Thursday, 14 March 2019

திப்யானுல் ஹக் - பகுதி 1

திப்யானுல் ஹக் (சத்திய விளக்கம் )


அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் ,அஷ் ஷெய்குல் காமில் ,அஷ் ஷாஹ்  முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸுபி காதிரி காஹிரி  قدس الله سره العزيز


வெளியீட்டு தேதி : முதல் பதிப்பு,ஹிஜ்ரி 1431,புனித ரமழான் பிறை 24
ஈஸவி 2010,செப்டம்பர் 4

வெளியீடு : ஹிஸ்புல்லாஹ் சபை,ஸூபி மன்ஸில்,காயல்பட்டணம்-628204. 


வஸீலா தேடுதல் : 


  சங்கைமிகு நபிமார்கள் , வலிமார்கள் ,நல்லடியார்களைக் கொண்டு வஸீலா தேடுவது ,உதவிக்கு அழைப்பது , இரட்சிப்புத் தேடுவது , சிபாரிசு வைப்பது ,முன்னோக்குவது எல்லாம் நம் ஸுன்னத் வல் ஜமாத்தினரிடம் ஆகுமாகும் .

இவைகள் சங்கைமிகு நபிகள் நாயகம் ﷺ ,மற்றும் நபிமார்கள் ,வலிமார்கள் ,நாதாக்கள் , குர்ஆன் ,ஹதீஸ்கள் , கண்ணியமிகு இமாம்களின் சொற்கள் ,செயல்களின் மூலம் தரிப்பட்டவைகளாகும் .

இவைகளை வழிகேடர்கள் தங்களது அறியாமையினால் அல்லது மனமுரண்டாக ,பிடிவாதமாகத்தான் மறுப்பார்கள் .

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ

" ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் அவனளவில் வஸீலா தேடுங்கள் . அவன் வழியில் போர் புரியுங்கள் . நிச்சயம் ஜெயசீலராவீர்கள் . "     


(அல் குர்ஆன் 5:35)  

இங்கு வஸீலா என்பது குறித்து நல்வணக்கங்கள் ,நற்கிரியைகள் என்றும் ,அவைகளைச் செய்த நல்லோர்கள் என்றும் இரு கருத்துக்கள் தப்சீர்களில் எழுதப்படுள்ளது .    நல்வணக்கங்கள் ,நற்கிரியைகள்  என்பதைக் காண அவைகளை செய்த புண்ணியவான்கள் என்பது மிக பொருத்தமாகும் .

 நல்வணக்கங்கள்  என்பது அஃராழ் - ஆதேயங்களாகும் ,அவைகளை செய்தவர்கள் தாத்து - ஆதார பொருள்களாகும் . அஃராழுகளுக்கே மதிப்பும் ,அந்தஸ்தும்  இருக்குமானால்  ஆதாரமான நபிமார்கள் , வலிமார்களை முன்னிறுத்தி வேண்டினால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை . நம் நல்வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா ? என்பது சந்தேகமானது ,நிச்சயமற்றது .

மேலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்ட தக்வாவுக்குள்  எல்லா      நல்வணக்கங்கள் அனைத்தும் உள் அடங்கிவிட்டபின் ,அவனளவில் நல்வணக்கங்களைக் கொண்டு வஸீலா தேடுங்கள் என்பது பொருத்தமில்லாததாகும்  .

ஹதீஸும் ,இமாம்களின் சட்டமும் உள்ளடங்கியதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர்  رضي الله عنه , இமாம் நவவி  رضي الله عنه  அவர்களின் "ஈழாஹ்" என்னும் நூலின் 500 வது பக்கத்தின் ஒரக் குறிப்பில் எழுதியதை இவண் தருகிறோம் . 

" நபிகள் நாயகம்  ﷺ   அவர்களைக் கொண்டு வஸீலா - உதவி தேடுவது முன்னோர்களான நபிமார்கள் , அவ்லியாக்கள் மற்றுமுள்ளவர்களின் நடைமுறையாகும் . 

ஆதார ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் கீழ்வருகிறது .இந்த ஹதீஸை இமாம்  
ஹாக்கிம்  رضي الله عنه  அவர்கள் அறிவித்து இது சரியான ஹதீஸ் என்றும் கூறுகின்றார்கள் .


