான் தங்களிடம் என்னுடைய பாவங்களுக்கு பிழை பொறுக்கவும் , எனக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யவும் வேண்டி வந்துள்ளேன் .
[ நூல் - அல் மஜ்மூ , இமாம் நவவி , பாகம் 8 ,பக்கம் 274 ]
இமாம் நவவி رضي الله عنه அவர்களது இந்த அழகிய விளக்கம் , மாபெரும் முஹத்திஸீன்கள் இந்த அறிவிப்பை அங்கீகரித்தோடு மட்டுமல்லாமல் , இந்த செயலை முஸ்தஹப் என்றும் கூறியுள்ளனர் என்பது பளிங்கு கண்ணாடி போல் தெளிவாக தெரிகின்றது .
பாரம்பரிய ஹதீதுக் கலை வல்லுநர்களை விடவும் ,குறிப்பாக ஷாஃபி மத்ஹபின் மிகப்பெரும் ஆளுமையும் , ஸஹீஹ் முஸ்லிமின் சிறந்த விளக்கவுரையாளர் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம் நவவி رضي الله عنه அவர்களை விடவும் நாங்கள் சிறந்தவர்கள் என்று நவீன கால வஹாபிகள் நினைப்பது அவலநிலை .
இன்னும் வஹாபிகள் ஏற்றுக் கொண்டுள்ள பாரம்பரிய அறிஞர்கள் ,ஹாபிழ் இப்னு கதீர் رضي الله عنه அவர்கள் இன்னும் பலர் இந்த அறிவிப்பை உறுதியான ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர் . இந்த ஹதீதின் ஸனதில் நாம் செல்லாததன் காரணம் ஹதீத் முஹத்திஸீன்கள் அங்கீகரித்தை , இன்றைய நவீன வஹாபிகள் பலவீனமானது (ளயீப் ) என்று சொன்னாலும் நாம் அதனை பயனற்றது என்றே கருதுவோம் . ஏனெனில் முஹத்திஸீன்கள் நம்மை விட ஸஹீஹ் ,ளயீப் என்று தரம் அறிந்திருந்தாலும் அதனை அவர்கள் மறுக்கவில்லை .
இனி வஹாபிகள் பிடிவாதமாக இருந்தால் இன்னும் தொடரும் அநேக ஸஹீஹான ஹதீதுகளைக் கொண்டு தவஸ்ஸுல் அனுமதிக்கப்ட்டுள்ளதை விளக்கியுள்ளோம் .
முக்கிய குறிப்பு :
இந்த அறிவிப்பை மறுக்க , வஹாபிகளின் ஆதாரங்கள் அனைத்தும் இப்னு தைமிய்யா அல் -முஐஸிமி மற்றும் அவரது வெறிபிடித்த மாணவர் இப்னு அப்துல் ஹாதி ஆகியோரின் வாதங்களையே சுற்றி சூழலும் என்பதை நாம் காண்கிறோம் .( இதிலிருந்து வஹாபிகள் அகீதாவில் தக்லீத் செய்பவர்களாக இருக்கின்றனர் ) . இப்னு அப்துல் ஹாதி எதார்த்தில் தாமும் ,தமது ஆசிரியரும் உலமாக்களை வசைபாடுபவர்கள் , அவதூறு செய்பவர்கள் என்று உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார் .
தமது மறுப்பு புத்தகத்திற்கு அவர் வைத்த தலைப்பே பரிதாபகரமானது . அதோடு இமாம் ஸுப்கி رضي الله عنه அவர்கள் இப்னு தைமிய்யாவின் கொள்கையை அடியோடு அழித்தே விட்டார்கள் என்பதையும் பளிங்கு போல் காட்டுகின்றது . இப்னு அப்துல் ஹாதி தமது நூலுக்கு இட்ட பெயர் 'ஸாரிம் அல் முன்கி பீ ரத்தி அலா ஸுப்கி ' . இப்னு தைமிய்யாவின் மீதான முஹப்பத்தால் அந்த நூல் முழுவதும் வசைபாடியும் , அவதூறும் செய்தார் . ஆனால் மற்றோருபுரம் இப்னு அப்துல் ஹாதி இப்னு தைமிய்யாவின் கப்ரை சுற்றி வலம் வருவதை மலக்குமார்களின் செயலுடன் ஒப்பிட்டார் ( பார்க்க : அல் உகுத் அத் துர்ரிய்யா 1/434 ) . இதன் மூலம் தாம் இப்னு தைமிய்யாவை கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களைக் காட்டிலும் அதிகம் நேசிப்பதை வெளிப்படுத்தினார் . அதனால் தான் அல்லாஹுத்தஆலா தவஸ்ஸுலைப் பற்றிய நூற்களில் இமாம் ஸுப்கி رضي الله عنه அவர்களது ஷிபா உஸ் ஸிகாம் நூலை ஆக சிறந்ததாக ஆக்கினான் . இன்றுவரை அதற்கு நிகரான ஓர் நூல் வரவில்லை .
