" அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று பாங்கில் கேட்டதும் இரு பெரும் விரல்களை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹபு - விரும்பத்தக்கதாகும்.இம்மை ,மறுமை பயன்களை அளிக்கவல்லது.
முதல் "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் பொழுது - " ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூல்லல்லாஹ் " என்றும் இரண்டாவது " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று கேட்கும் போது - " குற்றத்த ஐனிபிக யாரஸூல்லல்லாஹ் !" - உங்களைக் கொண்டே என் கண்களுக்கு குளிர்ச்சி என்று சொல்லி இருபெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். பின்னர் , " அல்லாஹும்ம மத்தியினி பிஸ்ஸம்யி வல்பஸரி - கேள்வி,பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக ! " என்று சொல்ல வேண்டும். ஏனெனில் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அப்படி செய்தவனை சுவனத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.
📖 துர்ருல் முக்தார்,கன்ஜுல் இபாத்,பதாவா ஸூபிய்யா,கஹ்ஸதானி,பஹ்ருர்ரகாயிக்,ஷரஹு விகாயா
" பாங்கில் பூமான் நபி ﷺ அவர்களது பெயர் கேட்கும் பொழுது இருபெரும் விரலை முத்துவதும்,இருகண்களில் வைப்பதும் ஆகும்.நமது ஷெய்குமார்கள் முஸ்தஹபு என்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள் ."
📖 பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கீ
முஅத்தின் - பாங்கு சொல்பவர் " அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூல்லல்லாஹ் " என்று சொல்வதை கேட்கும் போது - மர்ஹபன் பிஹபீபி வகுர்ரதுஐனி - சோபனம்,எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி - முஹம்மதிப்னு அப்துல்லாஹ் ﷺ - என்று சொல்லி இருப்பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பவானாகில் குருடாக மாட்டான்.கண்வலி எக்காலமும் வராது.
📖இஆனா,பாகம் 1,பக்கம் 243.
இருபெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான்,ஒருக்காலமும் கண்வலி வராது.
📖கியாதுத்தாலிப் ,மாலிக்கி மத்ஹபின் கிதாப்
📚 - திப்யானுல் ஹக் ,பாகம் 2
| அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர்ரஸூல்,அஷ் ஷெய்குல் காமில்,அஷ்ஷாஹ் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பதில் பாகவி ஸூபி காதிரி காஹிரி قدس الله سره العزيز
கைநகம் கண்தொட்டு கனிகின்ற ஸலவாத்தில் கஸ்தூரி மணங்கமழும் எம்மான் ! அவரைக் காணத் துடிக்கின்றேன் இந்நாள் ! صلى الله عليه وآله وصحبه وسلم
No comments:
Post a Comment