حدّثنا علي بن حمشاذ العدل إملاء ، ثنا هارون بن العباس الهاشمي ، ثنا جندل بن والق ، ثنا عمرو بن أوس الأنصاري ثنا سعيد بن أبي عروبة ، عن قتادة ، عن سعيد بن المسيب ، عن ابن عباس رضي الله عنهما قال: أوحى الله إلى عيسى عليه السلام: يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به، فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار، ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن.

هذا حديث صحيح الإسناد ولم يخرجاه

 நபிகள் நாயகம்  ﷺ  அவர்கள்  கூறுகின்றார்கள் : -

" தவறை செய்யிதினா ஆதம்  عليه السلام அவர்கள் செய்த பொழுது ,இறைவா ! முஹம்மது ﷺ  அவர்களின் பொருட்டால் என்னை மன்னித்தே தவிர என்னை விட்டு விடாதே என்றார்கள்  . உடனே ,ஆதமே ! எப்படி முஹம்மதை  அறிந்தீர் . நான் அவரை படைக்கவே இல்லையே என்று அல்லாஹ் கேட்டான் .

இறைவா ! உனது கரம் கொண்டு என்னை படைத்து உன் ரூஹில் நின்றும் என்னில் ஊதிய போது என் தலையை உயர்த்தினேன் . அர்ஷின் தூண்களின் மீது "லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் " என்று எழுதப்பதைக் கண்டேன் . உனது பெயருடன் படைப்பினங்களில் மிகச் சிறந்தவரைத் தவிர வேறு ஒருவரையும் சேர்க்க மாட்டாய் என்பதை அறிந்தேன் என்று ஆதம் நபி  عليه السلام அவர்கள்  சொன்னார்கள் .

ஆதமே உண்மை சொன்னீர் .நிச்சயமாக அவர் படைப்பினங்களில் மிகச் சிறந்தவர் தாம் . அவர் பொருட்டைக் கொண்டு நீர் என்னிடம் கேட்டதினால் உன்னை மன்னித்தேன் . அவர் இல்லையாயின் உன்னை படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னான் ." 

இமாம் நஸயீ رضي الله عنه  அவர்களும் ,இமாம் திர்மிதி رضي الله عنه  அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்து இது சரியானது என்றும் இமாம் திர்மிதி رضي الله عنه  அவர்கள் இதை சரிக்கண்டும் உள்ளார்கள் .


front cover dalail un nubuwwah published by dar al-kutub al-ilmiyah beirut lebanon


Imam Bayhaqi,  Book : Dalail An Nubuwwah Volume : 6 Page : 166


Imam Bayhaqi,  Book : Dalail An Nubuwwah Volume : 6 Page : 167


ண் பார்வை இழந்த ஒருவர் நபிகள் நாயகம் ﷺ  அவர்களிடம் வந்தார் . எனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்றார் . அதற்கு நாயகம் ﷺ  அவர்கள் ,நீர் நாடினால் துஆ செய்கிறேன் ,நீர் நாடினால் பொறுமையாக இருங்கள் .அதுதான் உமக்கு நல்லது  என்று சொன்னார்கள் .அதற்கு அந்த மனிதர் துஆச் செய்யுங்கள் என்றார் . அதற்கு நாயகம் 
 ﷺ  அவர்கள் ,நல்லபடி உளூ செய்து இந்த துஆவைக் கொண்டு துஆ செய்யுங்கள் என்றார்கள் .

இறைவா ! உனது நபி முஹம்மத் ﷺ    நபிய்யுர் ரஹ்மத் -அருள் நபியைக் கொண்டு கேட்கிறேன் ,முன்னோக்குகிறேன் . யா முஹம்மது - உங்களைக் கொண்டு எனது இரட்சகனின் பக்கம் எனது தேவை நிறைவேற முன்னோக்குகிறேன் . என்னில் அவர்களது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக !என்பது அந்த துஆ .

இமாம் பைஹகி رضي الله عنه  அவர்கள்  இந்த ஹதீஸை சரிகண்டும் ,அம்மனிதர் பார்வையுள்ள மனிதராக நின்றார்கள் (சென்றார்கள் ) என்றும் அறிவிக்கிறார்கள் . 

