குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஆணும் ,பெண்ணும் ஒன்றாக குழுமியிருக்கும் நேரத்திலும் விலக்கலான கருமங்கள் முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்திலும் அவ்லியாக்களுடைய கப்ருகளை ஜியாரத்து செய்யலாமா ? அல்லது ஜியாரத் செய்யலாகாதா ? என்ற கேள்வி எழக்கூடும் .
இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رضي الله عنه அவர்களுடைய பத்வாவில் இவ்வினாவிற்கு விடை காணப்படுகின்றது . அதன் சுருக்கமாவது :-
"குறிப்பிட்ட அந்நாள் முழுவதும் விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயிருப்பது ஒரு வகை . அந்நாள் முழுவதும் விலக்கலான கருமங்களைக் கொண்டதாய் இருப்பது ஒரு வகை . அத்தினம் ,சில வேளை விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயும் , சில வேளை விலக்கலான கருமங்களைக் கொண்டதாய் இருப்பது மற்றோரு வகை. இவ்விதமான சந்தர்ப்பங்களில் ,ஆகாத கருமங்களில்லாத நேரத்தில் ஜியாரத்து செய்வது மேல் . ஆகாத கருமங்களுள்ள நேரத்தில் ஆணும் ,பெண்ணும் ஒன்றாக கலந்து நிற்பதை விட்டு விலகுவதும் , ஆகாத செயல்களை வெறுப்பதும் ,சாத்தியமானமட்டில் அவற்றைத் தவிர்த்து தமது அமலைச் செய்வது ஆகும் . " என்பதே .
ஆகவே இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رضي الله عنه அவர்களுடைய பத்வா ஜியாரத்து செய்யும் தளங்களில் விலக்கப்பட்ட கருமங்கள் நிகழக்கூடிய நேரத்தில் ஜியாரத்து செய்யும் விதத்தை விவரிப்பதுடன் ,ஜியாரத்து செய்யவும் அனுமதிக்கின்றது .
மேலும் இதுபற்றி இமாம் ஷெய்கு இப்னு ஆபிதீன் என்ற பிரக்கியாதி பெற்ற முஹம்மது அமீன் رضي الله عنه அவர்கள் 'ரத்துல் முக்தாரில்' குறிப்பிட்டிருக்கும் விஷயமாவது :-
" ஜியாரத்து செய்யுமிடத்தில் விலக்கப்பட்ட ,ஆகாத கருமங்கள் இருப்பினும் ஆணும் ,பெண்ணும் கலந்திருப்பது போன்ற குற்றங்கள் நிகழ்வதாயிருப்பினும் ,நீ ஜியாரத்தை விட்டு விட வேண்டாம் . இவை போன்ற காரணங்களுக்காக புண்ணியமான கருமங்கள் விடப் படமாட்டா . ஜியாரத்து செய்ய வேண்டியது மானிடன் மீது பொறுப்பாகும் . பித்அத்தானவற்றை வெறுக்க வேண்டும் . இயலுமாயின் அவற்றை நீக்க வேண்டும் என்பது தான் இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رضي الله عنه அவர்களுடைய பத்வாவின் கருத்தாகும் " என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
" ஒருவன் வலியுல்லாஹ்வுடைய கப்ருக்கு போய் அவ்விடத்தில் சிறிது நேரம் தரிப்பட்டிருப்பதைக் கொண்டு அவனுக்கு பிரயோஜனமுண்டு . ஜியாரத்து சன்மார்க்கத்தின் நல் வழக்கமான ஆக்கப்பட்டிருப்பதன் மூல நோக்கம் , அதில் பற்பல நுட்பமானவைகளும் .அந்தரங்கமானவைகளுமான (அஸ்ரார் ) இரகசியங்கள் இருப்பதன் காரணத்தை முன்னிட்டே தான் . " என்று இமாம் பக்ருத்தீன் றாஸி رضي الله عنه அவர்களுடைய 'மாதலிப் ' என்னும் கிரந்தத்தில் 'ஜியாரத்தின் மூலம் அடையப்படக் கூடிய அரும்பெரும் பலன் ' என்னும் அத்தியாயத்தில் வரைந்திருப்பதாய் , மக்கா முஅல்லமாவின் முப்தியாக இருந்த அல்லாமா இமாம் ஸெய்யிது ஜைனி தஹ்லான் மக்கீ ஷாபிஈ رضي الله عنه அவர்கள் 'தக்ரீபுல் உஸுல் ' ,80வது பக்கத்தில் கூறுகின்றார்கள் .
