பூமான் நபி ﷺ அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நீங்கள் அலட்சியம் காட்டாதவரை நீங்கள் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள்; அண்ணல் நபி ﷺஅவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் அல்லாஹ்வின் பார்வையில் உயர்த்தப்படுவீர்கள். நபி ﷺ அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றுவது வெளிரங்கத்திலும் உள்ரங்கத்திலும் உள்ளது.
நபி ﷺ அவர்களது முன்மாதிரியை வெளிரங்கத்தில் பின்பற்றுவது என்பது, தொழுகை, நோன்பு,ஹஜ், ஜிஹாத் போன்றவற்றில் ஈடுபடுவதாகும். அண்ணல் நபி ﷺ அவர்களது முன்மாதிரியை உள்ரங்கத்தில் பின்பற்றுவது என்பது , உங்கள் வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுடனான உங்கள் தொடர்பை உறுதிசெய்து, ஓதும்போது பிரதிபலித்தல் ஆகும்.
நீங்கள் வணக்கவழிபாடுகள் அல்லது அவ்ராதுகளை ஓதுவது போன்ற செயல்களைச் செய்தும், நீங்கள் அதில் வலுவான தொடர்பையோ அல்லது பிரதிபலிப்பையோ உணரவில்லை என்றால், நீங்கள் மறைவான நோயால் - ஆணவம், பகட்டு அல்லது அதன் விருப்பங்களால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் سبحانه و تعالى தனது அருள்மறையில் கூறுகின்றான் " நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம் " - அல் குர்ஆன் (7:146).இந்த விஷயத்தில், நீங்கள் நோயால் பாதிக்கப்பட்டவர் போல் இனிப்பைக் கசப்பாகக் கண்டறிவீர்கள். இருப்பினும், கர்வமும் அகங்காரமும் உள்ள நிலையில் புரியும் ‘வணக்கத்தை’ விட, வெட்கமாகவும் அவமானமாகவும் உணரச் செய்திடும் பாவம் சிறந்தது.
அல்லாஹ் سبحانه و تعالى ஸெய்யிதினா நூஹ் நபி عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள் , " நூஹ் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! " - அல் குர்ஆன் (11:45) என்று கூறிய பொழுது பதிலளித்தான் , " "நூஹே! நிச்சயமாக அவன் உங்கள் குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான்." - அல் குர்ஆன் (11:46) .
ஒருவரைப் பின்பற்றும் செயலானது, அந்த நபர் இரத்த பந்தமாக இல்லாவிட்டாலும், பின்தொடர்பவரைப் பின்தொடர்பவரின் ஒரு பகுதியாக ஆக்குகிறது; உதாரணமாக நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் குறித்து எம்பெருமானார் ﷺ " ஸல்மான் நம்மில் நின்றும் உள்ளவர் " என்று கூறியது போன்று. நாயகத் தோழர் ஸெய்யிதினா ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்கள் பாரசீகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்,எம்பெருமானார் ﷺ அடிச்சுவட்டை அடியொற்றி பின்பற்றி நடந்ததன் காரணமாக ,தனது உம்மத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக கண்மணி நாயகம் ﷺ அவர்கள் இவ்வாறு நவின்றார்கள்.எவ்வாறு ஒருவரது அடிச்சுவட்டை பின்பற்றுவது தொடர்பை ஏற்படுத்துமோ ,அவ்வாறே அடிச்சுவட்டை மீறுவது தொடர்பை துண்டித்து பிரிவினைக்கு வழிவகுக்கின்றது .
அல்லாஹ் سبحانه و تعالى நன்மைகள் அனைத்தையும் ஓர் வீட்டினுள் ஒன்றுகூட்டி ,அதன் திறவுகோலாக எம்பெருமானார் ﷺ அவர்களை பின்பற்றுவதை ஆக்கினான்.எனவே அல்லாஹ் அருளியதை பொருந்திக் கொண்டிருப்பதிலும்,இவ்வுலகில் இருந்து எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துவதிலும்,சிக்கனமாக இருப்பதிலும் பூமான் நபி ﷺ அவர்களை பின்பற்றுங்கள்.சொல்லாலும்,செயலாலும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவற்றை விட்டும் தவிர்ந்துக் கொள்வதில் அண்ணல் நபி ﷺ அவர்களை பின்பற்றுங்கள். எவருக்கு பூமான் நபி ﷺ அவர்களைப் பின்பற்றுதல் என்னும் கதவு திறக்கின்றதோ ,அது அல்லாஹ் அவரை நேசிப்பதற்கான அறிகுறி.அல்லாஹ் கூறுகின்றான் , "(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." - அல் குர்ஆன் 3:31.
எனவே, நீங்கள் நன்மைகளை நாடிச்செல்வீர்களேயானால், " யா அல்லாஹ் ! நான் உன்னிடம் உனது ஹபீப் ﷺ அவர்களை சொல்லிலும்,செயலிலும் பின்பற்றுவதற்குரிய திறனை உன்னிடம் கேட்கின்றேன் " என்று கேளுங்கள்.உண்மையாக,உளப்பூர்வமாக இதனை யாசிப்பவர், அல்லாஹ்வின் அடியார்களை அவர்களது மரியாதை பற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.மக்கள் ஒருவர் மற்றொருவருக்கு அநீதமிழைப்பதில் இருந்து பாதுகாப்பாக இருந்தால், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் விரைந்து செல்வார்கள்; ஆனால் அவர்கள் கடனாளி ,கடனை வசூலிப்பவரிடம் கட்டுபடுவது போல் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டள்ளனர்.
📚 இமாம் அல் முஹத்திஸ் அஷ் ஷெய்கு தாஜுத்தீன் அபுல் பழ்ல் இப்னு அதாஅல்லாஹ் இஸ்கந்திரியி அல்மாலிகி அல்அஷ்அரி அஷ்ஷாதுலி قدس الله سره العزيز, தாஜுல் உரூஸ் அல் ஹாவி லீ தஹ்தீப் அல் நுபுஸ்,பக்கம் 3-4
🌹 صلى الله عليه وآله وصحبه وسلم 🌹
No comments:
Post a Comment