நபி நாயகத்தை முன்னிறுத்தி கேட்பதும் , சிபாரிசுக்கு அழைப்பதும் , உதவி தேடுவதும் ,யா முஹம்மது என்று மரியாதையாக அழைப்பதும் ,துஆ கேட்கும் பொழுது சுத்தமாக ஒளுவுடன் இருப்பது நல்லது என்றும் இன்னும் பல கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஹதீஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது .

நபிகள் நாயகம் ﷺ  அவர்கள் தங்களது துஆவில் உனது நபியின் பொருட்டாலும் ,எனக்கு முன்னால் உண்டான நபிமார்களின் பொருட்டாலும் என்று துஆச் செய்வார்கள் என்று இமாம் தப்ரானி رضي الله عنه  அவர்கள் உறுதியான தொடரைக் கொண்டு அறிவிக்கிறார்கள் .

இமாம் இப்னு ஹஜர் رضي الله عنه  அவர்கள் கூறுகின்றார்கள் ,"தவஸ்ஸுல் -வஸீலா தேடுவது ,இரட்சிப்பு தேடுதல் , ஷஃபாஅத்து தேடுதல் , தவஜ்ஜுஹு -முன்னிறுத்தி வேண்டுதல் , நபிகள் நாயகத்தைக் கொண்டும் மற்ற நபிமார்களைக் கொண்டும் ( ஆகும் என்பதில் ) வித்தியாசம் இல்லை . (இதை எவரும் மறுக்கவில்லை ) அவ்லியாக்களைக்  கொண்டும் இவ்வாறு தான் (ஆகும் ). "

இப்னு அப்துஸ் ஸலாம் அவர்கள் இதை (அவ்லியாக்களை கொண்டு மட்டும் ) மறுத்த போதிலும் இமாம் ஸுப்கி رضي الله عنه  அவர்கள் ( இதை ) ஆதரித்துள்ளார்கள் .

காரணம் -அமல்களை - வணக்கங்களைக் கொண்டு வஸீலா தேடுவது இவைகள் அஃராழுகள் -ஆதேயங்களாக இருப்பதுடன் ஆகும் என்று வந்துள்ளது .சிறப்பிற்குரிய தாத் - ஆதார பொருளாக இருக்கும் அவ்லியாக்களை (நேரடியாக ) கொண்டு  தேடுவது மிக மிக ஏற்றமாகும் .

இன்னும் ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்  رضي الله عنه  அவர்களைக் கொண்டு அமீருல் மூஃமீனின்   ஹழ்ரத்  உமர் رضي الله عنه  அவர்கள் மழை வருசிக்கத் தேடினார்கள் . இதை யாரும் மறுக்கவில்லை . நபி நாயகத்தைக் கொண்டு வஸீலா தேடுவதின் கருத்து சில சமயம் நபி நாயகத்திடமே (நேரடியாக) தேடுவதாகும்  . ஏன் ? அவர்கள் ஹயாத்தாகவே இருக்கின்றார்கள் . அவர்களிடம் கேட்பவர்களின்   கேள்வியைக் கேட்கின்றார்கள் .

நீண்டதொரு ஹதீஸில் :-  ஜனங்களுக்கு அமீருல் மூஃமீனின்   ஹழ்ரத்  உமர் رضي الله عنه  அவர்களது கிலாபத் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது . ஒருவர் நபிகள் நாயகம் ﷺ  அவர்களது புனித கப்ருக்கு வந்தார் . "யா ரஸூலல்லாஹ் ! உங்களது உம்மத்தினர்களுக்கு மழை பொழியுங்கள் " என்று கூறினார் . அவருக்கு கனவில் தோன்றி "மழை பொழியும் "என்று அறிவித்தார்கள் .  அதன் பிரகாரம் மழை பொழிந்தது . 

ஆதாரம் : இமாம் நவவி رضي الله عنه  அவர்களின் ஈழாஹ் எனும் நூலின் ஓரக்குறிப்பில்   அல்லாமா இப்னு ஹஜர் رضي الله عنه  அவர்கள் ,பக்கம் 500.



வஸீலா தேடும் வகைகள் மூன்று : 


Shifa al Siqaam  fi Ziyarat Khayr al Anaam

1 . இறைவா இன்ன அவ்லியாவின் பொருட்டால் எனது இன்ன காரியத்தை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்பது .

2. இன்ன அவ்லியாவே, எனது இன்ன காரியம் நிறைவேற அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அவ்லியாவிடம் கேட்பது .

