Wednesday, 13 November 2024

வலிமார்களிடத்தில் வஸீலா

🌹 வலிமார்களிடத்தில் வஸீலா 🌹

இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மகனாருக்கு கண் பார்வை பறிபோனது ,சில காலம் கழித்து அவருக்கு பார்வை மீண்டு வந்து பொழுது இது பற்றி ஷெய்கு அப்துல் ரஹ்மான் பின் இப்ராஹீம் அல் மக்திஸி ஹன்பலி அவர்களிடம் கேட்கப்பட்டது . அன்னார்  ," நான் எனது மகனை அழைத்துக் கொண்டு இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه ( மறைவு ஹிஜ்ரி 241) அவர்களது மக்பாரவிற்கு சென்று பின்வருமாறு துஆ செய்தேன், ' யா அஹ்மது பின் ஹன்பல் அவர்களே ! உங்களிடத்தில் ஓர்  வேண்டுகோள் சமர்பிக்கின்றேன். இன்னும் தங்களை அல்லாஹ்  سبحانه و تعالى விடத்தில் வஸீலாவாக முன்னிறுத்தி துஆ செய்கின்றேன்- யா அல்லாஹ் ! எனது மகனுக்கு ஷிபா நல்கிடு. அவனது பார்வையை திரும்பச் செய்திடு " என்று துஆ செய்தேன். அன்றிரவு எனது மகனது பார்வை திரும்ப வந்ததை நான் கண்டேன் என்று நவின்றார்கள். ஸுப்ஹானல்லாஹ் ! 


📚 தாரீகே இஸ்லாம்,பாகம் 45,பக்கம் 194

Wednesday, 6 November 2024

பூமான் நபி அவர்களிடம் உதவி தேடுவது

🌹பெருமானார்  ﷺ அவர்களிடம்  உதவி தேடுவது 🌹

இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஸஹாபா பெருமக்களை கண்ட தாபஈ ஒருவர் கூறுவதாக எழுதுகின்றார்கள் , 

" எங்களிடையே மதீனாவில் ஒரு நபர் இருந்தார்.அவர் எப்பொழுதெல்லாம் ஒரு தீமை நேரிட்டு அதனை தமது கரங்களை கொண்டாகிலும் தடுக்க இயலாத  நிலை உண்டாகிறது ,அப்பொழுதெல்லாம் அல்லாஹ்வின் ஹபீப் முஸ்தபா  ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழா ஷரீபிற்கு சென்று " அஹ்லே கப்ருடையவர்களே ! உதவி புரிபவர்களே  ! எங்களின் நிலையை தயை கூர்ந்து காணுங்கள் ! " என்று கூறுவார்.


 📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ,  ஷுஅபுல் ஈமான் ,ஹதீஸ் # 3879

Sunday, 3 November 2024

துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடம்

🌹 அன்பியாக்கள்,வலிமார்களது கப்ருகள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடம் 🌹

அஸ்மா வ ரிஜால் கலையின் மாபெரும் அறிஞரான இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள்,

" அன்பியாக்கள் மற்றும் வலிமார்களது கப்ரு ஷரீபின் அருகே துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன." 

📚 இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ, ஸியாரு அலாமின்நுபலா ,பாகம் 17,பக்கம் 77
இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது கூற்றின் படி ஹதீதுகளை ஸஹீஹ்,ளயீப்,மவ்தூ என்பதை ஏற்றுக் கொள்ளும் வஹாபிய கொள்கைவாதிகள்,நபிமார்கள் ,வலிமார்களது கப்ருகள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் தமது சிந்தையில் கொண்டு ஷிர்க் ,பத்வா வழங்கத் தயாரா ? என்பதை விளக்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...