" எவரொருவர் தமது தாய் ,தந்தையுடைய கப்ருகளை அல்லது அவ்விருவருள் ஒருவருடைய கப்ரை வெள்ளிக்கிழமைகளில் ஜியாரத்துச் செய்வாராயின் ,அவர் ஹஜ்ஜு செய்தவரைப் போலாவார் " என்பதாகவும்
"மாதா பிதா இருவருள் ஒருவருடைய கப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் யாராவது ஜியாரத்துச் செய்வாராயின் அவருடைய பிழைகள் பொறுக்கப்படுவதுடன் அவர் நன்றியுடைய நல்லடியாராகவும் எழுதப்படுகிறார் " என்பதாகவும் நாயகம் ﷺ அவர்கள் உரைத்துள்ளார்கள் .
மேற்கண்ட இரு ஹதீதுகளும் 'மிஷ்காத் ஷரீபில் ' கூறப்பட்டுள்ளன .
" கப்ருகளை ஜியாரத்துச் செய்வது பாவத்திற்குப் பிராயச்சித்தமாகும் " என்றும் ஹதீது வந்துள்ள விபரம் தஹ்தீபில் சொல்லப்பட்டிருகிறது .
மேலே உள்ள மூன்று ஹதீதுகளும் ஷாபிஈ மத்ஹபின் நூலான இஆனா , 2வது பாகம் , 166வது பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன .
இந்நாயக வாக்குகளைக் கொண்டு தெரிய வருவது யாதெனில் ,
சாமானியர்களான மாதா ,பிதாக்களுடைய கப்ருகளை ஜியாரத்துச் செய்வதே ஹஜ்ஜுக்கு ஒப்பானதாகவும் , பாவ நிவாரணமாகவும் ,பாவ பிராயச்சித்தமாகவும் ஆகிவிடுகிறது என்றிருந்தால் , ஹக்கு தஆலா அளவில் பனா வாகி .இன்ஸான் காமிலான ,பரிபூரணத்துவம் அடைந்த ,அச்சந் தீர்த்த , அவ்லியாக்களுடைய கப்ருகளை ஜியாரத்துச் செய்வதன் மர்தபா , பதவி ,உன்னத அந்தஸ்து ,தரஜா எவ்வளவு மகத்துவ மிக்கதாக இருக்க வேண்டும் . அது கொண்டு பாவிகளான ஜனங்களுக்கு எவ்வளவு உயர்ந்த பட்சம் பாவ மன்னிப்பும் ,பாவதோஷ நிவாரணமும் சித்தியாவிட வேண்டும் . இந்த உண்மையை நாம் நன்கு சிந்தித்து உணர வேண்டும் !
இவ்வாறாக அருமையான முடிவுத் தீர்ப்பை அல்லாமா ஷைகு யூசுபுன் நபஹானி மிஸ்ரி رضي الله عنه அவர்கள் 'ஷவாஹிதுல் ஹக் ' 253வது பக்கத்தில் மிகத் தெளிவாக விளக்கித் தந்துள்ளார்கள் .
"நபிகள் கோமான் ﷺ அவர்கள் ,எவருடைய கப்ருமில்லாத முந்தின நபிமார்கள் ஜனங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த மஸ்ஜிது குபாவிற்கு ஒவ்வொரு வாரமும் சென்று ஜியாரத்து செய்து வந்திருக்கின்றார்கள் " என்ற விபரம் ஸஹீஹுல் புஹாரி ,ஸஹீஹுல் முஸ்லிம் , மிஷ்காத் முதலிய ஹதீது கிரந்தங்களில் காணப்படுகின்றன .