3.இன்ன அவ்லியாவே எனது இன்ன காரியத்தை நீங்களே நிறைவேற்றித் தாருங்கள் என்று  அவ்லியாக்களிடம் கேட்பது .

[நூல் - ஷிபா உஸ் ஸகாம் ,பக்கம் 134 ]   

எந்த வகையைக் கொண்டு கேட்டாலும் எதார்த்தத்தில் அல்லாஹ் سبحانه و تعالى
விடமிருந்து தான் வருகின்றது . அவனேதான் காரியங்களை உண்டாக்குகின்றான் . அவ்லியாக்கள் உதவி - காரியம் உண்டாவதற்கு ஸபபு  - காரணமாகவும் ,மள்ஹர் - உதய ஸ்தானமாகவும் இருக்கிறார்கள் .

அல்லாஹ்   سبحانه و تعالى‎ அவர்களுக்கு கொடுத்த சக்தியைக் கொண்டுதான் செய்கிறார்கள் . அல்லாஹ்வின் சக்தி இல்லாமல் சுயமாக செய்கிறார்கள் என்று எந்த முஸ்லிமும் நம்ப மாட்டான் .நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வின் கற்பனையைக் கொண்டு தான் நடக்கின்றது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும் .

உலகில் நடக்கும் செயல்களை எல்லாம் அவைகள் வெளியாகும் வழியளவில் சேர்ப்பது, நிஸ்பத்து மஜாஸி  (இரவலான சேர்மானம் ) என்றும், செயலுடைய அல்லாஹ் அளவில் சேர்ப்பதை நிஸ்பத்து ஹகீகி (எதார்த்தமான சேர்மானம் ) என்றும் மார்க்க வல்லுனர்கள் கூறுகின்றார்கள் .குர்ஆன் ஹதீஸிலும் வந்துள்ளன. இந்த முறையில்தான் உலகாதி காரியங்களும் ,நடைமுறையும் உள்ளன .

இந்த அடிப்படையில்தான் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்பதும் , அவர்கள் நிறைவேற்றித் தருவதுமாகும் . ஹகீகி ,மஜாஸி விளங்காமல் குழம்புவதும் , குழப்புவதும் மடமையாகும் . 


கப்ருகளை , புண்ணிய ஸ்தலங்களை ,பெரியார்களின் கை,கால்களை முத்தமிடுதல் :-  



இவைகள் அனைத்தும் ஆகுமானதாகும் .அதிலும் குறிப்பாக கைகளை முத்தமிடுவது ஸுன்னத்தாகும் . இமாம் அல் ஹாபிழ் ஈராக்கி رضي الله عنه  அவர்கள் கூறுகின்றார்கள் :- 

" புண்ணிய ஸ்தலங்களை பரக்கத்தை நாடி முத்தமிடுவதும் , ஸாலிஹீன்கள் -நல்லவர்கள் கை,கால்களை நல்லெண்ணத்தை பொறுத்து முத்தமிடுவதும் , அழகானதும் ,புகழப்பட்டதுமாகும் . "

நூல் - உம்தத்துல் காரீ ஷரஹுல் புஹாரி ,பாகம் 4,பக்கம் 607.
            பதாவா பிக்யத்துல் முஸ்தர்ஷிதீன் , பாகம் 1, பக்கம் 357 .

ஹஜருல் அஸ்வத் கல்லை    முத்தமிடுவதில் நின்றும் ஸாலிஹீன்களின் கப்றுகளை முத்தமிடுவது ஆகும் என்பதை உலமாக்கள் கிரஹித்து எடுத்துள்ளார்கள் என்று இமாம் ஜலாலுதீன் சுயூத்தீ   رضي الله عنه  அவர்கள் கிதாபுத் தவ்ஷீஹ் ஷரஹுல் புஹாரி என்னும் நூலில் கூறியுள்ளார்கள் . 