3. துர் அல் மன்துர் நூலில் இமாம் ஜலாலுத்தீன் ஸுயுத்தி رضي الله عنه அவர்கள் :
" وأخرج البيهقي عن أبي حرب الهلالي قال : حج أعرابي إلى باب مسجد رسول الله صلى الله عليه وسلم أناخ راحلته فعقلها ثم دخل المسجد حتى أتى القبر ووقف بحذاء وجه رسول الله صلى الله عليه وسلم فقال : بأبي أنت وأمي يا رسول الله جئتك مثقلا بالذنوب والخطايا مستشفعا بك على ربك لأنه قال في محكم تنزيله ولو إنهم إذ ظلموا أنفسهم جاؤوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما
இமாம் அல் பைஹக்கீ رضي الله عنه அவர்கள் அபி ஹர்ப் அல் ஹிலாலி அவர்கள் சொல்லியதாக அறிவிக்கிறார்கள் ....( காட்டரபி உடைய சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்கள் )
[ நூல் : தப்சீர் துர் அல் மன்துர் , 4 :64 ]
4. தவஸ்ஸுல் குறித்து இமாம் குர்தூபி رضي الله عنه அவர்கள் :
روى أبو صادق عن علي قال : قدم علينا أعرابي بعدما دفنا رسول الله صلى الله عليه وسلم بثلاثة أيام , فرمى بنفسه على قبر رسول الله صلى الله عليه وسلم وحثا على رأسه من ترابه ; فقال : قلت يا رسول الله فسمعنا قولك , ووعيت عن الله فوعينا عنك , وكان فيما أنزل الله عليك " ولو أنهم إذ ظلموا أنفسهم " الآية , وقد ظلمت نفسي وجئتك تستغفر لي . فنودي من القبر إنه قد غفر لك .
ஹழ்ரத் அபூ ஸாதிக் رضي الله عنه அவர்களது தொடர்பின் மூலம் அறியப்படுவது , ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , " நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இம்மண்ணுலகை விட்டு மறைந்து மூன்று நாட்கள் கழித்து , ஓர் காட்டரபி வந்து ,நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது கபூர் ஷரீபை சூழ்ந்து கொண்டு , மண்ணை அள்ளி தனது தலையின் மீது வீசினார் . அவர் கூறினார் , ' யா றஸூலல்லாஹ் ! நீங்கள் பேசினீர்கள் நாங்கள் கேட்டுக்கொண்டோம் , நீங்கள் அல்லாஹ்விடம் இருந்து கற்றீர்கள் ,நாங்கள் உங்களிடம் இருந்து கற்றோம் . அல்லாஹ் உங்களுக்கு அனுப்பியவற்றில் பின்வருவது (4:64) .பாவியாகிய நான் ,உங்களை நாடி வந்துள்ளேன் நாயகமே ! நீங்கள் எனக்காக கேட்பீர்கள் என்று ? .அதன் பின் கப்ரு ஷரீபில் இருந்து ஓர் குரல் ஒலித்தது , ' சந்தேகமின்றி நீர் பிழை பொறுக்கப்பட்டீர் ! ' .
