🌹சத்திய சீலர்கள் ஸஹாபாக்களது இஜ்மா தராவீஹ் 🌹
இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " ஹழ்ரத் ஸயீப் பின் யஸீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாபத்தின் போது ,ரழமானில் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை தொழுவோம்.இன்னும் கூறினார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் மீன் வரை ஓதிவிட்டு ,வெகுநேரம் நின்று ஓதுவதால் உண்டாகும் சிரமம் காரணமாக தமது கைத்தடிகளில் சாய்ந்து கொள்வர் " .
📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ ,ஸுனன் குப்ரா,ஹதீஸ் # 4617,ஷெய்குல் இஸ்லாம் இமாம் நவவி رضي الله عنهஇதன் ஸனது ஸஹீஹ் என்கிறார்கள். அல் குலாஸா அல் அஹ்காம்,ஹதீஸ் # 1961
🌹ஸஹாபாக்கள் மற்றும் ஸலபுஸ் ஸாலிஹீன்களது இஜ்மா தராவீஹ் 🌹
இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நவின்றார்கள் , " மார்க்கம் கற்று அறிந்த பெரும்பான்மையோர் ,இருபது ரக்அத்துகள் தராவீஹ் என்பதை ஸெய்யிதினா உமர் رضي الله عنه ,ஸெய்யிதினா அலீ رضي الله عنه மற்றும் ஏனைய ஸஹாபா பெருமக்களது அறிவிப்புகளில் இருந்தும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஸலபுகளான ஸெய்யிதினா ஸுப்யானுத் தவ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ ,இமாம் ஷாபிஈ رضي الله عنه, இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் رضي الله عنه ஆகியோரும் அங்கனமே கூறினர். இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் மக்காவாசிகள் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுததை தாம் பார்த்ததாக கூறியுள்ளார்கள் "
📚 இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ ,ஜாமிஉத் திர்மிதி,நோன்பின் பாடம்,ரமழானில் கியாம் குறித்த பாகம்,ஹதீஸ் # 806,ஸஹீஹ் ஹதீஸ் .
🌹தராவீஹ் தொழுகையை ஜமாத்துடன் தொழுத ஸஹாபா பெருமக்கள் 🌹
ஹதீஸ் 1 :
அப்துல் அஜீஸ் பின் ரபி கூறினார் , " ஸெய்யிதினா உபை இப்னு கஃப் رضي الله عنه அவர்கள் மதீனாவில் ரமழானில் இருபது ரக்அத் மற்றும் மூன்று ரக்அத் வித்ரு தொழுகைக்காக மக்களுக்கு இமாமத் செய்தனர்
ஹதீஸ் 2 :
அபுல் ஹசனா அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ كرم الله وجهه இருபது ரக்அத் தொழுகைக்கு இமாமத் செய ய்திட உத்தரவிட்டார்கள்.
ஹதீஸ் 3 :
ஸெய்யிதினா நாபி பின் உமர் رضي الله عنه அவர்களிடமிருந்து வகீ அறிவிக்கின்றார்கள் , " ஸெய்யிதினா இப்னு அபீ முலைகா رضي الله عنه அவர்கள் ரமழானில் இருபது ரக்அத் தொழுகையில் எங களுக்கு இமாமத் செய்தார்கள் "
📚 முஸன்னப் இப்னு அபீ ஷைபா ,ஹதீஸ் # 7766,7763,7765
🌹 ஸஹாபாக்களது தராவீஹ் ஜமாஅத் 🌹
ஹழ்ரத் ஸயீத் பின் யசீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபா பெருமக்கள் இருபது ரக்அத் தராவீஹ் தொழுதனர்.இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆயத்துகளை ஓதினர்.அதன் தொடர்ச்சியாக அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் மக்கள் தொழுகையில் தடிகளால் தாங்கிக் கொண்டிருந்தனர்.
📚 இமாம் பைஹகீ رضي الله عنه ,ஸுனன் குப்ரா