ஹஜருல் அஸ்வத் கல்லை    முத்தமிடுவது ஷரியத் -மார்க்கத்தில் உள்ளது என்பதிலிருந்து கண்ணியமுள்ள மனிதர்கள் ,மற்றவைகளை முத்தமிடுவது ஆகும் என்பதை கிரஹித்து எடுத்துள்ளார்கள் . மனிதர்களின் கையை முத்தமிடுவது ஒழுக்கத்தைச் சார்ந்தது என்பது முன் சென்றுவிட்டது .மற்றவைகளை முத்தமிடுவதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்  رضي الله عنه  அவர்களின் அறிவிப்பு :- 

" இமாம் அவர்களிடம் நாயகத்தின் மின்பர் படியை முத்தமிடுவது ,புனித கப்ரை முத்தமிடுவது பற்றி கேட்கப் பட்டபொழுது தவறில்லை என்றார்கள் . இதை அவர்களது மகன் அப்துல்லாஹ்    رحمه الله   அவர்கள் அறிவித்தார்கள் . ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த மக்கா உலமாக்களில் ஒருவரான இமாம் இப்னு அபீ ஸைபுல் யமனீ அவர்கள் முஸ்தஹபு , (குர்ஆன் ) ஹதீஸ்களின் தொகுப்புகள் , ஸாலிஹீன்களின் கப்ருகளை முத்தமிடுவது ஆகும் என்று சொன்னார்கள் ." 

நூல்- பதாவா பிக்யா ,பாகம் 3,பக்கம் 309 .

"கப்ருகளை முத்துவதும் , அவைகளை தொடுவதும் ஆகும் என்று முஹிப்புத்திப்ரி  இமாம் மூலம் , இமாம் தீபுன்னாஷிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள் ." 

நூல் -  பதாவா பிக்யா ,பாகம் 3,பக்கம் 309 .

" பரக்கத்திற்காக ஸாலிஹீன்களின் கப்ரை முத்தமிடுவது ஆகும் ."

நூல் - பதாவா ரமலி , பாகம் 4,பக்கம் 106.           

" பாசமில்லாது இருந்தாலும் சரி (பாசத்தோடு இருந்தாலும் சரி )  குழந்தைகளை முத்துவதும் , சீதேவித்தன்மை போன்றவைகளுக்காக மய்யித்தை -மரணித்தவர்களை முத்துவதும் , ஆலிம் ,அறிஞர் ,ஸாலிஹ் -நல்லவர் ,சதீக் -நண்பர் ,ஷரீப் -சிறப்பிற்குரியவர்கள் போன்றவர்களின் கைகளை முத்துவது ஸுன்னத்தாகும் . செல்வத்திற்காக ,அல்லது இது போன்றவைக்காக  (பதவிகளுக்கு ) அல்ல. இது போன்றே அவர்களுக்கு (மரியாதைக்காக ) எழும்பி நிற்பதும் ஸுன்னத்தாகும் . இக்காலத்தில் இவை கட்டாயம் வாஜிப் என்றும் சிலர் சொல்லியிருக்கின்றார்கள் . காரணம் இவைகளை விடுவதால் (பந்தம் ,பாசம் ) துண்டிக்கப்படுகின்றது ." 

நூல் - கல்யூபி ,பாகம் 3,பக்கம் 213.

"நபிமார்கள் ,அவ்லியாக்களை ஜியாரத் செய்வதற்காக ஸுபியாக்கள் செல்வதும் , அதுபோது கொடிகளை கொண்டு போவதும் ,அவர்களது கப்ருகளை முத்தமிடுவதும் வழமையாக்கியிருக்கிறார்கள் . இவைகள் ஹராமா ? அல்லவா ?

இதற்கு இமாம் ஷெய்கு  கலீலி ஷாபியீ அவர்கள் பத்வா கொடுத்துள்ளார்கள் . கப்ருகளை முத்தமிடுவது ஆகும் . மற்றவை ஏதும் தடுக்கப்பட்டவை அல்ல .இவைகளை வழிகேடர்களில் வம்பர்களும் ,பித்அத்துக்காரர்களுமே அன்றி வேறு எவரும் மறுக்க மாட்டார்கள் ."

நூல் - பதாவா கலீலி ,பக்கம் 351 .



கப்ருகளை ஜியாரத்துச் செய்வது :



நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கப்ரு ஷரீப் , மற்றுமுண்டான நபிமார்கள் , அவ்லியாக்களின் கப்ருகளை ஆண்கள்  ,பெண்கள்   ஜியாரத் செய்வது ஸுன்னத்தாகும் .

