அண்ணல் நபி ﷺ அவர்களது ஜியாரத் :
மதீனத்து வேந்தர்,ஈருலக இரட்சகர்,ஷபீயுல் முத்னிபீன் முஹம்மது முஸ்தபா ﷺ அவர்கள் இப்பூவுலகை விட்டும் மறைந்த பின்னர், 'ஆஷிகீன்கின் நாயகம்' நாயகத் தோழர் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் தன் ஹபீப் முஸ்தபா ﷺ ஆற்றொன்னா பிரிவால் ஏங்கி மதீனாவின் ஒவ்வொரு பகுதியும் அண்ணல் நபி ﷺ அவர்களை நினைவூட்டுவதால், மதீனத்துல் முனவ்வராவை விட்டு ,ஷாம் தேசம் சென்று விடுகின்றார்கள்.
ஒருபொழுது ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்கள் ஷாம் தேசத்தில் இருக்கும் வேலையில்,அருமை நபி நாயகம் ﷺ அவர்கள் தமது தோழரின் கனவில் தோன்றினார்கள். பின்னர் நாயகம் ﷺ அவர்கள் ஸெய்யிதினா பிலால் رضي الله عنه அவர்களிடம் , " பிலால் , இது எவ்வாறான அநீதம் ? எவ்வாறான சங்கடம் ? என்னை விட்டும் விலகிச் சென்று விட்டீரே ? "
என்னை வந்து சந்திப்பதற்கான நேரம் வரவில்லையா ? " என்று வினவினார்கள்.
தமது நாயகத்தின் கேள்விதனைக் கேட்ட ஸெய்யிதினா பிலால் رضي الله عنه துக்கம் மேலிட விழித்தெழுந்தார்கள். மதீனத்து வேந்தர் ﷺ அவர்களது மாட்சிமைமிகு தர்பார் நோக்கி விரைந்து பயணப்படலானார்கள்.
மதீனா முனவ்வரா வந்தடைந்து ,மன்னர் மஹ்மூதர் ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழாவிற்குச் சென்று ஆரத்தழுவி ,தேம்பி தேம்பி அழுதார்கள்.இன்னும் தமது முகத்தை புனிதமிகும் ரவ்ழா ஷரீபில் தேய்த்து அழுதார்கள்.
இமாம் தகீயுத்தீன் ஸுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ, ஷிபாஉஸ் ஸிகாம் பீ ஸியாரத்தி ஹைரில் அனாம் ,பக்கம் 185
இந்த ஹதீதை அநேக முஹத்திஸீன்கள் தமது நால்களில் எழுதியுள்ளனர்.இதனை ' ஹஸன்' என்றும் கூறியுள்ளனர்.
இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக் திமிஷ்க்,பாகம் 7,பக்கம் 137.இமாம் இப்னு அஸாகிர் இந்த ரிவாயத்தின் ஸனதும் நன்று என்று கூறியுள்ளார்கள்.
இமாம் இப்னு அதீர் رَحِمَهُ ٱللَّٰهُ, உஸுதுல் காபா,பாகம் 1,பக்கம் 308.
இமாம் நவவி رَحِمَهُ ٱللَّٰهُ,தஹ்தீப் அல் அஸ்மா ,பாகம் 1,பக்கம் 136.
இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,தாரீக்குல் இஸ்லாம்,பாகம் 17,பக்கம் 66.
இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,ஸியார் அஃலம் அந்நுபலா,பாகம் 1,பக்கம் 358.
ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ,மதாரிஜுந் நுபுவ்வா,பாகம் 2,பக்கம் 583.
காழீ ஷவ்கானி,நைல் அல் அவ்தார்,பாகம் 4,பக்கம் 180.இதில் காழீ ஷவ்கானி இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ரிவாயத்தை ஸஹீஹான ஸனதுடன் நகல் எடுத்துள்ளார்கள் என்று கூறுகின்றார்.