மேலே குறிப்பிட்ட இந்த ஹதீதைக் கொண்டு "மகான்கள் இருந்த இடத்தையும் கூட ஜியாரத்துச் செய்வது முஸ்தஹபாகும் " என்று அல்லாமா முல்லா அலீ காரீ رضي الله عنه அவர்கள் 'மிர்காத்' 1வது பாகம் , 448வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் .
ஆகையால் அவ்லியாக்கள் பிறந்த இடம் ,தொழுத இடம் , கல்வத் சில்லா இருந்த இடம் முதலியவற்றை ஜியாரத்துச் செய்வதும் ஆகுமான காரியம் தான் என்று விளங்க முடிகின்றது .
"கப்ருகளை ஜியாரத்துச் செய்யுங்கள் ,(அவ்வாறு செய்வதை ) பாவமென்றும் ,கெடுதியென்றும் கூற வேண்டாம் " என்று நாயகம் ﷺ அவர்கள்உரைத்துள்ள ஹதீது 'தப்ரானியில் ' வந்துள்ளது.
" பொதுவாக கப்ரு ஜியாரத்தை வேண்டாம் என்று விலக்குவதானது குப்ரை உண்டாக்கும் " என்பதாக அல்லாமா முல்லா அலீ காரி رضي الله عنه அவர்கள் ,ஷரஹுஷ் ஷிபா 2வது பாகம் ,151வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
பொதுவாக ஜியாரத்தை விலக்குவது கொண்டு குப்ரு ஏற்படுமானால் , பனாபில்லாவாஹி ஆண்டவனளவில் வாஸிலான நாதாக்களுடைய அவ்லியாக்களுடைய கப்ருகளை ஜியாரத் செய்யலாகாது எனக் குறிப்பாகத் தடுத்தால் எத்தகைய பயங்கரமான பாவமாக இருக்கவேண்டும் என்பதை நன்கு சந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம் .
"ஜியாரத்திற்குப் போகக்கூடாது என்று எண்ணம் வைத்து விலக்குகிறவன் இஸ்லாத்தை விட்டு நீங்கியவனாகவும் ,அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் மாறுபாடு செய்தவனாகவும் ஆகிவிடுவான் " என்பதாக அல்லாமா குஸ்த்தலானி رضي الله عنه அவர்கள் , அல்லாமா முல்லா அலீ காரி رضي الله عنه அவர்கள் , ஆகியோர் 'மவாஹிபுல் - லதுன்னிய்யா ' ,2வது பாகம் ,383வது பக்கத்திலும் ,ஷரஹு ஷிபா 2வது பாகம் ,151வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் .
மேலும் இவ்வாறாக 'ஜவ்ஹர் - முனள்ளம்' , 'ஷவாஹிதுல் ஹக்' , 'மஷாரிக்குள் அன்வார்' , 'துரருஸ்-ஸனிய்யா-பீ-றத்தில்-வஹாபிய்யா' முதலிய கிரந்தங்களும் கூறுகின்றன .
"அவ்லியாக்களையும் ,அவர்களது கப்ருகளையும் ஜியாரத்துச் செய்வதைம்,அவர்கள் பால் உதவி தேடுவதையும் இன்கார் செய்கின்றவன் ஷைத்தானைப் போலாவான் " என்பதாக குர்ஆன் ஷரீபின் 11வது ஸுரா 44வது வசனத்தின் விளக்கத்தில் ,தப்சீர் ரூஹுல் பயானில் ,4வது பாகம் , 137வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .
"அவ்லியாக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பதவிக்குத் தகுந்தாற் போல் ,ஆண்டவன்பால் முடகியிருப்பதில் நிச்சயமாக தரஜாக்களில் தாரதம்மியமுண்டு ,அங்ஙனமே அவ்லியாக்கள் உடைய தகுதிக்கு தக்கபடிக்கு ,அவர்களை ஜியாரத்து செய்கிறவர்கள் பிரயோஜனங்களைப் பெறுவார்கள் " என்று 'ரத்துல் முஹ்தார்' ,1வது பாகம் , 665வது பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது .
"கஃபா , ஜம்ஜம் , அரஃபா , ஸஃபா ,மர்வா ,முஜ்தலிபா ,மினா கல்லெறியும் இடங்கள் ,அன்பையாக்களின் கபுருகள் ஆகிய இடங்களிலெல்லாம் துஆக்கள் அங்கீகாரமாகி ஒப்புக் கொள்ளப்படுகின்றன . இவ்விடங்களைப் போல் அவ்லியாக்களுடைய கபுருகள் இடத்திலும் துஆக்கள் கபூல் ஆகி ஒப்புக்கொள்ளப்படுகின்றன என்பது அனுபவத்தைக் கொண்டு சோதிக்கப் பெற்றிருக்கின்றது " என்பதாக 'தப்சீர் ரூஹுல் பயான் ' ,1வது பாகம் ,298,299 வது பக்கத்தில் கூறப் பட்டிருக்கின்றது .
ஹழ்ரத் ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ நாயகம் رضي الله عنه அவர்கள் தங்களது கலீபாக்களுக்கும் ,முரீதீன்களுக்கும் ,முஹிப்பீன்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் , " நீங்கள் பகுதாது ஷரீஃப் போவீர்களாயின் முதன் முதலாக கவ்துல் அஃலம் முஹையத்தீன் அப்துல் காதர் رضي الله عنه அவர்களை ஜியார்த்துச் செய்த பின்பு தான் மற்ற காரியங்களை கவனிக்க முற்பட வேண்டும் " என்று உபதேசம் செய்பவர்களாக இருந்தார்கள் .
ஸுல்தானுல் ஆரிபீன் ரிபாயீ நாயகம் رضي الله عنه அவர்கள் சமூகம் ஒரு நாள் ஒரு மனிதர் வந்து தாம் பகுதாத் போக நாட்டம் கொண்டுள்ளதாகவும் ,தமக்கு உபதேசம் செய்து பயண விடை அளிக்குமாறு வேண்டி நின்றார் .
அதற்கு ஆரிபு நாயகம் رضي الله عنه அவர்கள் ," நீங்கள் பகுத்தாதுக்குள் நுழைந்தால் நேரே சென்று ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களை தரிசித்துக் கொள்வீராக . அவர்கள் ஹயாத்தாக் இருக்கும் காலத்திலும் சரி , வபாத்தாகி விட்ட காலத்திற்க்கு அப்பாலும் சரி ,அவர்களை ஜியாரத்துச் செய்யாமல் நீர் எந்த காரியத்தையும் செய்ய முற்பட்டு விடாதீர் .விலாயத்துடையவர் எவராய் இருப்பினும் சரி .பகுதாதுக்குள் நுழைந்த போது ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களை ஜியார்த்துச் செய்யவில்லையானால் , அவருடைய விலாயத்தைப் பிடுங்கப்பட்டு போய் விடும் என்று அல்லாஹ் அவர்களுக்கு வார்த்தைப் பாடு செய்துள்ளான் " என்பதாக உபதேசித்து விடை கோடுத்தனுப்பினார்கள் .
இவ்விபரம் 'பஹ்ஜதுல் அஸ்ரார் ' 238வது பக்கத்திலும் , 'தப்ரீஜூல் காத்திர்' 53 வது பக்கத்திலும் காணப்படுகின்றது . இவ்விபரம் 'மனாகிபு கவ்தியாவிலும்' சொல்லப்பட்டுள்ளது .
இதைக் கொண்டு அறியப்படுவது யாதெனில் ,எந்த ஊருக்குச் சென்ற போதிலும் அந்த ஊரில் உள்ள பிரபலமான அவ்லியாவின் தர்காவிற்கு சென்று ஜியாரத்தை முடித்து விட்டுத்தான் இதர காரியத்தில் ஈடுபட வேண்டும் .அதிலே தான் பரக்கத் உண்டு என்பதே . ஆகவே தான் குதுபுமார்கள் எல்லாம் கப்ரு ஜியாரத்தைப் பேணி அனுஷ்டித்து வந்துள்ளார்கள் என்பதற்கு அவர்களின் வரலாறுகள்,நடவடிக்கைகள் சாட்சியம் பகருகின்றன .