"கப்ருகளை ஜியாரத்துச் செய்வதை உங்களுக்கு விலக்கி இருந்தேன் . இப்போது அவைகளை நீங்கள் ( ஆண்கள்  ,பெண்கள்) ஜியாரத் செய்யுங்கள் .ஏனெனில் நிச்சயமாக அது மறுமையை நினைவூட்டக் கூடியதாக இருக்கிறது ." என்று நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள் .

அறிவிப்பாளர் முஸ்லிம் 

"எவர் எனது கப்ரை ஜியாரத்து செய்தாரோ அவருக்கு எனது ஷபாஅத் கடமையாகி விட்டது . " என்றும்    நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள் .

அறிவிப்பாளர் தாரகுத்னி 

அன்னை ஆயிஷா ஸித்தீக்கா  رضی اللہ عنھا அவர்கள் சொல்கிறார்கள் :- 

"ரஸூலுல்லாஹி صلى الله عليه و سلم அவர்கள் எதில் (அடக்கமாகி ) இருக்கிறார்களோ ,அந்த என் வீட்டில் எனது (அன்னியவர்களை விட்டும் மறைக்கும் ) ஆடையை கழற்றிய நிலையில் போய் வருபவளாக இருந்து வந்தேன் . அவர்கள் என் கணவரும் , தகப்பனாரும் தானே என்று கூறுபவளாக  இருந்தேன் . எப்போது உமர்  رضي الله عنه  அவர்கள் ,அவர்களுடன் அடக்கப்பட்டார்களோ அல்லாஹ்வின் ஆணையாக என்மீது (அன்னியவர்களை விட்டும் மறைக்கும் )  ஆடை கட்டியவளாகவே அன்றி அங்கு நுழைவதில்லை . ஏனெனில் உமர்  رضي الله عنه  அவர்களுக்கு வெட்கப்பட்டு என்றார்கள் ." 

அறிவிப்பாளர் அஹ்மத் ,மிஷ்காத் பாகம் 1,பக்கம் 157 

குறிப்பு ,  இந்த ஹதீஸில் ஒரு பெண் , அதிலும் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா  رضی اللہ عنھا அவர்கள்  நபி(நாயகம் صلى الله عليه و سلم அவர்கள்)யையும் ,அவ்லியாக்களையும் (ஹழ்ரத் அபூபக்கர் ,ஹழ்ரத் உமர்  رضی اللہ عنھم )  ஜியாரத் செய்தார்கள் என்பதும் ,அவர்கள் கப்ருகளில்  ஹயாத்துடனே இருக்கிறார்கள் என்பதும் ஊர்ஜிதம் ஆகின்றது .

நாயகம் صلى الله عليه و سلم அவர்களது கப்ரு ஷரீபை ஆண்கள் ஜியாரத்துச் செய்வது ஸுன்னத்தாக இருப்பது போல் ,பெண்களுக்கும் ஜியாரத் செய்வது சுன்னத்தாகும் .ஏனெனில் அது  வணக்க வழிபாடுகளில் மிக உயர்வானதாகும் . இதைப் போன்றே இதர நபிமார்கள் , அவ்லியாக்கள் (கப்ருகளை ஜியாரத் செய்வதும் ஸுன்னத்தாகும் ) .இதை ஷெய்குனா இமாம் ரமலி رضي الله عنه  அவர்கள் சொன்னார்கள் . ஜீவித்திருப்பவர்களை சொந்தம் ,பந்தம் நன்மை,சிநேகிதம் போன்ற தொடர்பில் (ஜீவிய காலத்தில் ) ஜியாரத் செய்வது போன்று அவர்கள் மரணித்தவர்களானாலும் ஜியாரத் செய்யலாம் . இதை போன்று அவர்கள் பேரில் கிருபை கொண்டு அல்லது படிப்பினை பெறுவது மற்றும் இது போன்ற  காரியங்களுக்கும் ஜியாரத் செய்யலாம் .

நூல்  - கல்யூபி , பாகம் 1,பக்கம் 351 .

பெண்களுக்கு நபிமார்கள் , நாயகம் صلى الله عليه و سلم அவர்களது கப்ருகளை ஜியாரத் செய்வது பலமான ஸுன்னத் ஆகும் . அவ்லியாக்கள் , உலமாக்கள் கப்ருகளை ஜியாரத் செய்வது ஸுன்னத் ஆகும் . கப்ருகளை முத்தமிடுவது தடுக்கப்படாது .

நூல் - பதாவா கலீலி , பக்கம் 351 . 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...