ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்திய துணைகண்டத்தில் ஹதீஸ் கலையை பரப்பிய முன்னோடி ஆவார்.அன்னார் ஹிஜ்ரி 958ல் தில்லியில் 11 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்.அவர்களது மறைவு ஹிஜ்ரி 1052 ஆம் ஆண்டு.
தமது தகப்பனார் ஷெய்கு ஸைபுத்தீன் துர்க் புகாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஆரம்ப இஸ்லாமிய கல்வியை கற்றனர்.தமது 12 மற்றும் 13வது வயதில் "ஷரஹ் ஷம்ஷியாஹ்" ,"ஷரஹ் அகாயித்" ஆகிய நூற்களையும்,15 மற்றும் 16 வது வயதில் "முக்தஸர்" ,"முதவ்வல்" ஆகிய நூற்களை கற்றுத் தேர்ந்தார்கள்.
📚 அஷியதுல் லம்ஆத் ,பக்கம் 71.
ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ரிவாயத்,திராயத் மற்றும் ஜர்ஹ் வதஃதீல் கலைகளில் தலைசிறந்து விளங்கினர்.புனித மக்கா ஷரீபிற்கு 996 ஹிஜ்ரி ஹஜ் பயணம் மேற்கொண்டு அங்கு சில காலம் தங் கி கல்வி பயின்று,ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் முத்தகி முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் 'இர்ஷாத்' ,'ஸுலூக்' உடைய பாடங்களை கற்றனர்.
இஸ்லாமிய உலூம்களில் தலைசிறந்த விளங்கி ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள்,குறிப்பாக ஹதீதுக் கலையில் விற்பன்னராக விளங்கினார்கள். 116 நூற்களை எழதியுள்ள அன்னார்,ஹதீதுக் கலையில் 13 நூற்களை எழுதியுள்ளார்கள்.'மிஷ்காத் ஷரீபின்' அரபி விளக்கவுரை ,10 பாகங்களாக 'லம்ஆதுத் தன்கீஹ்' என்றும்,பார்ஸி மொழியில் 'அஷியத்துல் லம்ஆத்' , 4 பாகங்களாக எழுதியுள்ளார்கள்.
மீலாத் குறித்த அன்னாரது பதிவுகள் :
பெருமானார் ﷺ அவர்களது ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பான " மா ஸபத மினஸ் ஸுன்னா" என்ற நூலில் , ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " ரபீயுல் அவ்வல் மாதம்தோறும் முஸ்லிம்கள் எப்பொழுதும் மீலாத் ஷரீப் கொண்டாடி உள்ளனர்.பகல்,இரவுகளில் ஸதகா செய்து பெரும் ஆர்வமுடன் , நன்றி செலுத்துவர்.முஸ்லிம்களின் பொதுவான பழக்கம் கண்மணி நாயகம் ﷺ அவர்களது பிறப்பின் பொழுது நிகழ்ந்த விசேஷமான சம்பவங்களை அவர்கள் குறிப்பாக பிரசங்கம் செய்வர் "
📚மா ஸபத மினஸ் ஸுன்னா, பக்கம் 82,கைய்யூமி பதிப்பகம்,கான்பூர்.
ஷெய்கு அப்துல் ஹக் முஹத்தித் திஹல்வி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் வழிமுறை மவ்லித் ஷரீப் ஓதுவதும் , பெருமானாரின் பிறப்பு பற்றிய சம்பங்களின் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதும் ஆகும் .
அன்னார் கூறுகின்றார்கள் , " யா அல்லாஹ் ! உன்னுடைய மேலான திருச்சன்னிதானம் முன் சமர்ப்பிக்கும் அளவு என்னுடைய எந்த அமலுக்கும் மதிப்பில்லை . என்னுடைய எல்லா அமல்களிலும் ஏதோ சிறு குறைகள் ஏற்பட்டிருக்கும் ,மேலும் அந்த அமல்களில் என்னுடைய நிய்யத்தும் தொடர்புகொண்டிருக்கும் . எனினும் என்னுடைய ஒரு அமல் நன்மையானதும் ,கொளரவம் பொருந்தியதும் ஆகும் . அது என்னவெனில் மீலாது சபைகளில் நான் நின்று கொண்டு மிக்க பணிவுடனும்,மிகுந்த நேசத்துடனும் உன்னுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தும் ,ஸலாமும் கூறுகின்றேன் . "
📚 அக்பாருள் அக்யார் ,பக்கம் 264.
அன்னாரது காலம் முகலாய அரசர் ஷாஜகானின் காலமாகும். அன்னாரது கொள்கைகள் ,பல்வேறு நவீன கால இயக்கங்கள் ( தேவ்பந்தி தப்லீக் ஜமாத், அஹ்லே ஹதீஸ்,ஜமாத்தே இஸ்லாமி , ஸலபி வஹாபி ) தோன்றுவதற்கு முந்திய அக்கால முஸ்லிம் உம்மத்தின் நடைமுறைகளை தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றது. ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ தமது 94 வது ரபீயுல் அவ்வல் பிறை 21 அன்று ,ஹிஜ்ரி 1052 ல் வபாத்தானார்கள்.அன்னாரது மக்பரா மெஹ்ரவ்லி,தில்லியில் உள்ளது .