மேலும் ," ஸாலிஹீன்களான அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் ஆண்டவனது ரஹ்மத்து இறங்குகின்றது " என்ற ஹதீதைச் சுட்டிக்காட்டி , " அன்பியா ,அவ்லியா ,ஸாலிஹீன் ,உலமாக்கள் ஆகியோருடைய தர்கா ஷரீபை ,கப்ரு ஷரீபை நாடி , புண்ணியம் தேடி பிரயாணம் செய்து ஸபர் போவது முஸ்தஹப்பாகும் " என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ
رضي الله عنه அவர்கள் 'இஹ்யா உலூமுத்தீன் ' நூலில் 'பிரயாணத்தின் ஒழுங்கு முறைகள் ' என்னும் அத்தியாயத்தில் கூறுகின்றார்கள் .
"ஜியாரத்தை முன்னிட்டு பிரயாணம் செல்வது முஸ்தஹப்பு " என்று ரத்துல் முஹ்தார் ,1வது பாகத்தில் ஜியாரத்தின் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது .
"ஜியாரத்திற்காகப் பிரயாணப்பட்டு போவது முஸ்தஹப்பு " என்று ஷைகுல் இஸ்லாம் அபூ அப்தில்லாஹ் தஹ்பீ , ஹாபிழ் ஜைனுத்தீன் ஈராக்கீ , ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ , ஹாபிழ் ஜலாலுத்தீன் சுயூத்தீ , இமாம் தீபீ ,இமாம் குஸ்த்தலானீ , இமாம் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் மக்கீ , இமாம் தகீயுத்தீன் ஸுப்கீ , இமாம் கஸ்ஸாலீ , ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி , இமாம் பக்ருத்தீன் ஐனி , இமாம் இப்னுல் ஹுமாம் ,முல்லா அலீ காரீ , இமாம் மனாவீ , இமாம் இப்னு அப்துல் பர்ரூ , இமாம் ஜக்கானீ , இமாம் இப்னு ஹஜர் மக்கீ ,இமாம் புர்ஹானுத்தீன் ஹலபீ , இமாம் பைளாவீ , இமாம் இப்னுல் ஹாஜ் رضي الله عنه ஆகிய மாபெரும் மேதைகளும் ,மற்றும் அநேகமான முஹத்திதீன்களும் , முஹக்கிகீன்களும் , கூறியுள்ளார்கள் என்ற விபரத்தை அல்லாமா ஸெய்யத் அமீர் அலவீ
رضي الله عنه அவர்கள் "இஹ்லாக்குள் வஹ்ஹாபீனில் " எடுத்துரைத்துள்ளார்கள் .
ஆகையால் , இறை நேசச் செல்வர்களாகிய அல்லாஹ்வின் ஹபீபுகளாகிய நபிமார்களையும் ,வலிமார்களையும் ஜியாரத்துச் செய்வது ரஹ்மத்தும் ,ஈடேற்றத்திற்கு ,முக்திக்கு வஸீலாவாகும் .
"எவனொருவன் என்னுடைய கபூரை ஜியாரத்துச் செய்தானோ அவனுக்கு ஷபாஅத்து செய்வது என் பேரில் வஸீலாவாகி விட்டது " என்று கண்மணி நாயகம் صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள் .
இன்னமும் இமாமுல் அஃலம் இமாம் அபூ ஹனீஃபா رضي الله عنه அவர்களுடைய கப்ரு ஷரீபை இமாம்களும் ,உலமாக்களும் ஜியாரத்துச் செய்திருக்கிறார்கள் . நாட்ட தேட்டமுடையவர்கள் ,இரட்சிப்பு கோரியவர்கள் அவர்களை வஸீலாவாக்கி ஜியாரத்துச் செய்து அவர்களைக் கொண்டு நாட்ட தேட்டங்களை நிறைவேறப் பெற்றுள்ளனர் . இரட்சிப்பை பெற்றுள்ளனர் .
இது போலவே இமாம் மூஸல் காழிம் رضي الله عنه அவர்களது கப்ரு ஷரீஃபை ஜியாரத்துச் செய்வதைக் கொண்டு நாட்ட தேட்டங்களை நிறைவேறப் பெற்றுள்ளனர் . பலவிதமான அருட்பாக்கியங்களைப் பெற்றுள்ளனர் .