[ நூல் - தப்சீர் அல் குர்தூபி , அல் ஜாமி லி அஹ்காம் அல் குர்ஆன் , பாகம் 6,பக்கம் 439, ஸுரா 4:64 ]
காட்டரபியின் சம்பவம் கீழ்கண்ட நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன :
1. ஷுஅப் அல் ஈமான் , பாகம் 3,பக்கம் 495-496,ஹதீத் எண் 4178ல் இமாம் பைஹக்கீ அவர்கள்
2.அல் முக்னி , கிதாப் அல் ஹஜ் , பாகம் 5,பக்கம் 465 ல் இப்னு குதாமா

தப்சீர் அல் குர்தூபி |
பாகம் 6,பக்கம் 439 |
காட்டரபியின் சம்பவம் கீழ்கண்ட நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன :
1. ஷுஅப் அல் ஈமான் , பாகம் 3,பக்கம் 495-496,ஹதீத் எண் 4178ல் இமாம் பைஹக்கீ அவர்கள்
2.அல் முக்னி , கிதாப் அல் ஹஜ் , பாகம் 5,பக்கம் 465 ல் இப்னு குதாமா
3. இப்னு அஸாகிர் தமது தஹ்தீப் தாரீக் திமிஷ்க் அல் கபீர் / தாரீக் இப்னு அஸாகிர் என்ற புகழ்பெற்ற நூலில் குறிப்பிட்டுள்ளதாக இமாம் ஸுப்கி அவர்கள் தமது ஷிபா உஸ் ஸிகாம் பீ ஜியாரத்தி கைரில் அனாம் நூலில் (46 -7 ) நூலில் மேற்கோளிட்டுள்ளார்கள் .
4. தப்சீர் அல் பஹ்ர் அல் முஹீத் (3/282 , தாருல் பிக்ர் பதிப்பு அல்லது பாகம் 3,பக்கம் 269 , ஸுரா 4:64 ல் ) இமாம் அபூ ஹய்யான் அல் அந்தலூசி அவர்கள்
5. கன்ஜூல் அமால் (1/714 ,ஹதீத் எண் 10422) நூலில் இமாம் அல் முத்தக்கி அல் ஹிந்தி அவர்கள்
6. அல் மஜ்மூ (8/202-203 ) நூலில் இமாம் நவவி அவர்கள்
7. அல் ஜவ்ஹர் அல் முனஜ்ஜம் ,பக்கம் 51 ல் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைத்தமீ அவர்கள்
இன்னும் அநேக இமாம்கள் உள்ளனர் .இவர்கள் யாரும் இதனை ஷிர்க் ,பித்அத் என்று குறிப்பிடவில்லை .
குர்ஆன் கூறுகின்றது :
وَلَمَّا جَآءَهُمْ كِتَـبٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُواْ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَـفِرِينَ
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!
[2:89]
இமாம் குர்துபி அவர்கள் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள் ," கைபர் பகுதியைச் சேர்ந்த யூதர்கள் கடஃபன் பழங்குடிகளுடன் போரில் இருந்தார்கள் . அவர்கள் ஒருவரை ஒருவர் களத்தில் சந்தித்த பொழுது யூதர்கள் தோற்றனர் . யூதர்கள் பின்வரும் வேண்டுதலுடன் மீண்டும் போரிட்டனர் , ' இறைவா ! இறுதி காலத்தில் அனுப்புவதாக எங்களிடம் வாக்களிக்கப்பட்ட உம்மி நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது பொருட்டால் உன்னிடம் இறைஞ்சுகின்றோம் . அவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக ' . இப்னு அப்பாஸ் அவர்கள் மேலும் கூறினார்கள் : எப்போதெல்லாம் எதிரிகளை சந்திக்க நேர்ந்ததோ ,அப்போதெல்லாம் இந்த துஆவைக் கொண்டு கடஃபன் பழங்குடிகளை வெற்றி கொண்டனர் . ஆனால் நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் நபித்துவத்தை வெளிப்படுத்திய பொழுது ,நபியவர்களை நிராகரித்தனர் . எனவே அல்லாஹ் வஹீ மூலம் ,' இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இறுதி நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது பொருட்டாலும் , இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள்.அதாவது உங்களின் பொருட்டால் யா முஹம்மது ! '
[ தப்சீர் குர்துபி , அல் ஜாமி லி அஹ்காம் அல் குரான் , பாகம் 2,பக்கம் 89-90 ,ஸுரா 2:89 ]
தப்ஸீர் குர்துபி ,பாகம் 2,பக்கம் 89-90 |
மதிப்புமிக்க இந்த தப்ஸீர்களில் சிக்கல் இருக்கமானால் , ஸஹீஹ் ஹதீதுகளின் ஆதாரத்தில் தவஸ்ஸுல் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
No comments:
Post a Comment