🌹வான்மறை புகழும் திங்கள் நபி ﷺ அவர்களது ஸலவாத்தின் சிறப்புகள் 🌹
உம்மத்திற்கு உதவும் ஏந்தல் நபி ﷺ
ஹழ்ரத் ஸெய்யிதினா இமாம் ஸுப்யானுஸ் ஸவ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 161) அவர்கள் நவின்றார்கள்,
" நான் ஒரு நாள் வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் ,ஒரு இளைஞன் தான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடிக்கும் ஸலவாத்து கூறிய வண்ணம் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன்.
நான் அவ்விளைஞனிடம் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் மீது இவ்வாறு பேணுதலுடன் ஸலவாத் ஓதுவதன் காரணத்தை கேட்ட பொழுது ,அந்த இளைஞர் கூறினார் , 'நான் எனது தாயாருடன் ஹஜ்ஜுக்கு சென்ற பொழுது,அவர்களுக்கு அங்கு மவ்த் ஏற்பட்டுவிட்டது.எனது தாயாரின் முகம் கருத்து விட்டது,மற்றும் அவர்களது வயிற்றுப்பகுதி வீங்கியது. பெரும் பாவம் காரணமாக இவ்வாறு நிகழ்ந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.
மனம் வருந்தி நான் அல்லாஹ் سبحانه و تعالى விடம் கையேந்தி மன்னிப்பு கோரினேன்.அப்போது வானில் மேகத்தில் இருந்து ஒருவர் வெளியானார்கள்.அன்னார் தமது புனிதமிகு கரங்களால் எனது தாயாரின் முகத்தில் சுற்றிட எனது தாயாரின் கருத்த முகம் மாறி ஜொலிக்கத் துவங்கியது.அவ்வாறே எனது தாயாரின் வயிற்றின் மேலும் சுற்றிட அதன் வீக்கம் முழுமையாக மறைந்து போயிற்று.
நான் அவர்களிடம்,எனது தாயாருக்கும் ,எனக்கும் உண்டான வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றிய தாங்கள் யார் ? என்று வினவினேன்.
அன்னார் ,நான் உனது நபி முஹம்மது முஸ்தபா ﷺ என்று நவின்றார்கள். உடன் ,நான் யா ரஸூல்லல்லாஹ் ! எனக்கு ஏதேனும் வஸியத் செய்திடுங்கள் என்று வேண்டி விரும்பினேன்.மறுவிலா முழுமதி எம்மான் நாயகம் ﷺ அவர்கள் , ' ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் பொழுதும் என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் ஸலாவத் உரைப்பீராக " என்று கூறினார்கள்.
📚 மஸாலிக் அல்ஹன்பா அலா மஷரஹ் அஸ்ஸலாத் அல் முஸ்தபா ﷺ , இமாம் கஸ்த்தலானி رضي الله عنه ,பக்கம் 164-165