மேன்மைக்குரிய ஷாஃபி மத்ஹபின் இமாம் ஹழ்ரத் முஹம்மதிப்னு இத்ரீஸ் ஷாஃபீ رضي الله عنه அவர்கள் இமாமுல் அஃலம் இமாம் அபூ ஹனீஃபா رضي الله عنه அவர்களையும் , இமாம் மூஸல் காழிம் رضي الله عنه அவர்களது கப்ரு ஷரீஃபை ஜியாரத்துச் செய்து ,அவர்களிடமே வஸீலா தேடி , ஹாஜத்துகளை நிறைவேற்றி பெற்றிருக்கின்றார்கள் . இது ரிவாயத்தைக் கொண்டு தரிப்படுத்தப்ட்ட உண்மை .
இவ்வாறாகவே சர்தார் குத்புர் ரப்பானி , கவ்துஸ் சமதானி , முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுடைய முபாரக்கான கப்ரு ஷரீஃபை பெரிய உலமாக்களும் ,குத்புமார்களும் , அவ்லியாக்களும் நாடித் தேடி ஜியாரத்துச் செய்து தங்களது நாட்ட தேட்டங்களை கைகூடப்பெற்றும் , அருளை அடைய பெற்றும் பாக்கியம் அடைந்துள்ளனர் .
இன்னும் ஸெய்யிதினா குத்புல் மஜீது ஸெய்யிது அப்துல் காதிர் ,ஷாஹுல் ஹமீது ,நாகூர் மீரான் சாஹிபு நாயகம் ஆண்டகை رضي الله عنه அவர்களுடைய புண்ணிய கப்ரு ஷரீஃபை பெரும் பெரும் உலமாக்களும் , வலிமார்களும் ,மஷாயிகுமார்களும் , குத்புகளும் , மெஞ் ஞானிகளும் , தவ யோகிகளும், ஹாஜத்து உடையவர்களும் , ஜியாரத்துச் செய்வதைக் கொண்டு கோரிக்கை களெல்லாம் நிறைவேற்றப் பெற்று அருட்பாக்கியங்களை அடையப் பெற்றுள்ளனர் .
ஷரஹுப் புலி ,மாதிஹுர் ரஸுல் ,ஷெய்கு ஸதக்கதுல்லாஹில் காஹிரி رضي الله عنه அவர்களும் , ஹழ்ரத் கவ்துல் அஃலம் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுடைய ஜியாரத்தை நாடி பகுதாது சென்று "யா குத்பா " மாலையை சமர்ப்பணம் செய்தும் , நாகூர் ஆண்டவர்கள் رضي الله عنه அவர்களை நாடி நாகூருக்கு வந்து ஜியாரத்துச் செய்து , "யா ஸெய்யிதீ ஷைகீ வ ஸத்ரஸ் ஸாதிரீ " மாலையை சமர்ப்பணம் செய்து வஸீலாத் தேடி இருக்கின்றார்கள் . கார்மாணம் தேடி இருக்கின்றார்கள் . ஈருலகின் நற்பயனுக்கு உதவி தேடி இருக்கின்றார்கள் .
இத்தகைய உண்மைகளை உணர முற்படாமல் ஒரேடியாக ஜியாரத்துக் கூடவே கூடாது என்று பொதுவாக யாராகிலும் கூறி விலக்குவார்கள் என்றால் அச்சொல்லுக்கு மதிப்பில்லை என்பது திண்ணம் . உண்மையை மறைத்து அவ்விதம் கூறுபவர்கள் முஃத்தஸிலா , வஹாபி , காதியானீ கூட்டங்களில் உள்ளவர் என்பதில் சந்தேகம் இல்லை . உண்மையை உணர்ந்து வேண்டுமென்றே மனமுரண்டாக அங்கணம் மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும் ,றஸூலுக்கு மாறு செய்தவர்கள் என்பதிலும் ஐயமில்லை .

No comments:
Post a Comment